நாட்டிலேயே முதல்முறையாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மலைவாசஸ் தலத்தை கோடிகளைக் கொட்டிக்கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
டார்வின் பிளாட்ஃபார்ம் குழும நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஹரிநாத் சிங், இந்தியாவிலேயே முதன் முறையாக புனேவில் உள்ள லாவாசா என்ற மலை வாசஸ்தலத்தை விலைக்கு வாங்கி, அதில் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டார்வின் குழுமம் சில்லறை விற்பனை, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் மற்றும் ரிலையன்ஸ் கேபிட்டலின் ஏலத்தில் கூட பங்கேற்றது.
யூனியன் வங்கி, எல்&டி ஃபைனான்ஸ், ஆர்சில், பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்நிறுவனத்திற்கு முக்கிய கடன் வழங்குநர்களாக உள்ளனர்.
புனே அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முல்ஷி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள லவாசா 2010ல் இந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஐரோப்பிய பாணி நகரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. லாவாசா கார்ப்பரேஷன் வார்ஸ்கான் ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் நகரின் உள்கட்டமைப்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், லாவாசா கார்ப்பரேஷன் நிறுவனம் கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை எனக்கூறி, ராஜ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் இந்தியா நிறுவனம் திவால் மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் கடன் வழங்குபவர்களின் நிபந்தனைகளை அஜய் ஹரிநாத் சிங் உறுதியளித்ததை அடுத்து சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.
இதனையடுத்து, ‘லவாசா’வில் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்ய தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
நாட்டின் முதல் தனியார் மலைவாசஸ்தலமான ‘லவாசா’வில் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்ய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், டார்வின் பிளாட்ஃபார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (DPIL) நிறுவனத்திற்கு கிரீன் சிக்னல் அளித்துள்ளது.
நூற்றுக்கணக்கான வாங்குபவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, டார்வின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு லாவாசாவில் பிளாட்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதியாளர்களின் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக முடிவெடுத்த பிறகு, டார்வின் நிறுவனம் சமர்ப்பித்த திட்டத்திற்கு NLCT ஒப்புதல் அளித்தது. கடன் வழங்குபவர்கள் ரூ. 929 கோடி, வாடிக்கையாளர்களுக்கு வீடுகள் கட்ட ரூ.438 கோடி, 837 முன்பணமாக ரூ. 409 கோடி என எட்டு ஆண்டுகளில் ரூ.1,814 கோடி செலவிடப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கடனளிப்பவர்கள் மற்றும் செயல்பாட்டுக் கடன் வழங்குபவர்கள் உட்பட நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த செலவு ரூ.6,642 கோடி ஆகும். டார்வின் நிறுவனம் முழுமையாக கட்டப்பட்ட வீடுகளை வாங்குபவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, லாவாசாவில் வீடு வாங்க ஆசைப்படுவோர், கட்டுமான செலவில் ஒரு பகுதியை டார்வின் நிறுவனத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும்.
கையகப்படுத்தப்பட்டுள்ள மலைவாசஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகள், லாவாசாவிற்கு புதுப்பொலிவழிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கட்டுமான செலவினங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நான்கு பேர் கொண்ட குழுவையும் சட்ட தீர்ப்பாயம் முன்மொழிந்துள்ளது.
மும்பை பல்கலைக்கழக முன்னாள் மாணவரான அஜய் ஹரிநாத் சிங், 2009ல் டார்வின் குழுமத்தை நிறுவினார், இது இப்போது 11 நாடுகளில் 11க்கும் மேற்பட்ட துறைகளில் 21 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. பிசினஸ் டுடே அறிக்கையின்படி,
$8.4 பில்லியன் (ரூ. 68,000 கோடிக்கு மேல்) மதிப்புடையதாக கணிக்கப்பட்டுள்ள அஜய் ஹரிநாத் சிங் குழும நிறுவனங்களின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முக்கிய ஏலத்திலும் இந்நிறுவனம் பங்கெடுத்துள்ளது. இந்தியாவின் முதல் தனியார் மலைவாசஸ்தலமான லவாசாவின் உள்கட்டமைப்பு பணிகளை சீரமைப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…