இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கேபிசி எனச் சுருக்கமாக குறிப்பிடப்படும் ‘கௌன் பனேகா குரோர்பதி’ (Kaun Banega Crorepati – KBC) நிகழ்ச்சி. இந்தியில் இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் பிரிவின் 15வது சீசனில் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் 14 வயது சிறுவன் ஒருவர
Friday December 01, 2023,
3 min Read
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கேபிசி எனச் சுருக்கமாக குறிப்பிடப்படும் ‘கௌன் பனேகா குரோர்பதி’ (Kaun Banega Crorepati – KBC) நிகழ்ச்சி. இந்தியில் இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் பிரிவின் 15வது சீசனில் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் 14 வயது சிறுவன் ஒருவர்.
நம்மில் பலருக்கு விக்ரமன் படத்தில் வருவது போல் ஒரு பாடலில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சிதான் இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறினால், கோடீஸ்வரன் ஆகி விடலாம்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் அவ்வளவு சுலபமானதாக இருக்காது. அதனாலேயே இறுதிகட்டம் வரை வந்துகூட, வெறும் கையோடு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஏராளம். அதேசமயம், அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலைக்கூறி, கோடி ரூபாய் பரிசை வென்றவர்களும் உண்டு.
அந்த வரிசையில், ‘கேபிசி ஜூனியர்’ வீக் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி, ஒரு கோடி ரூபாய் வென்று அசர வைத்திருக்கிறார் மயங்க் என்ற 14 வயது சிறுவன். மேலும், இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் 1 கோடி ரூபாய் வென்ற முதல் சிறுவன் (ஜூனியர்) என்ற சாதனைக்கும் மயங்க் சொந்தக்காரராகியுள்ளார்.
18 வயதிற்குப்பட்டவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் இந்த கேபிசி ஜூனியர் வீக் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இறுதிகட்டம் வரை கலந்து கொண்டு, அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தால், 7 கோடி வரை பரிசை வெல்ல முடியும்.வெற்றிகரமான 14 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் 15வது சீசன் நடைபெற்று வருகிறது. இதனையும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மயங்க் என்பவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கும் அசராமல் பதிலளித்து, அமிதாப்பை அசர வைத்த மயங்க், கூடவே ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் வென்றார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் சிறுவர்கள் யாரும் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றதில்லை. எனவே, ரியாலிட்டி ஷோவில் ஒரு கோடி பரிசு வென்ற முதல் சிறுவன் என்ற சாதனையையும் மயங்க் படைத்துள்ளார். நிகழ்ச்சியில் மயங்க் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாக பதில் அளித்த விதத்தைப் பாராட்டி, கூடுதலாக அவருக்கு ஹூண்டாய் ஐ20 காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் வென்றது குறித்து மயங்க் கூறுகையில்,
“இந்நிகழ்ச்சியில் எனது அறிவை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு என்னை ஊக்கப்படுத்திய அமிதாப் பச்சன் சாருக்கும், அவருடன் அமர்ந்து விளையாட வாய்ப்பளித்தவர்களும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் தருணத்தில் என்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இவ்வளவு பெரிய தொகையை வென்ற இளையப் போட்டியாளர் என்பது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெருமை அளிக்கிறது,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மயங்கின் தந்தை பிரதீப் டெல்லியில் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். தாய் இல்லத்தரசி ஆவார். மயங்க் இந்த சாதனையைப் படைத்ததற்கு பின்னணியில் பல ஆண்டு உழைப்பு இருந்துள்ளது. அதாவது, குரோர்பதி நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான பிரதீப், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயங்களில் எல்லாம் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து, தன்னைத் தானே போட்டியாளராக பாவித்துக் கொண்டு, அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கமாம்.
அந்த சமயங்களில் தந்தையோடு அமர்ந்து, குரோர்பதி நிகழ்ச்சியைப் பார்த்து மயங்க்கிற்கும் பொது அறிவு கேள்விகளில் ஆர்வம் வந்துள்ளது. எனவே, அவரும் தந்தைக்கு போட்டியாக கேள்விகளுக்குப் பதில் சொல்லுவாராம். பெரும்பாலும் இந்த அப்பாவும், மகனும் சொல்லும் பதில்கள் சரியானதாகவே இருக்குமாம். சுமார் பத்து வருடங்களாக இப்படி மேற்கொண்ட பயிற்சியின் பலனாகத்தான் இன்று நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு வெற்றிக்கனியைப் பறித்துள்ளார் மயங்க்.
“ஜூனியர் லெவலில் மயங்க்கை கலந்து கொள்ள வைக்கலாம் என முடிவு செய்ததும், அதற்கான முன்னேற்பாடு பயிற்சி வேலைகளை ஆரம்பித்து விட்டேன். குரோர்பதி நிகழ்ச்சியின் மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்து, அதில் இருந்து ஒரு கொஸ்டின் பேங்க் தயார் செய்தேன். எனக்கு நிச்சயம் தெரியும் மயங்க் இதில் வெற்றி பெறுவார் என்று. தன் குழந்தை டிவியில் சாதனை புரிவதை பார்ப்பதைவிட ஒரு பெற்றோருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்,” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மயங்க்கின் தந்தை பிரதீப்.
படிப்பில் சராசரி மாணவராக இருந்து வரும் மயங்க்கிற்கு விளையாட்டிலும் ஆர்வம் அதிகமாம். எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்ற திட்டம் எதுவும் இப்போதைக்கு எதுவும் இல்லை எனக் கூறும் மயங்க்கிற்கு இயற்பியலும், வேதியியலும்தான் பிடித்தமான பாடங்களாம். அதனால், பொறியியல் படித்து ஏதாவது புதுமையாக படைக்கலாம் என்ற ஆசை இருக்கிறதாம்.
“குரோர்பதி நிகழ்ச்சிக்கு என் தந்தை எழுதிக் கொடுத்த குறிப்புகளைப் படித்துத் தான் தயார் ஆனேன். என் தந்தையை நான் மிகவும் நம்பினேன். இந்த நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்தே, அதன் தீவிர ரசிகராகவும், கூர்ந்து அதனைக் கண்காணிப்பவராகவும் அவர் இருந்து வருகிறார். எனவே, அவர் தயார் செய்து கொடுத்த குறிப்புகள் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தபோதும் தினசரி செய்திகளை வாசிப்பது மற்றும் கூடுதலாக பொது அறிவு வினாக்களை படிப்பதையும் தொடர்ச்சியாக செய்து வந்தேன். அதனால்தான் எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் சரியாக பதிலளிக்க முடிந்தது,” என தன் வெற்றிக்கான சூத்திரத்தைக் கூறுகிறார் மயங்க்.
இந்த சிறிய வயதில் தனது அறிவுக்கூர்மையால் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற மயங்க்கிற்கு, சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அவரது சொந்த கிராமத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, பாராட்டு விழா அளிக்கவும் மக்கள் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…