சென்னையில் உற்பத்தி ஆகும் எலக்ட்ரிக் ‘மோட்டார் பைக்’ – Raptee இ-பைக் உருவானது எப்படி?

சாலைகளில் தற்போதெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆனால், நாம் பார்க்கும் வாகனங்கள் அனைத்துமே ஸ்கூட்டர்கள் மட்டுமே. மோட்டார் பைக்குகளில் முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வரவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப வருகிறது ’ராப்டி’ (Raptee) நிறுவனத்தின் வாகனம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே அவற்றையெல்லாம் யார் வாங்குவார்கள் என்னும் சந்தேகம் இருந்தது. ஆனால், இன்று பொதுமக்களிடையே மின்சார வாகனங்களுக்கு ஒரு அக்செப்டன்ஸ் உருவாகி இருப்பதை காண முடிகிறது.

சாலைகளில் தற்போதெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆனால், நாம் பார்க்கும் வாகனங்கள் அனைத்துமே ஸ்கூட்டர்கள் மட்டுமே. மோட்டார் பைக்குகளில் முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களும் வரவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப வருகிறது ’ராப்டி’ (Raptee Energy) நிறுவனத்தின் வாகனம்.

போரூரில் மூன்று ஏக்கரில் ஆலை அமைக்கவுள்ள இந்நிறுவனம். இதற்காக 85 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய இருக்கிறது. மத்திய மாநில அரசுகளிடம் இருந்து 3.5 கோடி ரூபாய்க்கு மேல் கொடை பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே, சிறிய தொகையை முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடாக பெற்ற இந்த நிறுவனம், அடுத்த கட்ட நிதியை இறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்கள் இருக்கும் சூழலில் ராப்டி நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் அர்ஜூன் உடன் பேசினேன். படிப்பு வேலை அடுத்தகட்ட திட்டம் என்பது உள்ளிட்ட பல வின்ஷயங்களை பேசினார்.

நிறுவனர் பின்னணி

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தினேஷ். அப்பா, அம்மா இருவருமே ஆட்டோமொபைல் இன்ஜினீயர்கள். அதனால் இவருக்கும் அதிலே ஆர்வம். புரொடக்‌ஷன் இன்ஜினீரியங் படித்தார். படிக்கும்போதே ஒரு சிறிய நிறுவனம் தொடங்கினார். படித்து முடிக்கும்போது ராயல் இன்பீல்டு நிறுவனத்தின் கிடைத்த தொடர்பு காரணமாக ராயல் என்பீல்டு ஷோரூம் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் மற்றொரு ஷோரூம் திறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவற்றை நடத்தி கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் purdue பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு தினேஷுக்கு கிடைத்தது. ஷோரூமை அப்பாவிடம் கொடுத்துவிட்டு படிக்கச் சென்றுவிட்டார். படித்து முடித்த பிறகு, டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்த அவர், 9 மாதங்கள் மட்டுமே அங்கு இருந்தார். திரும்பி வருவதில் ஆர்வமாக இருந்ததால் டெஸ்லாவில் இருந்து விலகி இந்தியா வந்தார்.

Raptee தொடக்கம்

அமெரிக்காவில் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் கிடைத்த அனுபவம் மற்றும் ஆர்வம் காரணமாக 2019-ம் ஆண்டு Raptee எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினார் தினேஷ்.

Raptee எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் தயாரிக்க நிறுவப்பட்ட நிறுவனம். எல்லாரும் சந்தையில் மின்சார ஸ்கூட்டர் தயாரித்து விற்பனை செய்யும்போது, நீங்கள் ஏன் மோட்டர் பைக் அதுவும் 250cc-க்கு நிகரான மின்சார பைக் தயாரிப்பில் இறங்கினீர்கள் என்று கேட்டவுடன் ஒட்டுமொத்த இவி சந்தை குறித்து நம்மிடம் கூறினார் தினேஷ்.

”இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஓட்டுவது மோட்டார் சைக்கிள்தான். ஆனால், 250cc என்பது பிரத்யேகப் பிரிவு. எப்போதும் ஒரு புராடக்டை மாஸ் சந்தைக்கு அறிமுகம் செய்வதை விட குறிப்பிட்ட சந்தையில் கவனம் செலுத்தும்போது கவனம் கிடைக்கும். இதில் வெற்றி அடைந்த பிறகு சிறிய சிசி வாகனங்களில் கவனம் செலுத்தலாம்,” என்றார்.

இதுவரை இவி (electric vehicle) சந்தை எப்படி இருந்தது என்றால் ஐசி இன்ஜின் சுற்றுச்சுழலுக்கு கேடு அதனால் மின்சார வாகனங்களுக்கு மாறுங்கள் என்பதுதான் சந்தையாக இருந்தது. இவி வாகனத்தின் வசதியும் சரியாக இருக்காது. அதே சமயம், விலையும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட வாகனத்தை ஏன் மக்கள் வாங்க வேண்டும்? மோட்டர் சைக்கிளில் சென்றவர்கள் ஏன் மொபெட்டுக்கு மாற வேண்டும்? என இப்படியெல்லாம் எங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டோம். அதன் விளைவே Raptee.

இதனை மாற்ற வேண்டும் என நினைத்தோம். இவி-யின் விலையும் வசதியும் தற்போது இருப்பதை விட மேம்பட்ட சூழலாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினோம். தவிர நாங்கள் தயாரித்த வாகனம் முழுவதும் இந்தியாவிலே தயாரானது.

மேலும், தற்போதைய சூழலில் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தை பொது இடங்களில் சார்ஜ் ஏற்றுவது சிரமம். காரணம் இரு சக்கர வாகனத்தின் சார்ஜ் ஏற்றும் பின்னும் கார்களை சார்ஜ் ஏற்றும் பின் இரண்டும் வேறு.

”அனைத்து இடங்களில் சார்ஜ் ஏற்றுவதற்கு வசதியாக எங்களுடைய வாகனத்தை மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டோம்.  தற்போது எங்கெல்லாம் இவி கார்களை சார்ஜ் ஏற்ற முடியுமோ அங்கெல்லாம் எங்களுடைய இரு சக்கர வாகனத்தை சார்ஜ் ஏற்ற முடியும்,” என்றார் தினேஷ்.

உற்பத்தி திறன்

தற்போது ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களுடைய வாகனங்கள் விற்பனைக்கு வரும். எங்களுடைய ஆலை ஆண்டுக்கு 1.08 லட்சம் வாகனங்கள் தயாரிக்க முடியும். ஆனால், நாங்கள் சோதனை அடிப்படையில் 8,000 வாகனங்கள் மட்டுமே தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த வாகனங்கள் எப்படி சாலையில் செயல்படுகிறது என்பதை பொறுத்து உற்பத்தியை அதிகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தற்போது சுமார் 40 ஊழியர்கள் Raptee-வில் உள்ளனர். ஆலையில் 470 பணியாளர்கள் வரை இருப்பார்கள். இவர்களை வேலைக்கு எடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

“இப்போது நாங்களே சொந்தமாக ஷோரூம் தொடங்க இருக்கிறோம். இந்தியாவின் ஆறு இடங்களில் தொடங்க இருக்கிறோம். இதன் வெற்றியை பொறுத்து டீலர்ஷிப் எப்படி கொடுப்பது என்று முடிவெடுப்போம். எங்களுடைய வாகனங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு எந்தவிதமான சர்வீஸும் தேவைப்படாது என கணிக்கிறோம்.”

40,000 கிலோமீட்டர் வரை எந்த சிக்கலும் இல்லாமல் வாகனத்தை பயன்படுத்த முடியும் என்பதை எங்கள் ஆய்வுகளில் தெரிகிறது. இருந்தாலும் சந்தைக்கு வாகனத்தை அனுப்பினால்தான் என்ன நடக்கிறது என்பது தெரியவரும். அதேபோல, சில எலெக்ட்ரிக் வாகனங்களை மலைகளில் செலுத்தும்போது சிக்கல் வருவதாகக் கேள்விப்பட்டோம். ஆனால், எங்கள் வாகனங்களில் அந்த சிக்கல் இல்லை என்று தினேஷ் கூறினார்.

நிதி முதலீடு குறித்த கேள்விக்கு, கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியிடுகிறோம். ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனம் சந்தையில் இருக்கும், என தினேஷ் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வாகனம் சந்தைக்கு வரவில்லை. இது காலதாமதம் இல்லையா என்று கேட்டதற்கு,

“இந்தத் துறைக்கு இதுவே குறுகிய காலம். மேலும், நான்கு ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் செலவில் மட்டுமே இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பதே பெரிய விஷயம்,” என தினேஷ் தெரிவித்தார்.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

5 days ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

1 week ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

2 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

2 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago