Tamil Stories

கோபால் ஸ்நாக்ஸ்

குஜராத்தில் இருந்து ஒரு ஸ்நாக்ஸ் சாம்ராஜிஜ்யத்தையே நிலை நாட்டிய பிபின் ஹத்வானியின் ‘கோபால் ஸ்நாக்ஸ்’ வெற்றிக் கதை.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், சில மாற்றங்கள் அல்லது ஒரு சிலரது வாழ்க்கையில் ஏற்படும் ஒரே மாற்றம் ஒருவரை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. அதுதான் பிபின் ஹத்வானியின் ‘கோபால் ஸ்நாக்ஸ்’ வெற்றிக் கதையும்.

1994-ம் ஆண்டு குஜராத்தின் பரபரப்பான நகரமான ராஜ்கோட்டில், பிபின் ஹத்வானி தனது தந்தையின் மதிப்புமிக்க அறிவுரை ஒன்றைக் கடைப்பிடித்தார். அது:

“நீங்கள் அதிகமாக சம்பாதிக்க விரும்பினால், உங்கள் தொழிலை விரிவுபடுத்துங்கள், விலையை உயர்த்த வேண்டாம்,” என்பதே.

இந்த வார்த்தைகள் குஜராத்தில் பரபரப்பாக மாறும் ஒரு ஸ்நாக்ஸ் சாம்ராஜ்ஜியத்துக்கே அடித்தளமாக இருக்கப் போகிறது என்று யார்தான் கற்பனை செய்ய முடியும்?

சிறுவயதில், ஹத்வானி தனது தந்தை நடத்தி வந்த தின்பண்டங்கள் விற்பனை வணிகத்தால் ஈர்க்கப்பட்டார். அங்கு பாரம்பரிய குஜராத்திய தின்பண்டங்கள் கிராமம் கிராமமாக விற்கப்பட்டு வந்தன. இந்த உத்வேகத்தின் தீப்பொறி இளம் ஹத்வானியை 1990-இல் ராஜ்கோட்டிற்கு அழைத்துச் சென்றது. அவரது தந்தைக்கு மகனுடைய திறமைகள் மீது முழு நம்பிக்கை இல்லை.

தந்தையால் வழங்கப்பட்ட வெறும் ரூ.4,500 பணத்துடன் அவரது சொந்த முயற்சியை நிறுவும் கனவு தொடங்கியது. ஆரம்பத்தில் அவர் ஓர் உறவினருடன் கூட்டு சேர்ந்து உள்ளூர் தின்பண்ட பிராண்டை அறிமுகப்படுத்தினார். அது விரைவாக பிரசித்தி பெற்றது. இருப்பினும், வாணிபக் கொள்கைகளில் இருவருக்கும் உள்ள வேறுபாடுகள் விரைவில் கூட்டாளிகளிடையே பிளவை ஏற்படுத்தியது.

வீட்டில் உதயமான நிறுவனம்

ஆனால், ஹத்வானி மனம் தளரவில்லை. 1994-ஆம் ஆண்டில் மனைவி தாக்‌ஷாவுடன் சேர்ந்து கையில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாயுடன் ‘கோபால் ஸ்நாக்ஸ்’ என்ற வணிகத்தைத் தொடங்கினார். தரம் மற்றும் நம்பகத்தன்மையில் கவனம் செலுத்தி, தங்கள் வீட்டிலிருந்தே இந்த முயற்சியில் இறங்கினார்கள். ஹத்வானியைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது உற்பத்தி அளவைப் பற்றியது மட்டுமல்ல; பாரம்பரிய குஜராத்திய நொறுக்குத்தீனி ருசியின் வேர்கள் மற்றும் நெறிமுறைகளைப் பராமரிப்பதாகும். அவர்களின் அர்ப்பணிப்பு பலனளித்தது. இவர்கள் தயாரிப்புகளுக்கான கிராக்கியும் அதிகரித்தது.

இருப்பினும், வெற்றி நேர்கோட்டில் இல்லை. நகரத்திற்கு வெளியே உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான ஒரு லட்சிய நடவடிக்கையானது நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுத்தது. 2008 வாக்கில், தன் தவறான கணிப்பை உணர்ந்து, ஹத்வானி மீண்டும் நகரத்திற்கு மாறினார். ‘கோபால் ஸ்நாக்ஸ்’ என்று மறுபெயரிட்டு, ஒரு புதிய ஆலையை அமைப்பதற்கு குறிப்பிடத்தக்க கடனை வாங்கினார்.

இதன்மூலம் வர்த்தகம் விரிவடைந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி கண்டது.

2022-இல், ‘கோபால் ஸ்நாக்ஸ்’ வர்த்தகம் ரூ.1,306 கோடியைத் தொட்டது. அவர்களின் தயாரிப்பு வரம்பு மூன்று மாநிலங்களில் ஏழு ஆலைகளாக விரிவடைந்து, 60-க்கும் மேற்பட்ட தனித்துவமான தின்பண்டங்களை வழங்குகிறது. அத்துடன், 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோபால் ஸ்நாக்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ரூ.450 கோடி வருவாய்!

தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத்தீனி சந்தை அவ்வளவு எளிதானதல்ல. மிகப் பெரிய சந்தை, போட்டிகளும் சவால்களும் மிகுந்த சந்தையாகும். வறுவல் அதாவது சிப்ஸ் என்பது பெரிய அளவில் சந்தையை ஆதிக்கம் செலுத்தி வந்தது. பெரிய நிறுவனங்களும் தின்பண்டங்கள் சந்தையின் வாங்கும் ஆற்றலைக் கணக்கில் கொண்டு களத்தில் தங்கள் தயாரிப்புகளுடன் குதித்தபோது ‘கோபால் ஸ்நாக்ஸ்’ பிரச்சனைகளைச் சந்தித்தது. ஹத்வானியும் சிப்ஸ் தயாரிப்பில் இறங்கினார். இன்று கோபால் ஸ்நாக்ஸின் விற்பனையில் சிப்ஸ் 7% பங்களிப்பு செய்கின்றது.

வல்லுநர்கள் வர்த்தகத்தை பலதரப்பிலும் திருப்புவதற்கு எதிராக எச்சரிக்கின்றனர். ஆனால், ஹத்வானி வணிக விரிவாக்கம் குறித்த தனது தந்தையின் ஆலோசனையை உறுதியாக நம்புகிறார். அவர் தந்தையின் அறிவுரையை நீர்த்துப் போனதாகக் கருதாமல் வர்த்தகத்தின் பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறார்.

‘கோபால் ஸ்நாக்ஸ்’ அருகில் உள்ள கிராமங்களில் ரூ.1-க்கு விற்கப்படும் மிட்டாய் பாக்கெட்டுகளில் தொடங்கி, விளம்பரத்திற்காக செலவழிக்காமல் ஆண்டுக்கு ரூ.450 கோடி வருவாய் ஈட்டும் ஆற்றல் மையமாக மாறிய இந்தக் கதை, ஹத்வானியின் தொலைநோக்கு பார்வை, தோல்வியைக் கண்டு பின்வாங்காத மீட்டெழுச்சி மற்றும் உறுதி, மற்றும் நம்பகத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவு என்பதுதான் முக்கியமானது.

founderstorys

Recent Posts

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

1 month ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

1 month ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago

Byju’s-Learning App

Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…

2 months ago

Standup-Comedian-Disabled-Shwetha

நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…

2 months ago