காலநிலை மாற்றம்’ – நெதர்லாந்து பணியை விட்டு சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பிரசாத்!
‘ஊழி’ என்றொரு பண்டைய தமிழ் சொல் உண்டு. ‘முந்தைய இயற்கை விதிகள் அழிந்து, புதிய இயற்கை பிறத்தல்’ என்று அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் சொல் இது. அதாவது, இயற்கை நியதிகளின் படி, அமைந்த ஐம்பூதங்கள் தம்மை தாமே சீர்மைப்படுத்தி ஒழுங்கமைவுக்குள் இருத்திக் கொள்ளுதல் ஆகும். இக்காலத்தை ’ஊழிக்காலம்’ என்று அழைப்பர்.

இந்த ஊழிக்காலத்தில் இயற்கை நியதிகளின் படி இல்லாத உயிர்களும் பொருள்களும் சிதைந்து அடுத்த நிலைகளுக்கு மாற்றப்படும். இயற்கையுடன் தன்னை பொருத்திக் கொள்ளும் உயிர்கள் மட்டுமே தம் இருப்பை தக்க வைத்துக்கொள்ளும்.

90 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களை கொண்டுள்ள இப்பூமியில் மானுடமும், மானுடத்தினால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களுமே இயற்கை நியதிகளிலிருந்து விலகி ஊழியின் போக்கை விரைவுபடுத்துகிறது.

ஏனெனில், 450 கோடி ஆண்டுகளாக பல்லுயிர் ஒழுங்கோடு இருக்கும் பூமியை, வெறும் 200 ஆண்டுகளிலேயே தொழில்புரட்சி மூலம் இயற்கையின் நியதிகளை புறந்தள்ளி காற்றை கெடுத்து, சூழலில் வெப்பத்தை அதிகப்படுத்தி, மண்ணை மலடாக்கி, நீர் நிலைகளை அமிலத்தன்மை உள்ளதாய் மாற்றி இன்று காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்..!
ஊழிக்காலம்!

காலநிலை மாற்றம் :
பூமியின் மேற்பரப்பில் உள்ள வாயுமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. இவைதான் ‘பசுமைக்குடில் வாயுக்கள்’ (GreenHouse Gases- கார்பன்-டை- ஆக்ஸைடு Co2, மீத்தேன் CH4, ஓசோன் O3,நைட்ரஸ் ஆக்ஸைடு N2O) என்று அழைக்கப்படுகின்றன.

Climate Change
Green House Effect

ஆனால், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், பகல் நேரத்தில் பூமியின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த காலநிலை மாற்றத்தின் விளைவு, நூற்றாண்டில் ஓரிரு முறை நிகழும் இயற்கை பேரிடர்கள், இன்று வருடாவருடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறி இருக்கிறது. தற்போது நிகழ்ந்த சென்னை, தூத்துக்குடி வெள்ளப்பெருக்கும், ஜப்பானின் நிலநடுக்கமும் இதற்கான சான்றுகள் எனலாம்.

‘வரம் மாயவரமாய் மாறும்’ என்பது போல் ஆரம்பத்தில் வரமாய் தெரிந்த ‘தொழில்நுட்பம்’ காலங்கள் செல்ல செல்ல அவ்வரமே பிரச்சனையாக மாறிருக்கிறது. உலக வானிலை ஆய்வு நிறுவனக் கூற்றுப்படி, கடந்த 200 ஆண்டுகால தொழில் புரட்சியின் விளைவால், புவியின் சராசரி வெப்பநிலை முன்பு இருந்ததைவிட தற்போது சுமார் 1 டிகிரி கூடுதலாக உயர்ந்திருக்கிறது என்கின்றனர்.

‘ஒரு டிகிரியில் என்ன ஆகிவிட போகிறது’ என குறைவாக கருதலாம். ஆனால், இந்த ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வு என்பது மனிதர்களுக்கும், புவியில் வாழும் உயிர்களுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, வெப்பநிலை உயர்ந்தால் இமயமலை உள்ளிட்ட பனிமலைகளின் பனிப்பாறைகள் உருகி ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும், அதன் காரணமாக பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொல்கத்தா, சூரத் உள்ளிட்ட 12 இந்திய நகரங்கள் 2100-க்குள் கடலில் மூழ்கும் என நாசா அறிவித்திருக்கிறது. மேலும், எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் போன்ற தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Natural Disasters

ஆம், இயற்கை பாதுகாப்பு என்பது மாபெரும் தோல்வியின் விளிம்பில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும்கூட, முன்பு எப்போதும் பார்த்திடாத வகையில், இயற்கையை மீட்கும் சில சாதகமான சூழ்நிலையும் இங்கு தென்படுவதுதான் நம் எதிர்காலம் மீது ஒரு புத்தொளியை உண்டாக்குகிறது. அந்த சின்னஞ்சிறிய நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு போராடும் ஒவ்வொரு மனிதரும் இந்த நூற்றாண்டின் முன்னுதாரண முகங்கள் எனலாம்.

