கடன் கொடுப்பது என்பது சர்வதேச அளவில் மிகவும் பழமையான தொழில். மனிதன் தோன்றியது முதல் கடன் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், கடன் கொடுக்கும் முறையிலும் அதில் டெக்னாலஜியின் பங்களிப்பும் தொடர்ந்து மாறி வருகிறது.
தனிநபர் கடன் வழங்குவதற்கு சில வாரங்கள் கூட ஆகலாம். தனிநபரின் சிபில், வங்கிக் கணக்கு, வருமானம், கே.ஒய்.சி உள்ளிட்ட பல விஷயங்களை ஆராய்ந்த பிறகுதான் கடன் கொடுக்க முடியும். ஆனால், ’Cloudbankin’ என்ற சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் 10 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் சாப்ட்வேரை தயாரித்திருக்கிறது.
இந்த நிறுவனம் கடன் கொடுப்பதில்லை. ஆனால், கடன் கொடுக்கும் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவை ஒருவருக்கு கடன் கொடுக்க விரைவாக முடிவெடுக்க இந்த நிறுவனத்தின் டெக்னாலஜி உதவுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு 4 லட்சம் டாலர் அளவுக்கு முதலீட்டை திரட்டியது இந்த ஸ்டார்ட்-அப். ஏஞ்சல் முதலீட்டாளர்கள், சர்வதேச வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்கள் என பலரும் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக பெரிய தொகையை திரட்டுவதற்கு திட்டமிடும் சூழலில் யுவர்ஸ்டோரிக்காக ’CloudBankin’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி பார்த்தசாரதியை சந்தித்தோம். க்ளவுட்பேங்க்இன் உருவான விதம், அடுத்தகட்ட திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களை நம்மிடம் பேசினார்.
2006-ம் ஆண்டு எம்.ஐ.டியில் படித்த ஐந்து நண்பர்கள் தொடங்கிய நிறுவனம் ’CloudBankin’. நான், எம்.ராஜா, அலெக்ஸ் ஆண்டோ நவிஸ், ஹரிஹரன் மற்றும் பழனிசாமி ஆகியயோர் ஒன்றாக படித்தோம். படித்து முடித்து சர்வதேச நிறுவனங்களில் வேலை பார்த்தோம். வெளிநாடுகளிலும் சென்று வேலை பார்த்தோம். நாம் ஏன் ஒரு நிறுவனம் தொடங்கக்கூடாது என்னும் யோசனையின் வெளிப்பாடுதான் ’ஹாபிள் டெக்னாலஜீஸ்’ (Habile Technologies).
ஆரம்பத்தில் சேவை நிறுவனமாக மட்டுமே செயல்பட்டோம். ஆப் டெவலப்மெண்ட் உள்ளிட்ட பல சேவைகளை தொடங்கினோம். நல்ல வருமானமும் இருந்தது. நாங்கள் வேலை செய்தது பெரும்பாலும் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் என்பதால் அங்கு என்ன தீர்வு வழங்க முடியும் என்பதை எங்களால் யோசிக்க முடிந்தது, என்று தங்கள் தொழில் பயணத்தின் தொடக்கதை பகிர்ந்தார் மணி பார்த்தசாரதி.
இனி சேவை நிறுவனமாக இல்லாமல் புராடக்ட் நிறுவனமாக மாறும் தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தோம். அதனால் 2017-ம் ஆண்டு இந்த புராடக்டை அறிமுகம் செய்தோம்.
“ஒரு கடன் கொடுப்பதற்கு 15 முதல் 20 ஏபிஐ (Application programming interface)-களை ஒருங்கிணைத்துதான் முடிவெடுக்க முடியும். இதற்கான புராடக்ட் உருவாக்கினோம். ஆனால், இதனை இம்பிளிமெண்டேஷன் முறையில் உருவாக்கினோம். ஒவ்வொரு அப்டேட் வந்தாலும் அதனை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு செல்வதற்குள் அடுத்த அப்டேட் கொண்டுவரும் சூழல் உருவானது. அதனால் சாஸ் முறைக்கு மாறினோம்.”
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்துதான் சாஸ் முறையில் செயல்பட்டு வருகிறோம். இதனால் அப்டேட் என்பது எளிதாக இருக்கிறது, என்று மணி கூறினார்.
நாங்கள் டெக்னாலஜி நிறுவனம். வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் விரைவாக முடிவெடுக்க நாங்கள் உதவுகிறோமே தவிர நாங்கள் கடன் கொடுப்பதில்லை. இங்கு நாங்கள் இரு சிக்கல்களை தீர்க்கிறோம்.
நிதி நிறுவனங்கள் ஒரு புராடக்டை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு சில நாட்களில் எந்த புராடக்டையும் உருவாக்க முடியும். அதிகபட்சம் மூன்று நாட்களில் புராடக்டை சந்தை படுத்த முடியும். அதேபோல, வாடிக்கையாளர்களின் அனுபவமும் மேம்படும். பத்து நிமிடத்தில் நிதி நிறுவனத்தின் வங்கியில் இருந்து தனிநபரின் வங்கிக்கு கடன் கிடைத்துவிடும். அதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் தனிநபர்கள் கிடையாது. நிறுவனங்கள் மட்டுமே.
“இப்போதைக்கு 50க்கும் மேற்பட்ட வங்கிகள் / நிதி நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். எங்களது புராடக்டை பயன்படுத்தும் நிறுவனங்கள் எங்களுக்கு பணம் கொடுப்பார்கள். இப்போதைக்கு 70 முதல் 80 சதவீத வருமானம் இந்தியாவில் இருந்து வருகிறது. மிதமுள்ளவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது,” என்றார்.
இந்தியாவின் விதிமுறைகளும் வெளிநாடுகளின் விதிமுறைக்கும் வித்தியாம் என்ன? என்று கேட்டதற்கு கடனை பொறுத்தவரை தகுதியானவர்களுக்கு கடன் வழங்கப்படும். இந்தியாவில் சிபில் இருப்பது போல ஒவ்வொரு நாடுகளிலும் ஒரு விதிமுறை இருக்கிறது. அதனால் பெரிய வித்தியாசம் என எதுவும் இல்லை என்றார்.
உங்களுடைய உதாரணங்களில் தனிநபர் கடன் என்று குறிப்பிட்டு சொல்கிறீர்களே அனைத்து விதமான கடன்களுக்கும் ஒரே விதிமுறைகள்தானே என்னும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார்.
“தனிநபர் கடன் குறுகிய கால கடன், ஆனால் வீட்டுக்கடன் நீண்டகால கடன். அந்த கடனை செலுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும். அதேபோல, தொழில்கடன் முற்றிலும் வேறு, அங்கு ஜிஎஸ்டி, வரிதாக்கல் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய வேண்டும் என்பதால் தனித்தனி புராடட்க்டாக உருவாக்கிறோம்.”
தற்போது நல்ல வருமானம் ஈட்டும் அளவில்தான் நிறுவனம் இருக்கிறது. இருந்தாலும் அடுத்தகட்ட விரிவாக்கம் மற்றும் புதிய புராடக்ட்களுக்கு நிதி தேவை என்பதால் அடுத்த கட்ட நிதியில் கவனம் செலுத்திவருகிறோம். விரைவில் நல்ல செய்தி சொல்லுவோம் என்றார்.
தற்போது 45 நபர்கள் பணியில் இருக்கிறார்கள். அனைவரும் இந்த புராடக்ட்களில்தான் கவனம் செலுத்துகிறோம். ஃபின்டெக் என்பது வேகமாக வளர்ந்துவரும் பிரிவு. இன்னும் பல வாய்ப்புகள் இருக்கிறது என்று மணிபார்த்தசாரதி முடித்தார்.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…