முன்னணி மேக் இன் இந்தியா நிறுவனங்களில் ஒன்றான இ-கான் சிஸ்டம்ஸ் (e-con Systems) அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் விரிவாக்கம் செய்வதற்காக ரூ.100 கோடி (USD 13M) பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. ராதாகிருஷ்ணன் குருசாமி தலைமையிலான GR 2022 Holdings Inc நிறுவனம் இந்த நிதியை அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பெடட் விஷன் சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் இ-கான் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த நிதியை, இமேஜிங், தானியங்கி மொபைல் ரோபோ, தானியங்கி ஷாப்பிங், செல்லுலார் மற்றும் மாலிகியூலார் இமேஜிங் கோர் லைப்ரரி ஆகியவற்றுக்கான அதி நவீன வசதிகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இ-கான் சிஸ்டம்ஸ், சோனி, Onsemi, Omnivision உள்ளிட்ட முன்னணி சென்சார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் லென்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் Commonlands மற்றும் Corning, ஐஎஸ்பி பாண்டர்கள் NVIDIA , Socionext உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும், ஹோஸ்டிங் சேவை வழங்கும் NVIDIA, NXP, Qualcomm ஆகிய நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது.
நிறுவனம் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் எம்பெடட் விஷன் சேவை, தீர்வுகளில் தனது உலக முன்னிலையை வலுவாக்கிக் கொள்ளவும், வருவாயை மூன்று மடங்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
”GR 2022 Holdings Inc நிறுவனத்திடம் இருந்து இந்த நிதி கிடைப்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது. இது எங்கள் வளர்ச்சி திட்டத்தை வேகமாக்கி, எம்பெடட் விஷன் சேவை, தீர்வுகளில் தனது உலக முன்னிலையை வலுவாக்கிக் கொள்ள உதவும்,” என்று இ-கான் சிஸ்டம்ஸ் இணை நிறுவனர், துணைத்தலைவர் மகாராஜன் வீரபாஹு தெரிவித்துள்ளார்.
“இந்த நிதி எங்கள் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தி, எம்பெடட் விஷன் சந்தையில் புதுமையாக்கத்தை உத்வேகம் பெறச்செய்யும் எங்கள் திறனை மேம்படுத்த உதவும். இயந்திரங்கள் தங்களைச்சுற்றியுள்ள உலகை புரிந்து கொள்ள அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதில் ஈடுபாடு கொண்டுள்ளோம்,” என்று இணை நிறுவனர் மற்றும் தலைவர் அசோக் பாபு குஞ்சுகண்ணன் தெரிவித்துள்ளார்.
“இ-கான் சிஸ்டம்ஸ் அற்புதமான பொறியாளர்கள் மற்றும் சேவைகள் கொண்ட நிறுவனம். இதன் சேவைகள் உலகின் முன்னணி நிறுவனங்களால் விரும்பப்படுகின்றன. நிறுவனம் வலுவான புதுமையாக்க கலாச்சாரம் கொண்டுள்ளது அதிநவீன நுட்பத்தில் முன்னிலையில் திகழ வைத்துள்ளது,” என்று GR 2022 Holdings Inc நிறுவனத்தின் ராதாகிருஷ்ணன் குருசாமி தெரிவித்துள்ளார்.
இந்த பரிவர்த்தனைக்கான பிரத்யேக ஆலோசகராக EY செயல்பட்டுள்ளது.
“e-con Systems, எம்பெடட் விஷன் கேமாராக்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட குழு. பல்வேறு துறைகள் தானியங்கிமயமாகி வரும் நிலையில், நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. ஆய்வு பணிகளில் தொடர்ந்து முதலீடு செய்வது இந்தத் துறையில் முன்னிலையை வலுவாக்கிக் கொள்ள உதவும்,” என்று EY பாட்னர் கார்த்திக்.எச் தெரிவித்துள்ளார்.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…