அப்படி ஒரு பெரும் லட்சியவாதத்துடன் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த முன்னெடுப்புகளில் கூர்மையும், தீர்க்கமும் கொண்டு இயற்கையைக் காக்க இடைவிடாது செயல்பட்டு, 60-க்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்களின் 21 டன் கார்பன் மாசினை கட்டுப்படுத்தி, 4000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ள சமூக தொழில்முனைவரான ஹரி பிரசாத் என்ற இளைஞரின் வெற்றிக் கதையே இது!

ஹரியின் சமூக தொழில்முனைவர் பயணம்:
நெதர்லாந்த் டுவென்டே யூனிவர்சிட்டியில் சுற்றுச்சூழல் பொறியியல் படித்து முடித்துள்ளார் ஹரி பிரசாத். அங்கேயே நல்ல சம்பளத்துடன்கூடிய பணி கிடைத்தது, இருந்தாலும், தனது ஆசை எல்லாம் சொந்த ஊரான கோவையில் ஒரு ஸ்டார்ட்-அப் தொடங்க வேண்டும் என்பதே. அதிலும் சமூக நலனை மேம்படுத்தக்கூடிய சமூக தொழில் முனைவோராக வேண்டும் என்பதே அவரின் கனவு என்கிறார்.

ஆனால், நலன் விரும்பிகள் சிலர், எங்கே இவன் திசை மாறிப்போய் வாழ்வை துலைத்துவிடுவானோ என்னும் பயத்தில், “உனக்கு எதுக்கு இந்த வேல, நல்ல வேல கிடச்சுருக்கு ஒழுங்கா நெதர்லாந்துலேயே இருந்து நல்லா சம்பாதிக்க பாரு, பிறவு சமூகம், லட்சியத்த பத்திலா பேசு…” என்றுள்ளனர்.

”ஆனால், ‘வாழ்வின் வளர்ச்சி’ என்று இந்த உலகம் மதிப்பிட்டு வைத்திருப்பது என்ன? அதிக சம்பளம் அவ்வளவுதானே? அதை காட்டிலும் மிக முக்கியமானது, எந்த செயலைக் கொண்டு அந்த பணத்தை சம்பாதிக்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்வின் அர்த்தம்..! என்கிற சமூக புரிதலோடு 2020-ம் ஆண்டு ஒரு பெரும் கனவோடு இந்தியா வந்தேன்,” என்கிறார் ஹரி பிரசாத்.
ஹரி பிரசாத்
ஹரி பிரசாத்

இந்தியாவில் காலநிலை மாற்றம் குறித்தும், கார்பன் வாயு குறைப்பு பற்றியும், பெரும் தொழிற்சாலை நிறுவனர்களின் நிலைப்பாடு என்ன? அவர்களது சவால்கள், தேவைகள், சந்தையில் இருக்கிற வாய்ப்புகளை பற்றியெல்லாம் அறியத் தொடங்கினார் ஹரி.

2023-ம் ஆண்டின் உலகத் தரவுப்படி, இந்தியா 8.3% பசுமை இல்ல கார்பன் வாயுக்களை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 4.8 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் மாசுக்களை வெளியேற்றி சீனா, அமெரிக்காவிற்கு பிறகு மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இத்தகைய சூழல் நீடித்தால் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை இந்தியா இழக்கும் என்பதை கருத்தில் கொண்டு உலக அரங்கில் ஓர் தீர்மானம் எடுத்தது, 2070-க்குள் இந்தியா 0% பசுமை இல்ல வாயு என்ற இலக்கை அடையும் என்று உறுதியளித்துள்ளார்கள்.

இதனால், தற்போது முன்புபோல் இல்லாது உற்பத்தி தொழிற்சாலைகளும், பெரும் நிறுவனங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், பசுமை இல்ல கார்பன் வாயு குறைப்பு குறித்தும் அக்கறை செலுத்தி வருவதால், இந்நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வகையில் 2022-ம் ஆண்டு கோவையை தலைமையகமாகக் கொண்டு ‘Beyond Sustainability’ என்னும் நிறுவனத்தை தொடங்கினார் ஹரி பிரசாத்.

