இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை புதிதாக திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னணி எஜூடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 150 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்குள் லாபத்தை அதிகரிப்பதற்காக 2500 ஊழியர்களை இன்னும் 6 மாதத்திற்குள் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அத்துடன் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாகவும், உலக அளவில் மார்க்கெட்டிங்கிற்கான செலவை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பணிநீக்கம், மாணவர்களின் பெற்றோர்களை மிரட்டியதாக புகார், பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினாலும், பைஜூஸ் நிறுவனம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான டேவிட்சன் கெம்ப்னரிடமிருந்து எஜுடெக் நிறுவனம் நிதி திரட்டியதாக தெரிவித்துள்ளது.
பைஜூஸ் நிறுவனம், இன்னும் இரண்டு வாரங்களில் கூடுதலாக 700 மில்லியன் டாலர் நிதியை திரட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரலில், யுவர்ஸ்டோரிக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, BYJU’S முதல் நிதிச் சுற்றில் $700 மில்லியனைத் திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களும் வர உள்ள நிதி சுற்றில் பங்கேற்றுள்ளனர்.
Moneycontrol அறிக்கையின்படி,
BYJU 2021ம் ஆண்டு திரட்டிய $1.2 பில்லியன் டேர்ம் லோனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்கு புதிய நிதி உதவும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், கடன் நிதி மேலாண்மையை சமாளிப்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்திக்கொள்ளவும் பைஜூஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு, பிளாக்ராக், சுமேரு வென்ச்சர்ஸ் மற்றும் பிறவற்றிலிருந்து $800 மில்லியனைப் பெற்ற பைஜூஸ் நிறுவனம், கத்தார் முதலீட்டு ஆணையம் உட்பட தற்போதைய முதலீட்டாளர்களிடமிருந்து கடைசியாக அக்டோபர் 2022 இல் $250 மில்லியன் திரட்டியுள்ளது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…