இந்தியாவின் வருடாந்திர பிளாஸ்டிக் கழிவு 3.3 மில்லியன் மெட்ரிக் டன் என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.
சர்வதேச பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும், கழிவுகளில் பெரும்பாலானவை நீர் நிலைகளில் கலக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, 2050ல் கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகம் இருக்கும் என ஆய்வுகள் உணர்த்துகின்றன. ஆர்ப் மீடியா திட்டத்தின் ஒரு பகுதியாக நியூயார்க் பல்கலை நடத்திய ஆய்வு 93 சதவீத மேற்புற தண்ணீரை மைக்ரோ பிளாஸ்டிக் மாசு படுத்தியுள்ளது.
இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ் சார்ந்த சர்வதேச தண்ணீர் நுட்ப ஸ்டார்ட் அப் ’பூன்’ (Boon- முன்னதாக ஸ்வஜால்) தீர்வு அளிக்க முயற்சிக்கிறது. இந்நிறுவனம், பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து, தூய தண்ணீருக்கான அணுகலை அதிகமாக்குகிறது.
தாய் மகன் கூட்டணியான விபா திரிபாதி, அத்வைத் குமார், 2015ல் இந்நிறுவனத்தை துவக்கினர். குருகிராம் மற்றும் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட் அப் சமூக அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு குடிநீர் தீர்வுகளை வழங்கத்துவங்கியது.
தனது சுத்திகரிப்பு மையங்களை பராமரிப்பதற்காக இந்நிறுவனம், ’Clairvoyant’ எனும் ஐஓடி மேடையை உருவாக்கியது.
பூன் நிறுவனம், B2B மற்றும் B2G (வர்த்தகம்- அரசு) மாதிரியில் செயல்படுகிறது. இதன் 60 சதவீத வர்த்தகம் விருந்தோம்பல் துறையில் இருந்தும் 30 சதவீதம் வர்த்தகத் துறையில் இருந்தும் வருகிறது. தண்ணீர் ஏடிஎம் முறையில் இருந்து 10 சதவீத வர்த்தகம் வருகிறது.
இந்த நிறுவனம் 17 மாநிலங்களில் செயல்படுகிறது மற்றும் குருகிராமில் ஆய்வு மையம் கொண்டுள்ளது. அதன் அணி மும்பை, பூனா, டேராடூன், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ளது. 300 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது. தினமும் ஐந்து லட்சம் மக்களுக்கு சேவை அளிக்கிறது.
இந்நிறுவனம், ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகை முதல் பல லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறது. தற்போது ஆண்டு அடிப்படையில் 4 மடங்கு வளர்ச்சி கண்டு வருகிறது.
2023-2 4 நிதியாண்டில் ரூ.35 கோடி வருவாய் எதிர்பார்க்கிறது. அடுத்த ஆண்டு ரூ.90 கோடி எதிர்பார்க்கிறது. மேலும், பி2சி துறையில் இல்ல சுத்திகரிப்பு தீர்வுடன் நுழைய திட்டமிட்டுள்ளது.
Boon, ஸ்வஜால் எனும் பெயரில் தண்ணீர் ஏடிஎம் உடன் துவங்கியது. மோசமான தண்ணீரால் அவதிப்பட்ட இடங்களில் தண்ணீர் ஏடிஎம் மையங்களை நிறுவனம் அமைத்தது. பல்வேறு பகுதிகளில் உள்ள மாறுபட்ட தண்ணீர் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நிறுவனம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் தண்ணீர் ஏடிஎமைகளை அமைத்துள்ளது.
நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் வழங்க நிறுவனம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் இணைந்து செயல்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், வர்த்தக வளர்ச்சி வாரியம், புதிய மற்றும் மறுசுழற்சி எரிசக்தி அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுடனும் இணைந்து செயல்படுகிறது.
