பீகாரைச் சேர்ந்த அமீத் சுபோத், 2014 -15ல் பெங்களூருவில் யுவர்ஸ்டோரி மீடியாவில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார். இந்த காலத்தில் ‘குல்லுஸ் கிட்சன்’ எனும் நிறுவனத்தை நடத்தி வந்த குல்ஷன் ஐயரை சந்தித்தார். தொடர் சந்திப்புகள் அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பை உண்டாக்கியது.
குலஷனின் குடும்பம், தமிழ்நாட்டில் பாக்கு மட்டை தட்டுகளை உற்பத்தி செய்து வந்தது. இந்த சுற்றுச்சூழல் நட்பான தட்டுகளுக்கு மேற்குப் பகுதியில் நல்ல தேவை இருப்பதை அவர் உணர்ந்தார். எனவே, அவர் நண்பர் சுபோத்தை தனது ’அர்பு எண்டர்பிரைசஸ்’ (Arbhu Enterprises) வர்த்தகத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். ஏற்றுமதி சார்ந்த வர்த்தகமாக இதை மாற்ற விரும்பினார்.
சுபோத், டால்வியூ நிறுவனத்தில் விற்பனை மேலாளர் பதவியை விட்டு விலகி, அர்பு நிறுவனத்தில் இணை நிறுவனராக 2020ல் இணைந்தார்.
குல்ஷனின் தந்தை அரவிந்த் குமார், 30 ஆண்டுகள் அரசுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றியவரும் இணை நிறுவனராக இணைந்தார். அர்பு எண்டர்பிரைசஸ் 2018ல் பதிவு செய்யப்பட்டிருந்தது. பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் பாக்கு மட்டை தட்டுகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பான பொருட்களை உற்பத்தி செய்கிறது.
பாக்கு மட்டை தட்டுகள் பிளாஸ்டிக்கிற்கான சுற்றுச்சூழல் மாற்றாக அறியப்படுகின்றன. 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்டதால், உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இணை நிறுவனர்களாக மாறிய நண்பர்கள், அர்பு நிறுவனத்தை வெற்றிகரமான வர்த்தகமாக மாற்றி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 20 மில்லியனுக்கு மேல் பாக்கு மட்டை தட்டுகளை வழங்கியுள்ளனர். இந்த நிதியாண்டு 5 மில்லியன் தட்டுகளை அனுப்பி வைத்துள்ளது.
பி2பி வர்த்தக மாதிரியில் செயல்படும் நிறுவனம், 2019-20 ல் ரூ.35 லட்சம் வருவாய் ஈட்டியது. அடுத்த ஆண்டுகளில் இது ரூ.1.5 கோடி மற்றும் ரூ.5 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் (2023) வருவாய் ரூ.7.5 கோடியாக உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பாக்கு மட்டை தட்டுகளை உற்பத்தி செய்யும் கிராமங்களை கண்டறிந்துள்ளதாக சுபோத் கூறுகிறார். இங்குள்ள உற்பத்தி மையங்கள் சிறிய அளவில், கைகளால் இயக்கப்படும் இயந்திரங்கள் கொண்டு செயல்படுகின்றன.
“ஒரு சில இடங்களில் இந்த இயந்திரங்களை அரசு வேலைவாய்ப்பு நோக்கில் வழங்குகிறது. இதன் மூலம் மக்கள் உற்பத்தி மையங்கள் அமைக்கின்றனர்,” என்கிறார்.
இந்த மையங்களில் இடைவெளிகளைக் கவனித்த நிறுவனர்கள், செயல்திறன், உற்பத்தி திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வாய்ப்புகளை உணர்ந்து, தர சோதனையை அறிமுகம் செய்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, இயந்திரங்களையும் மேம்படுத்தினர்.
“பொருட்களை வாங்குபவர்களாக மட்டும் இல்லாமல், அர்பு நிறுவனம் இந்த மையங்களில் முதலீடு செய்தது. தமிழ்நாட்டில் துவக்கத்தில் மூன்று ஆலைகளில் முதலீடு செய்து, இப்போது எங்களுக்கான உற்பத்தி செய்யும், நான்கு ஆலைகள், மற்றும் சிறிய தொகுப்புகளைப் பெற்றுள்ளோம்,” என்கிறார் சுபோத்.
கர்நாடகவின் தும்கூர், பத்ராவதி மற்றும் தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், கோவையில் இந்த ஆலைகள் அமைந்துள்ளன. மேலும், திரிபுராவில் மூங்கில் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யவும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. உத்திரபிரதேசத்தில் உற்பத்தி ஆலைகளுடன் இணைந்து காகித பொருட்களையும், குஜராத்தில் கருப்பு சார்ந்த பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.
சென்னையில் உள்ள வேர்ஹவுசில் பேக்கேஜ் செய்யப்படுகிறது. இந்த ஆலைகளில் நிறுவனம் துவக்க முதலீடாக ரூ.5 லட்சம் முதலீடு செய்துள்ளது. மூலப்பொருட்கள் கொள்முதல், இயந்திரங்கள் மேம்பாட்டிற்கு இது வழி செய்கிறது. ஆலைகளின் செயல் மூலதனாமாகவும் அமைகிறது. பல்வேறு அளவு மற்றும் வடிவமைப்புகளில் தட்டுகளை தயாரிக்கவும் மோல்ட்களில் முதலீடு செய்துள்ளது.
“இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆதரவும் கூட்டு முயற்சியில் உதவியுள்ளது. பயிலறங்குகளில் எங்களுடன் இணைந்து செயல்பட விரும்பும் பார்ட்னர்களை சந்தித்தோம். அவர்கள் முத்ரா யோஜானா மூலம் இயந்திரங்கள் பெற உதவினோம்,” என்கிறார்.
மையமற்ற உற்பத்தி முறையில் ஒரு இயந்திரம் நாள் ஒன்றுக்கு 200 தட்டுகள் தயார் செய்ய முடிய்ம் என்கிறார். மாதம் 6000 தட்டுகள் தயாரிக்கப்படும். எனினும், தீவிரமான தர சோதனைகளுக்குப் பிறகு இது 4,000 தட்டுகளாக குறைகிறது.
அர்பு ஏற்றுமதி செய்யும் ஒரு கண்டெய்னர் 5 லட்சம் தட்டுகள் கொள்ளலவு கொண்டது எனும் நிலையில் எந்த ஒரு தனி நிறுவனத்தாலும் இந்த அளவு உற்பத்தி செய்ய முடியாது,
“நாங்கள் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஆர்டர் பெற்று பலரிடம் இருந்து கொள்முதல் செய்வதால் இந்த முறை இடர் கொண்டுள்ளது. இதை எதிர்கொள்ள ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமான தரக் கட்டுப்பாடு சோதனையை கொண்டுள்ளோம். கொள்முதல் துவங்கி பேக்கேஜின் வரை தரம் முக்கியமாகிறது,” என்கிறார்.
இந்த பொருட்கள், மாசு, சேதம், வண்ணம், தடிமன் உள்ளிட்ட அம்சங்களுக்காக சோதிக்கப்படுகின்றன. பணியாளர்களும் குறைகளைக் கண்டறிய பயிற்சி பெற்றுள்ளனர். இந்த உற்பத்தி செயல்முறை ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தரப்பில் சோதனையும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேக்னஸ் மற்றும் இகோசோல் ஆகியவை இந்தப் பிரிவில் போட்டியாக உள்ளன. குஜராத்தின் பேகே இம்பிளக்ஸ் நிறுவனமும் போட்டியாளர் தான்.
“நாங்கள் போட்டியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். சில நேரங்களில் அவர்களுக்கு கொள்முதல் அளிக்கிறோம், சில நேரங்களில் அவர்களிடம் இருந்து பெறுகிறோம்,” என்கிறார்.
துவக்கத்தில் இந்த குழு நேரடி ஏற்றுமதியில் ஈடுபடாமல், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து செயல்பட்டனர். எனினும், பாக்கு மட்டை தட்டுகளுக்கான தேவையை கண்ட போது இது முழு நேர வர்த்தகமாக மாறும் என புரிந்து கொண்டனர். எனினும், இதில் சவால்கள் இருந்தன. சர்வதேச வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை பெறுவது முதல் சவாலாக அமைந்தது என்கிறார்.
நிறுவனம் உற்பத்தி செயல்முறையை விளக்கும் வீடியோவை தயாரித்தது. இது நிறுவனம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. பிடிபிசி, பாம் நகி, நேச்சுரலி சிக், ஹோம்சாட் உள்ளிட்ட பிராண்ட்களுக்கு சப்ளை செய்கிறது. பிடிபிசி பாக்கு மட்டை தட்டுகள் அமேசானில் 4.7 மதிப்பீடு பெற்றுள்ளன.
அர்புவின் சப்ளை சைன் அமெரிக்காவிலும் விரிவாகியுள்ளது. அங்கு வேர்ஹவுஸ் உள்ளது. 90 சதவீத விற்பனைகள் அமெரிக்காவில் இருந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கான சுங்க அனுமதி பெறுகிறது.
“ஆர்டர் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தி, ஷிப்பிங் செலவுகளை குறைத்து வாடிக்கையாளர்களுக்கான செலவையும் குறைக்கிறது. மற்ற வர்த்தகங்களுக்கான மார்க்கெட்டிங் வசதியும் அளிக்கிறோம்,”என்கிறார்.
பாக்கு மட்டை தட்டுகள் தவிர, மூங்கில் பிரெஷ், ஸ்டிரா, வேம்பு பொருட்கள், தேங்காய் கோப்பைகள் உள்ளிட்டவற்றிலும் விரிவாக்கம் செய்துள்ளது. இவையும் தற்போது ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிறுவனம் 18 முழுநேர ஊழியர்கள் உள்ளனர். பல்வேறு உற்பத்தி ஆலைகளில் 500 பேர் உள்ளனர்.
வரும் ஆண்டுகளில் நிறுவனம் தனது பொருட்கள் விரிவாக்கத்தில் கவனம் செலுத்த உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சுற்றுச்சூழல் பொருட்களுக்காக எல்லைகள் கடந்த பி2பி இகாமர்ஸ் மேடையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…