உங்கள் ஊழியர்களை சூப்பர் ஹீரோவாக மாற்றி நிறுவன வருவாயை பெருக்க உதவும் Aspire நிறுவனம்!

வெறும் மாதச் சம்பளத்திற்கு மட்டுமே பணிபுரிந்து வரும் சாதாரண ஊழியர்களை, நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு உத்வேகத்துடன் செயல்படக்கூடிய விசுவாசமிக்க ஊழியர்களாக மாற்றும் Aspire நிறுவனம்!

ஊழியர்களின் பழக்க வழக்கத்தை மாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் வருவாயை பெருக்க முடியுமா..? 

ஒரு நிறுவனத்தின் ஆகச்சிறந்த சொத்து அந்நிறுவனத்தின் ஊழியர்களே, அம்மதிப்புமிக்க ஊழியர்களின் ஒரு சில பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம், நிறுவனத்தின் வருவாயை பெருக்க உதவிப் புரிகிறது சென்னையை சேர்ந்த Aspire நிறுவனம்!

ஒவ்வொரு நிறுவனமும் புதுபுது Employee Engagement Activities-ஐ அறிமுகப்படுத்தி, பல மணி நேரத்தை செலவிடுவதற்கு முக்கியக் காரணம் பணியிடத்தில் நேர்மறையான சூழலை உருவாக்கவே…! இன்னும் பல நிறுவனங்கள் தனது ஊழியர்கள் உத்வேகத்துடன் செயல்படுவதற்காக Bonus, Incentives என பல சலுகைகளை வழங்குகின்றனர். 

ஆனால், ஒரு உண்மை யாதெனில், நிறுவனத்தின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு ஊழியர்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல்… மேம்போக்காக  Engagement Activities, Bonus, Incentives போன்ற சலுகைகள் கொடுப்பதனால் நிறுவனத்தில் எந்தவொரு பெரிய மாற்றமும் நிகழாது என்பதே நிதர்சனமான உண்மை…

ஒரு தரவின்படி, 23 சதவீத ஸ்டார்ட்அப்கள் தொடங்கிய முதல் மூன்று வருடங்களிலேயே மூடப்படுவதற்குக் காரணம் உத்வேகமிக்க சரியான ஊழியர்கள் இல்லாததே…

இப்பிரச்சனையை கருத்தில் கொண்டே 2019-ம் ஆண்டு Aspire நிறுவனம் தொடங்கப்பட்டது. வெறும் மாதச் சம்பளத்திற்கு மட்டுமே பணிபுரிந்து வரும் சாதாரண ஊழியர்களை, நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு உத்வேகத்துடன் செயல்படக்கூடிய விசுவாசமிக்க ஊழியர்களாக மாற்றுகின்றனர் இவர்கள்.

இதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் முதல் படி, ஊழியர்களின் தேவையை புரிந்து கொள்ள முற்படுதல். 

ஊழியர்களே நிறுவனத்தின் முதுகெலும்பு

ஒவ்வொரு ஊழியர்களின் பின்னால் இருக்கக்கூடிய சிரமங்களையும், தேவைகளையும் Pilot Study என்னும் பெயரில் காதுக் கொடுத்து பொறுமையாகக் கேட்கின்றனர்.. இந்த one to one Discussion-ல், ஊழியர்களின் எதிர்பார்ப்பு, விருப்பம், எண்ணம் மற்றும் அவர்களின் அடிமட்டச் சவால்களை புரிந்து கொள்ள உதவுகிறது. 

ஒவ்வொரு ஊழியரும் ஒவ்வொரு விதமான தேவையையும் பிரச்சனையையும் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலருக்கு TV, Washing Machine, Bike என பொருள் தேவை இருக்கிறது, ஒரு சிலருக்கு பணம் சார்ந்த பிரச்சினை இருக்கிறது, ஒரு சிலர் தனது துறையில் அறிவை வளர்த்துக் கொண்டு மேம்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவராக இருக்கிறார். 

ஒரு நிறுவனராய் ஊழியர்களின் பிரச்சினையை தனது பிரச்சினையாய் கருதி அதற்கான தீர்வை வழங்குவோமேயானால், நிறுவனத்தின் பிரச்சினையை தனது சொந்த பிரச்சனையாக கருதுவர் ஊழியர்கள். 

இவர்களின் பிரச்சனைக்கான தீர்வை இவர்களது பழக்கவழக்கங்களில் இருந்து பெறுவதே சரியானதுப், பிரச்சனைக்கெல்லாம் நிரந்தர தீர்வும் அதுவே!

Pilot Study-இல் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, Skillset, Mindset, Toolset என வகைப்படுத்தி, ஒவ்வொரு ஊழியர்களின் தேவைக்கேற்ப பிரத்யேக Habits Tracking System- ஐ உருவாக்குகின்றனர் Aspire குழுவினர். 

உதாரணமாக ஒரு ஊழியர் தான் பணியாற்றி கொண்டிருக்கிற Digital Marketing துறையில் அறிவை வளர்த்துக் கொள்ள எண்ணுகிறார். ஆனால் அவரது எண்ணத்திற்கு பல காலமாய் செயல்வடிவம் கொடுக்காமல் இருப்பார். அதற்குக் காரணம் பலவும் கூறுவார். இந்நிலையில், இவருக்கு தேவை ஒரு சரியான வழிக்காட்டி, அந்த வழிகாட்டி தான் Aspire குழு. இவர்கள் அவரது எண்ணத்திற்கு செயல்வடிவம் பெற உதவிபுரிக்கின்றனர். 

