Tamil Stories

பிளாஸ்டிக்கு மாற்றாக உலர் தென்னை ஓலைகளில் இருந்து ஸ்டிரா தயாரிக்கும் நிறுவனம்!

பாணங்களை பருகுவதற்கான ஸ்டிராவை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில கிராமப்புற பெண்களை கொண்டு நிறுவனம் தயாரிக்கிறது. செலவை குறைத்து, உற்பத்தியை மேம்படுத்த நிறுவனம், மையம் சார்ந்த விநியோக முறையை பின்பற்றுகிறது.
close
5 ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழக ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் சாஜி வர்கீஸ், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த தென்னை ஓலையை கவனித்தார்.

அதற்கு முந்தைய தினம் தான், அவர் நெதர்லாந்து நாட்டு விருந்தினர் ஒருவருடன் ஒரு முறை பயன்பாடு பிளாஸ்டிக்கின் தாக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். எனவே, காய்ந்த தென்னை ஓலையை பார்த்ததும், அவருக்கு உண்டான எண்ணமே, ’சன்பேர்ட் ஸ்டிராஸ்’ (Sunbird Straws) நிறுவனமாக உருவானது.

பலருக்கும் பயனில்லாததாக தோன்றக்கூடிய காய்ந்த தென்னை ஓலை, சாஜிக்கு ஒரு வாய்ப்பாக தோன்றியது. அவர் எப்போதும் சிந்தித்து வரும் வகையில், சுற்றுச்சூழல் மீது நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், பிளாஸ்டிக் ஸ்டிராவுக்கு பதிலாக, சுற்றுச்சூழல் நட்பான ஸ்டிராவை உருவாக்க இது பயன்படும் என நினைத்தார்.

ஸ்டிரா
தென்னை ஓலை ஸ்டிரா
இதனையடுத்து, தென்னை ஓலைகள் கொண்டு சோதனைகளை மேற்கொள்ளத்துவங்கினார். ஓலைகள் மீது பளபளப்பான தன்மை உண்டாவதை கவனித்தார். இயற்கையாக உலர்ந்த ஓலைகளில் மெழுகு இருப்பதையும், ஆவியில் மேலே வருவதையும் கண்டறிந்தார். இதன் மூலம் உருவாகும் ஸ்டிராக்களுக்கு மெழுகு பூஞ்சைக்கு எதிரான மற்றும் ஹைட்ரோபோபிக் தன்மையை அளிக்கும் என நினைத்தார். பருகுவதற்கான ஸ்டிராக்களில் இது முக்கியம்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் பேராசிரியர், இயற்கையாக உலர்ந்த தென்னை ஓலைகளில் இருந்து ஸ்டிராக்களை தயாரிக்கும் சன்பேர்ட் ஸ்டிராஸ் நிறுவனத்தை துவக்கினார்.

சன்பேர்ட் நிறுவனத்தின் மையம் சார்ந்த விநியோக முறை (hub-and-spoke) உற்பத்தி வீணாவதை குறைப்பதாக சாஜி கூறிகிறார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தென்னை பண்ணைகள் அதிகம் உள்ள கிராமப்புறங்களில் தயாரிப்புக்கு முந்தைய மையங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் தூத்துக்குடி, நாகர்கோயில், மதுரை, கேரளாவின் காசர்கோடு மற்றும் கர்நாடகாவின் பன்னூர், மெல்லஹல்லியில் இவை அமைந்துள்ளன.

இங்குள்ள பெண்கள் தென்னை ஓலைகளை சேகரித்து அவற்றில் இருந்து மையப்பகுதியை அகற்றுகின்றனர். அதன் பிறகு, ஓலைகள் சுத்தம் செய்யப்பட்டு, சரியான அகலத்தில் வெட்டப்படுகின்றன. பின்னர், அவை மொத்தமாக கட்டப்பட்டு, தூத்துக்குடி, காசர்கோடு மற்றும் பன்னூரில் உள்ள உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

“பதப்படுத்தப்பட்ட ஓலைகள் மட்டும் அனுப்பி வைக்கப்படுவது லாஜிஸ்க்டிக்ஸ் செலவை குறைக்கிறது,” என்கிறார் சாஜி.
ஸ்பைரல் மற்றும் நீண்ட ரோலிங் இயந்திரங்கள் கொண்டு ஸ்டிராக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்னர், பெங்களூரூ ஆலையில் இறுதி தயாரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. பைனல் கட்டிங், சுத்தம் செய்வது, யுவி தன்மை, தரம் சோதனை மற்றும் பேக்கிங் இங்கு நிகழ்கின்றன.

தொழில்நுட்ப புதுமையாக்கம் தயாரிப்பு செயல்முறையை மேம்படுத்தியிருப்பதாக சாஜி கூறுகிறார். 1.5 விநாடிகளில் ஒரு ஸ்டிரா செய்யும் முறை உருவாக்கப்பட்டிகிறது. இதற்கு முன் ஒரு ஸ்டிரா செய்ய 45 விநாடிகள் தேவைப்பட்டன.
தற்போது நிறுவனம் நாள் ஒன்றுக்கு 6,000 ஸ்டிராக்கள் உற்பத்தி செய்கிறது. மாதந்தோறும் இரண்டு லட்சம் ஸ்டிராக்கள் வரை தயாராகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் நிறுவனம் மாதம் 15 லட்சம் ஸ்டிரா உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. தயாரிப்புக்கு முந்தைய மற்றும் தயாரிப்பு நிலையில் 86 பெண்கள் பணியில் இருப்பதாக சாஜி கூறுகிறார்.

ஸ்டிரா
பொருட்கள் ரகங்கள்
ஒற்றை அடுக்கு ஸ்டிராவில் துவங்கிய நிலையில் தற்போது, பல அடுக்கு ஸ்டிராக்களை தயாரிப்பதாக சாஜி கூறுகிறார். இவை மிகவும் மேம்பட்டவை மற்றும் செயல்திறன் மிக்கவை என்கிறார்.

3 முதல் 12 மிமீ கொண்ட பல நீளங்களில் எட்டு வகை ஸ்டிராக்கள் உற்பத்தி ஆகின்றன. குளிர்பாணங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடிய இந்த ஸ்டிராக்கள் 9 மாத ஆயுள் கொண்டவை.

“இவை இயற்கையானவை மற்றும் ரசாயனம் இல்லாதவை. எனவே, ஓலைகள் மக்கும் அதே நேர அளவில் இவையும் மண்ணில் கலக்கின்றன,” என இதன் மக்கும் தன்மை பற்றி சாஜி கூறுகிறார்.
மேலும், உலர் தென்னை ஓலைகளில் இருந்து செய்யப்பட்ட பேனாக்களையும் நிறுவனம் விற்பனை செய்கிறது. இவை 96 சதவீதம் தென்னை ஓலை மற்றும் 4 சதவீதம் பிளாஸ்டிக் கொண்டவை.

சன்பிராண்ட் ஸ்டிரா மற்றும் சந்தையில் உள்ள மற்ற சுற்றுச்சூழல் நட்பான ஸ்டிராக்களை ஒப்பிடும் சாஜி,

“காகிதங்களை உருவாக்க மரங்களை வெட்டுவதால், காகித ஸ்டிராக்கள் முழுவதும் சுற்றுச்சூழல் நட்பானவை அல்ல. அவை ரசாயனம் கொண்டிருப்பதால் விரைவில் பாழாகிவிடும்,” என்கிறார்.
“முறையாக பதப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட மூங்கில் ஸ்டிரா ரூ.20 முதல் ரூ.30 வரை ஆகலாம். ரூ.120 வரை போகலாம். வைக்கோல் ஸ்டிரா சுற்றளவு வரம்பு கொண்டது. ஸ்டீல் ஸ்டிரா விலை மிக்கவை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தேவைப்படுபவை,” என்கிறார்.

சன்பேர்ட் ஸ்டிராக்கள் அதன் அளவிற்கு ஏற்ப ரூ.1.70 முதல் ரூ.250 ஆகிறது. ஸ்டிராவுக்கான உற்பத்தி செலவு ரூ.120 என்கிறார்.

ஸ்டிரா
சவால்கள்
ஸ்டார்ட் அப் சூழலை புரிந்து கொள்வது சாஜிக்கு துவக்க நிலை சவாலாக இருந்தது. பின்னர், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் மூலம் இந்த புரிதல் உண்டானது.

தேவைக்கு ஏற்ப உற்பத்தி மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப மேம்பாடு இன்னொரு சவாலாக விளங்கியது. வேகமாக ஸ்டிரா உற்பத்தி செய்ய வழியை கண்டறிய வேண்டியிருந்தது.

பெருந்தொற்று காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளால் சோதனை செயல்பாடு மெதுவானது. எனினும் இரண்டாம் பொதுமுடக்கத்தில் தேவை அதிகரித்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சுகாதார எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்.

ஸ்டிரா
வளர்ச்சி
சன்பேர்ட் ஸ்டிராக்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்பனை ஆகின்றன. போர் சீசன்ஸ், Accor Group, Novotel, Ibis, மற்றும் சாய்டேஸ் ஆகிய வர்த்தக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும், அமெரிக்கா, கனடாவில் விநியோகிஸ்தர்களைக் கொண்டுள்ளது.

கம்பெனிகள் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் படி, நிறுவனம் 2021ம் ஆண்டில் ரூ.4.5 லட்சம் வருவாய் ஈட்டியது.
ஸ்விஸ்ரே, எச்.டி.எப்.சி, செல்கோ பவுண்டேஷன் மற்றும் நபார்ட் ஆகிய அமைப்புகளிடம் இருந்து நிறுவனம் ரூ.1 கோடி நிதி பெற்றுள்ளது.

எதிர்காலத் திட்டம்
நாட்டில் ஸ்டிரா சந்தை 8 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது எனக் கூறும் சாஜி, 2023ம் நிதியாண்டில் நிறுவனம் 5 மில்லியன் டாலர் பங்கை பெறத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தினமும் 10 லட்சம் ஸ்டிரா உற்பத்தி மற்றும் ஆயிரம் பெண்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என இலக்கு கொண்டிருப்பதாக கூறுகிறார் சாஜி. உலர் ஓலைகளில் இருந்து மேலும் பொருட்கள் தயாரிக்க மற்றும் வெளிநாட்டு கூட்டு முயற்சிகளையும் எதிர்நோக்கியுள்ளது.

ஆங்கிலத்தில்: நிகிதா பமேடா | தமிழில்: சைபர் சிம்மன்

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago