Tamil Stories

100 most influential women in finance list

நிதித்துறையில் டாப் 100 செல்வாக்கான பெண்கள் பட்டியலில் உள்ள 5 இந்திய வம்சாவளிகள் யார்?

‘அமெரிக்க நிதித் துறையின் 100 செல்வாக்கு மிகுந்த பெண்கள்’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 நிர்வாகிகள் இடம்பெற்று சாதித்துள்ளனர்.

‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் துணை நிறுவனமான ‘பேர்ரன்’ஸ்’ இதழின் ஆண்டுதோறும் வெளியிடும் ‘அமெரிக்க நிதித் துறையின் 100 செல்வாக்கு மிகுந்த பெண்கள்’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 நிர்வாகிகள் இடம்பெற்று சாதித்துள்ளனர்.

நிதிச் சேவைகள் துறையில் சாதனைகளை புரிந்ததற்காகவும், இத்துறையின் சாதகமான எதிர்காலத்தை கட்டமைக்க உதவி வருவதற்காகவும் இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி சேவைகள், கார்ப்பரேட் உலகம், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகங்களில் தங்கள் ஆளுமையை நிரூபித்தவர்களையும், நம்பிக்கைக்குரிய தலைவர்களாக உருவெடுத்து வருபவர்களையும் கெளரவிக்கும் விதமாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் அனு ஐயங்கார், ஏரியல் இன்வெஸ்ட்மென்ட்டின் ரூபால் ஜெ.பன்சாலி, ஃப்ராங்க்ளின் டெம்ப்ளேடனின் சோனால் தேசாய், கோல்ட்மேன் சஷ்’சின் மீனா ஃப்ளின் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் சவிதா சுப்ரமணியம் ஆகிய 5 இந்திய வம்சாவளி பெண் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

5 இந்திய வம்சாவளிப் பெண்கள் பற்றி…

அனு ஐயங்கார்: 50 வயதைக் கடந்த இவர், ஜே.பி.மோர்கன் (J.P.Morgan) நிறுவனத்தில் ‘மெர்ஜர்ஸ் அண்ட் அக்யூசியேஷன்’ பிரிவில் 2020-ல் இருந்து இணைத் தலைவராக செயல்பட்டு வந்தவர். இந்தப் பிரிவுக்கு கடந்த ஜனவரி மாதம்தான் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

நிறுவன இணைப்பு, கையகப்படுத்துதல், சட்ட ஒப்பந்தங்கள், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் முதலானவற்றில் நிறுவனத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வரும் அனு, போட்டி மிகுந்த சந்தை உலகில் க்ளையன்ட்களை ஈர்ப்பதில் வல்லவராகத் திகழ்வதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

ரூபால் ஜே.பன்சாலி: 55 வயதான இவர், ஏரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Ariel Investments) நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருக்கிறார். நிதி நிர்வாகத்தில் இயல்பிலேயே வல்லவரான இவர், நிதித் துறையின் பெண்கள் சாதிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருபவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெண்கள் தங்களது கரியரின் ஒவ்வொரு படிநிலையிலும் அதிகாரம் பெற்றிட வேண்டும்…”

– இதையே தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ள ரூபால், நிதித் துறையில் தன்னை மகத்தானவராக செதுக்கிக் கொண்டதுடன், தன்னைப் போல் பல பெண்களை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலுடன் செயல்பட்டு வருபவர் என்று அவர் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

சோனால் தேசாய்: கடந்த 2018-ம் ஆண்டில், ஃப்ராங்க்ளின் டெம்ப்ளேடன் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் (Franklin Templeton global investment fund) நிறுவனத்தின் முதல் பெண் தலைமை முதலீட்டு அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர் சோனால் தேசாய்.

58 வயதான இவர், சர்வதேச மானிட்டரி ஃபண்ட், தேம்ஸ் ரிவர் கேப்பிடல் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த பேரனுபவத்துடன் 2009-ல் ஃப்ராங்க்ளின் டெம்ப்ளேடனில் சேர்ந்தவர். தற்போது இவரது சொத்து மதிப்பு 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிதிச் சேவை துறையில் முடிசூடா ராணியாக வலம் வருபவர் என்பதை இவரது சொத்து மதிப்பே காட்டுகிறது.

மீனா ஃப்ளின்: 45 வயதான இவர், கோல்ட்மேன் சஷ்ஸ் (Goldman Sachs) குழுமத்தின் குளோபல் பிரைவட் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவின் இணைத் தலைவராக இருப்பவர். விளையாட்டு வீராங்கனையான இவர், தனது காயத்துக்குப் பிறகு நிதித் துறையில் ஈடுபடத் தொடங்கினார்.

ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தில் 1999-ல் சேர்ந்த இவர், பின்னர் கோல்ட்மேன் சஷ்ஸ் நிறுவத்தில் இணைந்தார். இப்போது அந்நிறுவனத்தின் குளோபல் இன்க்ளூஷன் அண்ட் டைவர்சிட்டி கமிட்டியின் இணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரித்து வருகிறார்.

குடும்ப சொத்துகளை நிர்வகிப்பதில் தொடங்கி, சரியான முடிவுகள் எடுப்பதில் பங்கு வகித்து, பணம் சம்பாதிக்கும் திறன்களில் பெண்கள் கலக்குவதாகச் சொல்கிறார் மீனா.

சவிதா சுப்ரமணியம்: 50 வயதான இவர், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் யுஎஸ் ஈக்வட்டி அண்ட் குவான்ட்டிடேட்டிவ் ஸ்ட்ராடர்ஜி பிரிவின் தலைவர். துறைவாரியான ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் திறம்பட செயல்படும் இவரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

நிறுவனங்களின் நிதி மேலாண்மையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பெண் நிர்வாகிகள் தங்களது நிபுணத்துவத்தாலும், ஆளுமைத் திறனாலும் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருவதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

5 days ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

1 week ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

2 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

2 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago