இந்தியாவில் காலணிகளைப் பற்றி பேசுவதென்றால், நமக்கு தோன்றும் முதல் பெயர்களில் ‘பாட்டா’ (Bata) பிராண்ட் நிச்சயம் இடம்பிடிக்கும். ஆம், இந்திய கலாச்சாரத்துடன் நெருக்கமாக தொடர்புடைய எங்கும் நிறைந்த பெயர்தான் ‘பாட்டா’. இந்தியாவின் பிராண்ட் என அறியப்பட்டாலும், பாட்டா செக்கோஸ்லோவாக்கியாவை சேர்ந்தது என்பது பலரும் அறியாத ஓர் உண்மை.
செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான வணிகமாக நிறுவப்பட்ட ‘பாட்டா’ கடல்கள் மற்றும் கலாச்சார தடைகளைத் தாண்டி, இந்திய குடும்பங்களில் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக மாறிய பயணம் ஈர்க்கக்கூடிய ஒன்று.
1931-ல் ‘பாட்டா’, இந்தியாவில் தனது முதல் ஆலையை கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள கொன்நகரில் அமைத்தபோது அதன் கதை தொடங்கியது. இந்திய காலநிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு ரப்பர் மற்றும் கேன்வாஸ் ஷூக்களுடன் உள்ளூர் சந்தையில் பாட்டா நிறுவனம் நுழைந்தது.
பாட்டா அறிமுகப்படுத்திய இந்த இரண்டு ரக காலணிகளும் மற்றொரு தயாரிப்பு என்பதாக இல்லாமல், அவை இந்தியாவில் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற மலிவு மற்றும் அதேநேரம் மக்களுக்கு வசதியை கொடுத்த ஒரு புரட்சியாக மாறின.
இதனால், 1939 வாக்கில் பாட்டாவின் தடம் இந்தியாவில் கணிசமாக விரிவடைந்தது. 86 கடைகள் மூலம் வாரத்துக்கு 3,500 ஜோடி காலணிகளை விற்பனை செய்யத் தொடங்கியது. இதனால், கொன்நகர் பகுதி ‘பாட்டா நகர்’ என்றே மாறிப்போனது. பாட்டாவின் கொன்நகர் ஆலை என்பது வெறும் உற்பத்தி மையமாக இருக்கவில்லை. மாறாக, இது இந்திய சமூகம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் வளர்ந்து வரும் சின்னமாக இருந்தது.
இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையால் 1980 வாக்கில் காதிம்ஸ் மற்றும் பாராகான் போன்ற காலணி நிறுவனங்கள் தோன்றின. இவை பாட்டா நிறுவனத்துக்கு கடும் போட்டியைக் கொடுத்தன. விஷயங்களை மேலும் மோசமாக்கும் வகையில், பாட்டாவின் அப்போதைய டிசைன்கள், தொழிலாளர் சங்கச் சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை பாட்டாவின் இமேஜைக் கெடுக்கத் தொடங்கின.
ஆனால், தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான Well-worn shoe போன்ற தனது டிசைன்களால் மார்க்கெட்டில் இழந்ததை சீக்கிரமே மீட்டது பாட்டா. மறுமலர்ச்சிக்கான உத்தியுடன் சந்தையில் இறங்கி அடித்தது. அவற்றில் ஒன்று விளம்பரம். விளம்பரங்கள்தான் ‘பாட்டா’வை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்த்தது. இவை தவிர, நார்த் ஸ்டார், மேரி கிளாரி மற்றும் பவர் போன்ற பாட்டாவின் துணை பிராண்டுகளும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.
மேலும், ஹஷ் பப்பீஸ் ஸ்லிப்பர்கள் அறிமுகம், பிரீமியம் பிரிவில் பாட்டாவின் மதிப்பை அதிகப்படுத்தியது. இதேபோல், ஹேண்ட் பேக்குகள், சன்கிளாஸ்கள் என புதிய தயாரிப்புகளை வெளியிட்டு மக்களுக்கு முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை அளித்தது பாட்டா. நவீனத்துடன் தொடங்கப்பட்ட புதுமை கடைகள் சில்லறை விற்பனையில் பாட்டாவுக்கு புதிய காற்றை சுவாசிக்க உதவியது.
2024-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1,375-க்கும் மேற்பட்ட கடைகளுடன் இந்தியாவில் மிகப் பெரிய சில்லறை விற்பனையாளர் மற்றும் முன்னணி காலணி உற்பத்தியாளர் நிறுவனமாக உள்ளது பாட்டா.
2023-24 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் விற்பனையில் 30% சரிவை எதிர்கொண்டது. இந்த பின்னடைவுக்கு காரணம், தற்போதைய புதிய தலைமுறை நுகர்வோர்களை ஈர்ப்பதில் பாட்டா கையாளும் பின்தங்கிய யுக்தி. தற்போதைய புதிய தலைமுறை நுகர்வோர்களை ஈர்க்க புதிய யுக்தி பாட்டாவுக்கு தேவைப்படுகிறது.
தற்போதைய புதிய யுகத்தின் மாறிவரும் டிரெண்டுக்கு ஏற்றவாறு தன்னை எவ்வாறு மாற்றியமைத்து காலணி உற்பத்தியை தக்கவைக்க போகிறது என்பதே பாட்டா முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.
பாட்டாவின் பாரம்பரியம் யாரும் மறுக்க முடியாத ஒன்று. ஆனால், தொடர்ந்து ஒரு துறையில் நிலைத்திருக்க புதுமை என்பது அவசியம். அதற்கேற்ப பாட்டா கருத்தில் கொள்ள சில சாத்தியமான பாதைகள் இங்கே:
டிஜிட்டல் மாற்றம்: இன்றைய ஆன்லைன் உலகில் இ-காமர்ஸ் உத்திகள் மிகவும் முக்கியம். பாட்டா தனது பரந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தடையற்ற ஆன்லைன் – டு – ஆஃப்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்க முடியும், கட்டாயம் உருவாக்க வேண்டும்.
ட்ரெண்ட் செட்டிங் டிசைன்கள்: தற்போதை ட்ரெண்ட்டுக்கு தகுந்த டிசைன்களில் கவனம் செலுத்துவது அவசியமான ஒன்று. அதற்கு இளம் வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இளைஞர்கள் சந்தையில் பாட்டா காலடி எடுத்துவைக்க உதவும்.
இதேபோல், நுகர்வோர் பெருகிய முறையில் சுற்றுச்சூழல் ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, வளர்ந்து வரும் போக்கிற்கு ஏற்றவாறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை பாட்டா ஆராய வேண்டும். இந்த மாதிரியான செயல்முறைகளால் பாட்டா நிலைத்தன்மையுடன் செயல்பட முடியும்.
வாடிக்கையாளர் அனுபவம்: வாடிக்கையாளர் சேவைப் பயிற்சியில் முதலீடு செய்வது மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஷாப்பிங் சூழலை உருவாக்குவது மூலம் இழந்த வாடிக்கையாளர்களைத் திரும்பப் பெற முடியும். மேலும், இதன்மூலம் தனது பிராண்ட்டுக்கென பலோயர்களை பாட்டா நிறுவனத்தால் உருவாக்க முடியும்.
இந்திய சந்தையின் சிக்கல்களைத் தீர்ப்பதில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது பாட்டா. இதன்மூலம் தனது கோட்டையை மீண்டும்பெற தயாராகி வருகிறது. உடனடி சவால்கள் அந்நிறுவனத்துக்கு உள்ளன.
எனினும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் காலணித் துறையில் முன்னோக்கிச் சிந்திக்கும் தலைவராக தனது இடத்தை மீண்டும் பாட்டா-வால் உறுதிப்படுத்தவும் முடியும்.
எனவே, சவாலுக்கு முயற்சி செய்து வரும் பாட்டா, வளர்ந்து வரும் காலணிகள் சந்தையில் எவ்வாறு தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…