அவர் விரும்பும் Digital Marketing துறையில் Online Course- ஐ வழங்கி, 1% Better Everyday என்கிற விதியை பின்பற்றி, தினமும் அரைமணி நேரம் என்கிற வீதம் தொடர்ச்சியாக படிக்கச் சொல்கின்றனர்.

இது போன்று ஒரு குறிப்பிட்ட செயலை தொடர்ச்சியாக செய்யச் சொல்லி அதை அவர்களின் வாழ்வில் அன்றாட பழக்கமாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஒரு வழிகாட்டியாக அவர்கள் தொடர்ச்சியாக செய்கிறார்களா, என்று கண்காணிப்பதோடு, அவர்கள் அதனை தொடர்ந்து பின்பற்றுவதற்கு சாதகமான சூழலை உருவாக்கியும் தருகின்றனர்.

மேலும், வாரம் ஒருமுறை ஊழியர்களை பரிசீலனை செய்து பழக்கத்தை தொடர்வதில் உள்ள சிரமங்களை கண்டறிந்து எளிதாக்கவும் முயல்கின்றனர். 

நீங்கள் விரும்பும் துறையில் நேற்றை விட இன்று ஒரு சதவீதம் முன்னேறினால் போதும் (1% Better Every day) ஒரு வருடத்தில் 37 மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்பீர். 

இவ்வாறு ஊழியர்களின் வளர்ச்சியில் ஒரு நிறுவனம் அக்கறையோடு செயலாற்றும் போது, அந்நிறுவனத்தின் வளர்ச்சியிலும், ஊழியர்கள் மிகுந்த அக்கறையுடனும் உத்வேகத்துடனும் செயல்படுவர் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. 

1% Better Every Day கோட்பாடு

ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு எனப்படும் SYSTEM- ஐ உயர்த்துவதன் மூலம் அதில் பயணிக்கின்ற ஊழியர்களின் வாழ்வும் மேம்படும் என்கிற ஜேம்ஸ் கிளியரின் கோட்பாட்டின் படி நிறுவனத்தின் கலாச்சாரத்திற்கு ஏற்ற, வளர்ச்சிக்குத் தேவையான செயலை தேர்ந்தெடுத்து அதை ஊழியர்களின் பழக்கமாக்குவது மிக முக்கியம். 

உதாரணமாக ஒரு புகழ்மிக்க ஹோட்டலில் பணிபுரியும் Server, வரும் Customer-களை சிடு சிடு வென்று பேசி Order-ஐ கேட்டால் Customer இடத்தில் ஹோட்டலின் மதிப்பு குறையும். இந்த சூழ்நிலையில் 1% Better Every Day என்ற விதியை பின்பற்றி, இனி Customer-ஐ சிரித்த முகத்துடன் கைக்கூப்பி வரவேற்று Order ஐ பெறுமாறு செயல்பட வைக்கும் போது, ஹோட்டலின் மதிப்பும், வாடிக்கையாளரின் எண்ணிக்கையும் உயரும். 

இதனை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்தால் அவருக்கு Bonus Points வழங்குகின்றனர் Aspire குழு. அதனைக் கொண்டு அவருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு Pointக்கு 1 ரூபாய் வீதம் 2 மாத காலத்தில் அவர் 7000 Points சேர்த்துள்ளார் என்றால் ₹7000 மதிப்பு மிக்க எந்தவொரு பொருளையோ அல்லது சிறந்த அனுபவங்களையோ பெற்றுக் கொள்ளலாம் (Ex: Washing Machine, Books, Online Courses, First Flight Experience, etc..) 

இவ்வாறு நிறுவனத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பரிசுப்பொருள் காலம் காலமாக அவர்கள் மனதிலும், வீட்டிலும் நிலைத்து நிற்கும். இதனால் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையும், நல்லெண்ணமும் அதிகரிக்கும். இதன்மூலம் ஊழியர்களின் Personal Life மேம்படுவதோடு, பணியிடத்தில் நேர்மறையான சூழலையும், விசுவாசமிக்க உத்வேகத்துடன் செயல்படக்கூடிய ஊழியர்களையும் உருவாக்க முடியும்.

இவ்வாறு ஊழியர்கள் தனது பணியில் செய்யும் தவறை கண்டறிந்து அதை சரியாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதுவே HABIT-ஆக மாறி நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க உறுதுணையாய் இருக்கும். 

இவர்களின் அளப்பரிய சேவையை பாராட்டி, Tech HR-ன் சார்பாக சிறந்த மனித வளம் மேம்பாட்டு விருது 2021-ம் ஆண்டு Aspire நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. ரத்திஷ் கிருஷ்ணன் தலைமையில் இயங்கி வரும் Aspire நிறுவனம், இதுவரை 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை புரிந்துள்ளனர். 

எங்கோ இருக்கும் ஏதோவொரு ஊழியனின் நீண்ட கால வேண்டுதலாலும், நிறுவனரின் நல்லெண்ணத்தாலும் உருவானது தான் Aspire நிறுவனம்.  கடினமான பாதை எனத் தெரிந்தும் அதை பெரிதாய் கருதாது, தனது இலக்கை நோக்கி அயராது ஓடிக் கொண்டிருக்கும் தொழில் முனைவோரின் கனவு வெற்றிப் பெறுவதற்காக  உறுதுணையாக இருக்கும் Aspire நிறுவனம் இன்றைய காலக்கட்டத்திற்கு மிக மிக அவசியமானது. இந்நிறுவனம் மேலும் சிறப்பாக செயல்பட யுவர்ஸ்டோரியின் வாழ்த்துக்கள்..! 

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

5 days ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

1 week ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

2 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

2 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago