‘சிங்’ஸ் சீக்ரெட்’ (Ching’s Secret) உணவுப் பொருட்கள் இன்று இந்தியா முழுவதும் பிரபலம். சிங்’ஸ் சீக்ரெட் சவுமின் ஹக்கா நூடுல் மசாலா, சிங்’ஸ் சீக்ரெட் பன்னீர் சில்லி மசாலா, சிங்’ஸ் சீக்ரெட் ஷேஸ்வான் ஃப்ரைடு ரைஸ் மசாலா, சிங்’ஸ் சீக்ரெட் மன்ச்சவ் இன்ஸ்டன்ட் சூப், இன்னபிற ருசியான இந்திய – சீன உணவுப்பொருளின் பின்னணியில் இந்தியரான அஜய் குப்தா என்பவர் இருப்பது பலரும் அறியாததே.
1995-ஆம் ஆண்டில், அஜய் குப்தலா கேபிடல் ஃபுட்ஸ் (Capital Foods) தொடங்கினார். அப்போதுதான் ‘சிங்’ஸ் சீக்ரெட்’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். இது விரைவில் இந்திய – சீன உணவில் ஒரு முக்கியப் பெயராக, பிரபல பிராண்டாக மாறியது.
இந்த பிராண்ட் ஆரம்பத்தில் சீனா சாஸ்களின் முக்கியமான மூன்று சாஸ்களை அறிமுகம் செய்தது. சோயா சாஸ், கிரீன் சில்லி சாஸ் மற்றும் ரெட் சில்லி சாஸ், அதைத் தொடர்ந்து ஹக்கா நூடுல்ஸ். விரைவிலேயே கேபிடல் ஃபுட்ஸ், ஸ்மித் & ஜோன்ஸை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சர்வதேச உணவுகள் மற்றும் பொருட்களை வழங்கி, சிங்’ஸ் சீக்ரெட் உணவுப்பொருட்களுடன் இதையும் சேர்த்து இந்திய – சீன உணவில் புதுமைகளை புகுத்தத் தொடங்கியது.
2015 வாக்கில், ‘சிங்’ஸ் சீக்ரெட்’ இந்தோ – சீன கலப்பு உணவு வகையையும், சீன தேசிய வகை உணவுகளையும் கொண்டு வந்தது. இந்த நடவடிக்கை வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறையில் ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாகும். அங்கு வசதி மற்றும் நேரத்தைச் சேமிக்கும் தயாரிப்புகள் பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த நடவடிக்கை வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறையில் ஒரு பரந்துபட்ட ஒரு ட்ரெண்டின் அங்கமானது. அதாவது, ஃபாஸ்ட் ஃபுட் என்ற நேரத்தை சேமிக்கும் ஒரு உணவுப்பழக்க வழக்கம் உலகம் முழுதும் பரவிய காலக்கட்டமாகும் அது.
இந்திய – சீன மாதிரி கலப்பு சாஸ்கள் மற்றும் மசாலாப் பொருட்களில் சிங்’ஸ் சீக்ரெட்டின் தயாரிப்பு நிபுணத்துவம் மற்றும் ‘ரெடி டு குக்’ என்று அழைக்கப்படும் சமைப்பதற்குத் தயாராக இருக்கும் தயாரிப்புகளுடன் FMCG நிறுவனங்களுக்கு தங்கள் வர்த்தகங்களை பன்முகப்படுத்தவும் விரிவு படுத்தவும் விரும்பும் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்கியது.
சக்திவாய்ந்த பிராண்ட் ஆனது எப்படி?
சிங்ஸ் சீக்ரெட்-இன் வெற்றிக்கு அதன் சக்திவாய்ந்த பிராண்ட் அடையாளம், அர்ப்பணிப்புடன் கூடிய வாடிக்கையாளர் பின்தொடர்வுகள் மற்றும் புகழ்பெற்ற இந்திய சமையல்காரர் ஹர்பால் சிங் சோகியை உள்ளடக்கிய காத்திரமான விளம்பரம் ஆகியவை பெரிய காரண கர்த்தாவாக அமைந்தன.
சிங்ஸ் சீக்ரெட்டின் தாய் நிறுவனமான கேபிடல் ஃபுட்ஸின் திட்டமிடப்பட்ட விற்பனை நிதியாண்டு 2023-ல் தோராயமாக ரூ. 900–1,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இது நிதியாண்டு 2022-இல் பதிவு செய்யப்பட்ட ரூ.580 கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
சந்தையில் இந்த பிராண்ட் முதன்மையான சுமார் 75-80% சந்தையைப் பிடித்ததற்கு இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது இந்திய சீன ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ என்றால் மிகையாகாது.
எஃப்எம்சிஜி நிறுவனங்களுக்கு சிங்’ஸ் சீக்ரெட்டின் கோரிக்கை பலதரப்பட்டதாக இருந்தது. இனம் சார்ந்த உணவுகள், சௌகரியம் சார்ந்த தயாரிப்புகள், பிராண்ட் விசுவாசம், சந்தை விரிவாக்க வாய்ப்புகள் மற்றும் புதுமைக்கான சாத்தியக் கூறுகள், வளர்ந்து வரும் தேவை முதலியவை உத்தி ரீதியான கூட்டாண்மை அல்லது கையகப்படுத்துதலுக்கான கவர்ச்சிகரமான இலக்காக ‘கேப்பிடல் ஃபுட்ஸ்’ நிறுவனம் உருவாகியது.
இந்த பிராண்ட் சந்தையில் குறிப்பிடத்தக்க ஊடுருவலை நிகழ்த்தியது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளில் சிங்’ஸ் சீக்ரெட் பிரபலமானது.
2023-ம் ஆண்டில் இந்த , நிறுவனம் கணிசமான 25% லாபத்துடன் குறிப்பிடத்தக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டை எட்டியது. இதனையடுத்து டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் இந்த நிறுவனத்தை வாங்குவதில் தீரா ஆர்வம் காட்டி ரூ.5500 கோடியில் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
டாடா குழுமம் இதை வாங்கியவுடன் இந்தக் குழுமத்தின் தலையெழுத்தே உடன்பாட்டுப் பொருளில் மாறிவிட்டது என்றே கூற வேண்டும். அஜய் குப்தாவுக்கு இது ஒரு வெற்றித் தருணம்.
‘தேசி சைனீஸ்’ வகை உணவுகளுக்கான ரூ.10,000 கோடி மதிப்பீடு கொண்ட உணவு உற்பத்தி நிறுவனமாக வளர்ச்சியுறும் வாய்ப்பைப் பெற்றது. இதன் பின்னணியில் இருப்பவர் அஜய் குப்தா என்ற இந்தியர் என்பது இந்தியர்களின் வர்த்தக மூளைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…