“காலநிலை மாற்றத்தின் விளைவை உணர்ந்த முதல் தலைமுறையும் நாம் தான், அதைச் சரிசெய்யப்போகும் தலைமுறையாகவும் நாம்தான் இருக்க வேண்டும் என்கிற பெரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது இந்நிறுவனம்,” என்கிறார் ஹரி பிரசாத்.
BEYOND SUSTAINABILITY :
Beyond Sustainability நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் ESG (Environmental, Social & Governance) அளவுகோலின்படி, சுற்றுச்சூழல் மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் நிர்வாக மேம்பாட்டில் உயர் தரத்தை அடைய உதவி புரிகின்றனது.


Beyond Sustainability Social Startup

சுற்றுச்சூழல் மேம்பாடு (Environmental Improvement) :
ஒரு நிறுவனம் சுற்றுச்சூழலில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கணக்கிடுகின்றோம். நிறுவனத்தின் கார்பன் தடம் முதல் உற்பத்தி செயல்முறைகளில் ஈடுபடும் நச்சு இரசாயனங்களைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது வரை ஆராய்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடுவதை தவிர்க்கிறோம்.

உதாரணமாக: தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதற்கு எரிபொருள் அல்லது மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக சூரிய மின்சக்தி அல்லது உயிர் வாயுசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தி கார்பன் அளவை குறைக்க முயற்சிக்கின்றோம். மேலும், நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களுக்கு பதிலாக நச்சில்லா பசுமை ரசாயனங்களை பயன்படுத்த முயல்கிறோம்.

சமூக மேம்பாடு (Social Improvement) :
ஒரு நிறுவனம் சமூக மேம்பாட்டில் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் சமூக நலனுக்காக எவ்வாறு வாதிடுகிறது என்பதை பற்றியும் ஆராய்ந்து மேம்படுத்த உதவுகிறோம்.

உதாரணமாக: மரங்கள் நடுவதில் தொடங்கி சமூகத்திற்கு அத்தியாவசியத் தேவையான கழிவறைகளை கட்டி தருதல் போன்ற சமூக முன்னேற்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறோம்.

நிர்வாக மேம்பாடு (Governance Improvement) :
நிறுவனத்தின் தலைமை எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதை ஆராய்ந்து மேம்படுத்த உதவுகிறோம்.

உதாரணமாக: ஊழியர்களின் அடிப்படை தேவைகளை அமைத்துதருவதும், Kaizen போன்ற செயல்முறைகளை பின்பற்றி தேவையற்ற செயல்களை தவிர்த்து நிறுவனத்தின் வருவாயை பெருக்கவும் வழிவகை செய்கிறோம் என்றார் ஹரி பிரசாத்.

ஒரு நிறுவனத்தின் ESG – யை மேம்படுத்த ‘Beyond Sustainability’ எடுத்து வைக்கும் முதல் படி, Pilot Study. இந்நிலையில், நிறுவனர்களின் எதிர்பார்ப்பு, விருப்பம், மற்றும் அவர்களின் அடிமட்டச் சவால்களை புரிந்து கொள்ள இது உதவுகிறது.

பிறகு Data analysis, Budget Plan, Action Plan – (ESG Management, Carbon Management, Sustainability Services) என வகைப்படுத்தி சேவையை தொடங்குகிறோம்.

‘Beyond Sustainability’ நிறுவனத்தின் சிறப்பே, துல்லியமான தரவுகளை கொண்டு அறிவியல் ரீதியான தீர்வை வழங்குவதாகும். இதுவரை 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை புரிந்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய 21 டன் கார்பன் மாசினை குறைத்துள்ளோம். மேலும், 2500 டன் கார்பன் மாசினை குறைக்கும் திட்டத்திலும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறோம்,” என்கிறார் ஹரி பிரசாத்.

சரியான வழிகாட்டலும், உத்வேகமான குழுவும் எங்களுக்கு அமைந்ததால், தொடங்கிய ஒரிரு வருடத்திலேயே சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிட்டதக்க வளர்ச்சியை எங்களால் ஆற்றிருக்க முடிகிறது, என மனநிறைவோடு கூறினார் ஹரி பிரசாத்.

