புனேவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி சுத்தமான, சுகாதாரமான அருகாமை கழிவறைகளை கண்டறிய உதவுகிறது.
உங்கள் வீட்டிற்குள் அல்லது வெளியே சுத்தமான கழிவறையை அணுகும் வசதி அடிப்படை மனித உரிமையாகக் கருதப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகத்திற்கு பிறகு, இந்தியாவில் கழிவறை சுகாதார செயல்முறை மேம்பட்டிருக்கிறது என்றாலும், மக்கள் இன்னமும் அவசர நிலையில் கூட பொது கழிவறைகளை பயன்படுத்த தயங்குகின்றனர்.
கழிவறைகள் அசுத்தமாக இருப்பது, கதவு தாழ் இல்லாமல் இருப்பது, தண்ணீர் வசதியின்மை உள்ளிட்ட பல அம்சங்கள் இதற்கான காரணங்களாக இருக்கலாம். ’டாய்லெட்சேவா’ (ToiletSeva) இதை தான் சீராக்க முயற்சிக்கிறது.
“இந்தியாவில் கழிவறைகளின் நிலை மாறாமல் இப்படியே இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர்,” என்கிறார் டாய்லெட்சேவா நிறுவனர் அமோல் பிகே.
’டாய்லெட் சேவா’ தனது ஆப் வாயிலாக, மக்கள் கழிவறைகளைக் கண்டறிந்து, பயன்படுத்த வழி செய்கிறது. தற்போது நாடு முழுவதும் 1,28,500 மேற்பட்ட கழிவறைகளை இந்த செயலியில் பட்டியலிட்டுள்ளது. இதுவரை, 3,235 முறை இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
“சுத்தமான கழிவறைகளை அணுகும் வசதி கொண்டிருப்பது அடிப்படை உரிமை என மக்களை உணர வைக்கிறோம்,” என்கிறார் அமோல்.
நகைக்கடை ஒன்றுக்கு சென்ற போது தான் அமோலுக்கு இந்த செயலிக்கான யோசனை உண்டானது. அங்கிருந்த கழிவறைக்கு சென்ற போது அது மோசமாக இருந்ததை கண்டு, கடைக்காரரிடம் புகார் தெரிவித்தார். பல நிறுவனங்கள் இந்த வசதியை அளித்தாலும், அவற்றை எப்படி பராமரிப்பது என அறிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்டார்.
வயதானதவர்கள் முதல் பயணிகள் வரை யாரும் ’டாய்லெட் சேவா’ செயலியை பயன்படுத்தி அருகாமையில் இருக்கும் கழிவறையை கண்டறியலாம். இந்த செயலியை இலசவமாக பயன்படுத்தலாம். ஹோட்டல்கள், பெட்ரோல் மையங்கள், கபேக்கள், பள்ளிகளில் உள்ள கழிவறைகள், தனியார் கட்டண கழிவறை மற்றும் பொது கழிவறைகளை இந்த செயலி பட்டியலிடுகிறது.
“கழிவறைகளுக்கு சான்றிதழ் அளிக்கும் வர்த்தகத்தில் நாங்கள் ஈடுபடவில்லை. இது மக்களுக்கானது என்பதால், அவர்களை இதற்காக சார்ந்திருக்கிறோம். அண்மை கருத்து மற்றும் லெவல் ஒன் தொடர்புகள் மூலம் மக்கள் மற்றவர்கள் விமர்சன கருத்துகளை அறியலாம்,” என்கிறார் அமோல்.
சுத்தம் தவிர, கதவுகள் நிலை, சோப் மற்றும் நாப்கின்கள் பற்றியும் இந்த செயலி தகவல் அளிக்கிறது.
“இந்த செயலியை வெற்றிகரமாக்குவதில் மக்கள் முக்கியப் பங்காற்றலாம். கழிவறைகளை பட்டியலிடுவது மற்றும் விமர்சனம் செய்வதன் மூலம் பங்களிக்கலாம். அதிகக் கழிவறைகள் பட்டியலிடப்படும் போது, மேலும் தேர்வு செய்ய பல வாய்ப்புகள் இருக்கும்,” என்கிறார் அமோல்.
டாய்லெட்சேவா ஹோஸ்டாக இருக்க விருப்பம் தெரிவித்து, மற்றவர்கள் பயன்பாட்டிற்காக உங்கள் கழிவறைகளை பட்டியலிடலாம். ஆங்கிலம், அல்லது இந்தியில் செயலியை பயன்படுத்தலாம். செயலி இலவசமானது என்பதால், இதில் பட்டியலிடப்படும் கழிவறைகளுக்கு கட்டணம் கிடையாது.
ஆங்கிலத்தில்: அபூர்வா.பி. | தமிழில்: சைபர் சிம்மன்
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…