மாதம் 1.8 கோடி ரூபாய்க்கு மீன்களை விற்பனை செய்யும் Freshma – மீன் விற்பனைப் பிரிவில் வளரும் ஸ்டார்ட்-அப்!

மீன்கள் மட்டுமே விற்கும் நிறுவனங்கள் என்பது மிகவும் குறைவு. இந்த பிரிவில் Freshma ஸ்டார்ட்-அப் தனித்துவமாக செயல்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் மிக மிக அதிக நபர்கள் இருக்கிறார்கள். இறைச்சி என்பது மிகப்பெரிய சந்தை. ஆனால், இந்தப் பிரிவில் டெக்னாலஜியின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இப்போதுதான் இந்த துறையில் ஒரு சில நிறுவனங்கள் வந்துள்ளன.

சில நிறுவனங்களுக்கு முதலீடு கிடைத்திருக்கிறது. இறைச்சி என்பது மிகப்பெரிய பிரிவாக இருந்தாலும் மீன் வகைகளை மட்டுமே விற்கும் நிறுவனங்கள் என்பது மிகவும் குறைவு. இந்த பிரிவில் ’ஃபிரெஷ்மா’ (FRESHMA) தனித்துவமாக செயல்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பரந்தாமன் உடன் உரையாடினோம். அவர் பிரெஷ்மா குறித்து விரிவாக நம்மிடம் பேசினார்.

Freshma தொடக்கம்

நான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தாலும் என்னுடைய நண்பர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ்குமார்தான் இதற்கு முக்கியக் காரணம். இவர் மீன்வளத்துறையில் பணியாற்றிவர். அதனால் மீன்கள் குறித்து நல்ல புரிதல் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் ’ஆர்.ஆர்.கே’ என்னும் பெயரில் மீன்கள் மட்டும் விற்பனை செய்யத் தொடங்கினார்.

தற்போது முகப்பேர், அண்ணாநகர், கௌரிவாக்கம், அடையார், அம்பத்தூர் உள்ளிட்ட நகரின் சில இடங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் பல இடங்களிலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.

”2016-ம் ஆண்டு முதல் ரீடெய்ல் பிரிவில் செயல்பட்டுவந்தாலும் கோவிட் முக்கியமான திருப்புமுனையாக மாறியது. ரீடெய்ல் ஸ்டோர்கள் இருந்தாலும் செயலி இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என திட்டமிட்டார். நான் டெக்னாலஜியில் பணிபுரிந்ததால் இந்த செயலியின் வடிமைப்பதற்காக நான் அவருடன் இணைந்தேன்,” என்றார் பரந்தாமன்.

2016ம் ஆண்டு முதல் கடைகள் என்னும் அளவில் இருந்தது. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆர்.ஆர்.கே. ரீடெய்ல் பிரிவேட் லிமிடெட் என்னும் நிறுவனமாக மாற்றினோம். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளில் இயங்குதளங்களில் எங்களுடைய செயலியை கொண்டுவந்தோம்.

“கொண்டுவந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எங்கள் செயலியை டவுன்லோட் செய்திருக்கிறார்கள். இதில் கோவையில் மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட டவுண்லோடு நடந்திருக்கிறது.

இதன்மூலம் தற்போது முக்கியமான டி2சி நிறுவனமாக மாறி இருக்கிறோம். ஆரம்பத்தில் ’ஃபிஷ்மா’ என பெயர் வைக்கலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், மீன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட பிரஷ்னெஷ்க்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பதால் Freshma எனப் பெயரிட்டோம் என பரந்தாமன் கூறினார்.

மட்டன், சிக்கன் போன்றவற்றை எளிதாக விற்பனை செய்ய முடியும். ஆனால், மீன்களின் பிஸினஸ் மாடல் என்ன என்னும் கேள்விக்கு பதில் அளித்தார் பரந்தாமன்.

“மக்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்னும் பட்சத்தில் தரம் சரியாக இல்லை என்றால் விரைவாக வெளியேறிவிடுவார்கள். அதே சமயத்தில் மக்களுக்கு வாய்ப்புகளும் கொடுக்க வேண்டும். மற்ற கடைகள் அல்லது இணையதளங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மீன் வகைகள் கிடைக்கும். எங்களிடம் புதிய மற்றும் எந்தவிதமான கெமிக்கல் கலப்பும் இல்லாமல் மீன்கள் கிடைக்கும்.”

இதுதவிர முக்கியமான நகரங்களில் எங்களுக்கான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கான மீன்களை வாங்கி தினமும் எங்களுக்கு அனுப்பி விடுவார்கள். நீங்கள் ஆர்டர் செய்தபிறகுதான் நாங்கள் மீன்களை சுத்தம் செய்வோம். வாடிக்கைகள்யாளர் ஆர்டர் செய்ததும் ஒரு மணி நேரத்தில் மீன்களை டெலிவரி செய்துவிடுகிறோம், என விளக்கினார்.

நிதிசார்ந்த தகவல்கள்?

நிதிசார்ந்த தகவல்கள் குறித்து கேட்டதற்கு,

“மாதம் 35,000 நபர்கள் கடைக்கு வருகிறார்கள். எங்களுடைய மொத்த வருமானத்தில் 70 சதவீதம் எங்களுடைய ஸ்டோர்கள் மூலமாகவும். 30 சதவீதம் ஆன்லைன் மூலமாகவும் வருகிறது. மாதம் 1.8 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருக்கிறது,” என்றார்.

எங்களுடைய ஆன்லைன் டெலிவரி தற்போதைக்கு சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதர நகரங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல, சென்னையில் மட்டுமே எங்களுடைய ஸ்டோர்கள் உள்ளன. அடுத்தகட்டமாக கோவை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரஙக்ளில் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டிருக்கிறோம் என பரந்தாமன் கூறினார்.

நிதி திரட்டும் திட்டம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு இதுவரை எங்களுடைய சொந்த நிதியிலே வளர்ந்துவருகிறோம். நிதி திரட்டும் திட்டம் இருக்கிறது. பல முதலீட்டாளர்களிடம் பேசி வருகிறோம். இன்னும் சில மாதங்களில் நிதி திரட்டும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம, என்றார். இந்த நிதி விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

மீன் சந்தை என்பது பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. ஆண்டுக்கு 10 சதவீதக்கு மேல் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எங்களிடம் டெக்னாலஜி, துறை சார்ந்த அனுபவம் மற்றும் ரீடெய்ல் அனுபவம் இருப்பதால் மீன்கள் விற்பனையில் முக்கியமான இடத்தை தொடுவோம் என பரந்தாமன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு சிறிய பிரிவை எடுத்துக்கொண்டு அதில் மொத்த அனுபவத்தையும் செலுத்த வேண்டும் என்பது வெற்றியடைந்த தொழில்முன்வோர்கள் கூறுவார்கள். இதற்கேற்ப மீன்கள், டெக்னாலஜி என புதிய காம்போவில் ஃபிரெஷ்மா இறங்கி இருக்கிறது. முதலீடு கிடைக்கவும் அடுத்தகட்ட வெற்றிக்கும் வாழ்த்துகள்.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago