ஆப்பிள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் தயாரித்து அளிக்கும் ‘ஜபில்’ (Jabil) நிறுவனம் தமிழ்நாட்டின் திருச்சியில் 2,000 கோடி ரூபாயில் மின்னணு உற்பத்தி ஆலை அமைக்கிறது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அமெரிக்காவில் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை முதல்வர் சந்தித்து பேசி வருகிறார்.
முதல்வர் அமெரிக்க பயணத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.
இந்நிலையில், ஆப்பிள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் தயாரித்து அளிக்கும் ஜபில் நிறுவனம் தமிழ்நாட்டின் திருச்சியில் ரூ.2,000 கோடியில் மின்னணு உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
ஜபில் நிறுவனம்; ஆப்பிள், சிஸ்கோ மற்றும் எச்பி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த புதிய ஆலை திருச்சியில் ரூ.2,000 கோடியில் அமைகிறது. இந்த ஆலை 5000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனப்பாறை அருகே இந்த ஆலை அமைய உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆலைகள் கொண்டுள்ளன. இந்நிலையில், ஜபில் நிறுவனமும் இணைகிறது. இந்த புதிய ஆலை திருச்சியை மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டமேஷன் நிறுவனம் ரூ.666 கோடியில் விரிவாக்க பணியில் ஈடுபட இருப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது 365 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது மத்திய தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தஞ்சை ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் என்றும் மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்பத்தூர் மற்றும் ஓசூருக்கு அடுத்தபடியாக, மூன்றாவது மின்னணு உற்பத்தை மையம் மத்திய பகுதியில் உருவாக இது உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…