அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகானாமிக் ஜோன் (APSEZ) நிறுவனம், கடன் பத்திரங்களை திரும்பி வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் நிறுவனர் கவுதம் அதானி அமெரிக்க ஷார்ட் செல்லர் நிறுவனம் ஹிண்டன்பர்க் தாக்குதலுக்கு உள்ளான பிறகு முதல் முறையாக அதானி குழும நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை முதல் முறையாக அறிவித்துள்ளது.
APSEZ நிறுவனம் தனது ஜூலை 2024 பத்திரங்களில் 130 மில்லியன் டாலர் பத்திரங்களை வாங்கிக் கொள்ளவும் மற்றும் அடுத்த நான்கு காலாண்டுகளில் இதே அளவு பத்திரங்களை வாங்கிக் கொள்வதற்குமான டெண்டரை வெளியிட்டுள்ளதாக, பங்குச்சந்தை அமைப்பில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெறுவதற்காக பணமாக்க தன்மை நன்றாக இருப்பதை உணர்த்துவதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம், ஜனவரி 24ம் தேதி, அதானி குழுமம் பங்கு மற்றும் தணிக்கை முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியதை அடுத்து அதன் குழும பங்குகள் சரிந்தன.
எனினும், அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.
2024 முதிர்ச்சி அடையும் பத்திரங்களில் 3.375 சதவீதத்தை திரும்பி வாங்கிக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக APSEZ தெரிவித்துள்ளது.
“இந்த டெண்டரின் நோக்கம், நிறுவனத்தின் குறுகிய கால கடன் பொறுப்புகளில் ஒரு பகுதியை அடைப்பது மற்றும் பணமாக்கும் தன்மை நன்றாக இருப்பதை உணர்த்துவது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்க்லேஸ் வங்கி, டிபிஎஸ் வங்கி, எமிரேட்ஸ் எபிடி வங்கி, பர்ஸ்ட் அபுதாபி வங்கி, பிஜேஎஸ்சி, எம்.யூ.எப்.ஜி செக்யூரிட்டீஸ் ஆசியா சிங்கப்பூர், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி உள்ளிட்டவற்றை இதற்கான டீலர் மேலாளர்களாக நிறுவனம் அறிவித்துள்ளது.
“2024 நிலுவையில் உள்ள சீனியர் நோட்களில் 3.375 சதவீதத்தை 130 டாலர் அளவு ரொக்கத்தில் வாங்கிக் கொள்வதற்கான டெண்டர் துவங்குவதாக APSEZ அறிவிக்கிறது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த டெண்டர் வெற்றிகரமாக நிறைவேறிய பிறகு, 520 மில்லியன் டாலர் அளவிலான நோட்கள் வெளியே இருக்கும் என நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிறகு, வெளியே உள்ள நோட்களில் 130 மில்லியன் டாலர் அளவிலான நோட்களை அடுத்த நான்கு காலாண்டுகளில் வாங்கிக் கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிறுவன பணமாக்கும் தன்மை, சந்தை நிலைக்கு ஏற்ப நிறுவனம் இந்தத் திட்டத்தை மேலும் வேகமாக்கலாம் அல்லது தள்ளி வைக்கலாம். மேலும், விலை உள்ளிட்ட மற்ற அம்சங்கள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்படும்.
நிறுவனம் தனது ரொக்க கையிருப்பில் இருந்து இந்த நோட்களை வாங்கிக் கொள்ள உள்ளது. 2023 மே 22ம் தேதி டெண்டர் கோரிக்கை முடிவடைகிறது.
டெண்டர் கோரிக்கையை அடுத்து 1000 டாலர் நோட் ஒவ்வொன்றின் முதன்மை தொகைக்கான மொத்த பரிசீலனை, நோட்களின் 1000 டாலர் முதன்மை தொகையில் 970 டாலர், டெண்டர் கோரிக்கை படி நிறுவனம் வாங்கிக் கொள்ளும் 2023, மே 8 ம் தேதி நியூயார்க் நேரப்படி மாலை 5 மணிக்குள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்ட அல்லது விலக்கிக் கொள்ளப்பட்ட நோட்களுக்கு மட்டுமே வழங்கப்பட பொருந்தும்.
“அல்லது, 1000 டாலர் முதன்மை தொகையில் 955 டாலர் மட்டுமே, ஆரம்ப டெண்டர் காலத்திற்கு பிறகு ஆனால், இந்த அறிவிப்பு காலம் முடிவடைவதற்கு முன் அளிக்கப்படும் நோட்களுக்கு வழங்கப்படும். அதிகப்படியான தொகைக்கு இது உட்பட்டது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியாக ஏற்கப்படக்கூடிய தொகை 130 மில்லியன் டாலர் ஆகும்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…