எதிர்காலத்தில், இந்த ஸ்டார்ட் அப் ஆப்ரிக்கா மற்றும் சகாரா பகுதிகளில் தூய குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் எஐ திறன் கொண்ட ஐஓடி தண்ணீர் சுத்திகரிப்பு மேடை’கிளேர்வோயண்ட்’ பயனாளிகள் தங்கள் தண்ணீர் தேவையை நிர்வகிக்க உதவுகிறது. பூன் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் தண்ணீர் தரத்தை நிகழ் நேரத்தில் கண்காணித்து செயல்படுகின்றன.
ஏஐ கருவிகள், சாதனத்தின் ஆரோக்கியத்தை கண்காணித்து பராமரிப்பு குறிப்புகளை வழங்குகின்றன. மேலும் தரவுகள் சேமிக்கப்பட்டு, வடிவமைப்பு மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனம், வாட்டர் சென்ஸ், வாட்டர் கியூப், ஜீரோ மைல் வாட்டர் ஆகிய மூன்று தீர்வுகளை அளிக்கிறது. வாட்டர் சென்ஸ், ஏஐ மற்றும் அனல்டிக்ஸ் கொண்டு கண்காணிப்பு, மற்றும் கணிப்பை வழங்குகிறது. வாட்டர் கியூப் பிளாஸ்டிக் கழிவு மற்றும் கார்பன் வெளிப்பாடு இல்லாமல் தண்ணீரை சுத்திகரிக்கிறது. ஜீரோ மைல் வாட்டர், இந்திய இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வழங்குகிறது.
“பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் இடத்தில் தண்ணீரை சுத்திகரித்து, கண்ணாடி பாட்டில்களை கிருமி நீக்கம் செய்ய தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த அமைப்பு போக்குவரத்து செலவை குறைத்து, அதிக தரம் வாய்ந்த அனுபவத்தை தருகிறது,” என்கிறார் குமார்.
நிறுவனம் தனது இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் காணும் தன்மையை ஐஓடி கொண்டு அதிகரிக்கிறது. தண்ணீர் இயந்திரங்களுடன் ஐஓடி சாதனங்களை ஒருங்கிணைப்பது மூலம் நிகழ் நேர தகவல்கள் கிடைத்து பராமரிப்பும் சாத்தியமாகிறது.
“இயந்திர சேவையிலும் இது உதவுகிறது. ஆப்பரேட்டர்கள் பல இயந்திரங்களை கண்காணிக்கலாம். எனவே ஒரு சர்வீஸ் பொறியாளர் அதிக இயந்திரங்களை கையாளலாம்,” என்கிறார்.
தனது நெட்ஜீரோ வாட்டர் நுட்பம் மூலம் ஒவ்வொரு நிமிடமும் 22 பிளாஸ்டிக் பாட்டில்கள்களுக்கு பதிலீடு செய்வதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
தனது சுத்திகரிப்பான்கள் வழக்கமான சுத்திகரிப்பான்களை விட 4 மடங்கு செயல்திறன் வாய்ந்தது என்றும் 3 மடங்கு தாதுக்களை தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கிறது. ஜீரோ மைல் வாட்டர் திட்டம் 500,000 கிலோ கார்பன் வெளிப்பாட்டை குறைத்திருப்பதாகவும், இது 26000 மரங்கள் ஆண்டுக்கு உள்வாங்கும் காரபனுக்கு நிகரானது என்றும் தெரிவிக்கிறது.
இந்திய தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப சந்தை, ஆண்டு அடிப்படையில் 10.78 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 0.92 பில்லியன் டாலரில் இருந்து 2028ல் 1.54 பில்லியன் டாலராக உயரும் என மோர்டோர் இண்டலிஜென்ஸ் தெரிவிக்கிறது.
இந்தியா குரோத் பண்ட் மூலம் RVCF ராஜஸ்தான் அசெட் மேனேஜ்மண்ட் கம்பெனி மற்றும் பிரமோத் அகர்வால் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழுவிடம் இருந்து நிறுவனம் 1.6 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.
மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் செயல்பட்டு வரும் நிறுவனம் தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையிலும் தனது இருப்பை விரிவாக்க உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 50 மில்லியன் டாலர் எனும் வருவாய் கணிப்பில் ஆசியான் பகுதியில் 10 மில்லியன் டாலரை எதிர்பார்க்கிறது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…