SPI Edge நிறுவனத்தின் நிறுவனர் ரத்திஷ் கிருஷ்ணன் மற்றும் Infinite Engineers நிறுவனர் ஜெய்காந்தின் வழிகாட்டல்கள், நிறுவனத்தை தனித்தன்மையோடு செயல்படவைக்கிறது மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டை மேலும் துரிதப்படுத்த கோவையை சேர்ந்த Forge Innovation & Ventures நிறுவனம் பெரிதும் உதவியாக இருக்கிறது. அத்துடன் நிறுவனத்தின் திறனை மேம்படுத்த அன்லிமிடெட் இந்தியா (UnLtd India) என்னும் சமூகஅமைப்பின் பிரத்யேக வழிகாட்டலையும் பெற்று வருகிறோம். இவர்களின் துணையே ‘Beyond Sustainability’ நிறுவனத்திற்கு பெரும் பலமாக இருகிறது என்றார் ஹரி பிரசாத்.

“ஒற்றை சிந்தனை கொண்ட மனிதர்கள் ஒன்றிணையும் போது பெருஞ்செயல்கள் தன்னிச்சையாக மலரும் என்பதற்கிணங்க காலநிலை மாற்றம் குறித்தும், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தும் ஒற்றை சிந்தனை கொண்ட சிறப்பான குழுவை கொண்டுள்ளது ‘Beyond Sustainability’ நிறுவனம்.”
ஆம், எனது ஒற்றை மனிதரின் கனவு இன்று பத்து பேரின் பெரும் கனவாக மாறிருக்கிறது. கடந்த ஆண்டு StartupTN மற்றும் Forge நடத்திய ‘ஸ்டார்ட்-அப் தமிழா’ போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வென்றெடுத்தோம்.

”2030க்குள் 10 லட்சம் டன் கார்பன் மாசினை குறைக்க வேண்டும் என்கிற பெரும் லட்சியத்தை நோக்கி தொடர் உள்ளுறுதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்,” என்றார் ஹரி பிரசாத்.

இறுதியாக, எங்களின் இச்செயல்கள் அனைத்தும் முழுமை பெற வேண்டுமென்றால், சுற்றுச்சூழல் குறித்து மக்களின் செயல்களில் மாற்றம் வேண்டும். ஏனெனில், பரபரப்பும் பதைபதைப்பும் நிறைந்த இன்றைய அவசர வாழ்க்கையில், சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறோம். ஆனால், நாளைய தலைமுறைக்கு ஆரோக்கியமான சூழலை கொடுக்க வேண்டுமெனில், நமது தேவைகளையும், பொருள்களின் பெருக்கத்தையும் குறைத்துக் கொள்வதே காலநிலை மாற்றத்திற்கு சரியான தீர்வாகும்.

”இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கி, இதுவரை 4000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். நிச்சயம் ஒரு நாள் எல்லாம் செயல்கூடி நற்சூழல் கனியும்,” என்று நம்பிக்கையோடு கூறினார் ஹரி பிரசாத்.
காலநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்த தலைமுறையாகவும் நாம்தான் இருக்க வேண்டும் என்கிற பெரும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இக்குழுவின் செயலை, ஒரு நாள் இந்த உலகம் கொண்டாடும்..!

founderstorys

Recent Posts

Baccarat Record, Legislation & Ladbrokes casino code Means Tips Play Baccarat & Earn

ArticlesTips play on the web baccarat | Ladbrokes casino codeLegal aspects of online casinosThe way…

6 hours ago

Casino games Megascratch casino Enjoy Gambling establishment On line

ArticlesMegascratch casino | Bet เข้าสู่ระบบภายในประเทศไนจีเรีย เช็คอิน 1xBet NG บนเว็บวันนี้Gambling enterprises for Us ParticipantsFirst Regulations Of…

6 hours ago

An informed Sweepstakes Casino poker Websites for people casino Stan James Players

ContentTechnical at the rear of totally free casino games | casino Stan JamesThe top Split…

6 hours ago

Enjoy On the Rebellion casino casino bonuses internet Baccarat inside the Us Your whole A real income Publication

ArticlesRebellion casino casino bonuses - Baccarat Alive Casinos – Play for A real incomeReal time…

6 hours ago

Totally free Ports 100 Jackpotpe ios casino percent free Casino games On line

ArticlesGame guidance | Jackpotpe ios casinoTop Video gameMultiple Diamond Position Review - Discover It IGT…

6 hours ago

ten Greatest Knights and Maidens online On line Roulette the real deal Currency Casinos to experience inside the 2025

ArticlesKnights and Maidens online: Are all roulette dining tables a similar?Body weight Workplace Gambling establishmentNetEnt…

6 hours ago