எந்தத் துறையிலும் இப்படிப்பட்ட சில கதைகள் உள்ளன. அதாவது, ஒன்றுமேயில்லாமல் ஆரம்பித்து பெரிய தொழிலதிபராகும் திறமைசாலிகளின் கதை பலரையும் ஊக்க்குவிப்பதாகும். ‘மை ஹோம் குழுமம்’ (My Home Group) நிறுவனர் ராமேஷ்வர் ராவின் வாழ்க்கை அப்படிப்பட்ட அகத்தூண்டுதலுக்கான ஒரு கதையாகும்.
1955-ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்தான் ராமேஷ்வர ராவ். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் வாழ்க்கை இவருக்கு பெரும் கடினப்பாடாகவும் சவாலாகவும் அமைந்தது. அடிப்படை போக்குவரத்து வசதிகூட இல்லாததால் பள்ளிக்கு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை.
ஆனால், சிறுவயதில் கஷ்டத்தை அனுபவிக்கும்போது ஏற்படும் மன உறுதியும் முன்னேற வேண்டும் என்ற வெறியும் வசதியாகவே பிறந்து வளர்பவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ராமேஷ்வர் ராவின் கதை அப்படிப்பட்டதான ஒரு கதை.
1974-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவப் படிப்புக்காக ஹைதராபாத்தில் குடியேறிய ராமேஷ்வர ராவ் தில்சுக் நகரில் ஒரு ஹோமியோபதி கிளினிக்கை நிறுவினார். இருப்பினும், அவரது லட்சியங்கள் மருத்துவத் துறைக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டன.
வணிக புத்திசாலித்தனத்தின் தீவிர உணர்வால் உந்தப்பட்ட ராவ், 1980-களின் மத்தியில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். இவரிடம் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் பலர் ரியல் எஸ்டேட் முகவர்களாக இருந்ததால் அவர்களுடன் உரையாடியதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் வாய்ப்புகளை கண்டுணர்ந்தார்.
சுமார் 50,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டில், ராமேஷ்வர் ராவ் விரைவில் ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த துணிச்சலான நடவடிக்கை ஒரு பரந்த வணிக சாம்ராஜ்ஜியமாக மாறுவதற்கான தொடக்கத்தை அறிவுறுத்தியது.
1980-களின் பிற்பகுதியில் அவர் ஹைதராபாத்தில் ‘மை ஹோம்’ குழுவை நிறுவினார். ரியல் எஸ்டேட், சிமென்ட் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தினார்.
மை ஹோம் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பிரிவான மஹா சிமென்ட்டை நிறுவியது ராவின் தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல். இந்த முயற்சி அவரது தொழில்முனைவோர் மனப்பான்மையை மட்டுமல்ல, அவரது வர்த்தக உத்திக்கான தொலைநோக்கு பார்வையையும் வெளிப்படுத்தியது.
மஹா சிமென்ட் பின்னர் தென்னிந்தியாவின் மிகப் பெரிய சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. மை ஹோம் குழுமத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியது.
இன்று ராமேஷ்வர ராவின் நிகர சொத்து மதிப்பு வியக்க வைக்கும் வகையில் $1.3 பில்லியன் (தோராயமாக ரூ.11,000 கோடி) ஆக உள்ளது.
எளிமையான ஹோமியோபதி மருத்துவராக இருந்து ஒரு பில்லியனர் தொழிலதிபராக அவர்
பயணித்ததன் எளிய எடுத்துக்காட்டாக இன்று விளங்குகிறது.
ராமேஷ்வர் ராவின் கதை வெறும் நிதியளவிலான வளர்ச்சியை மட்டுமே காட்டுவதல்ல. மாறாக, அவரது கதையானது தடைகளைத் தாண்டுதல், வாய்ப்புகளைத் தழுவுதல் மற்றும் லட்சியக் கனவுகளின் இடைவிடாத நாட்டம் ஆகியவற்றைப் பேணும் ஒரு ஊக்கக் கதையாகும்.
ஒருவர் தனக்குத் தெரிந்த தொழிலில்தான் இறங்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ராவ் என்ன செய்தார்? தன் ஹோமியோ கிளினிக்கில் வரும் நோயாளிகளுடன் உரையாடியதன் மூலம் தன் ரியல் எஸ்டேட் அறிவை வளர்த்துக் கொண்டு தைரியமாக அதில் முதலீடு செய்து இறங்கினார். இது அவரது அசாதாரண வெற்றியாக அமையும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஆகவே, நோக்கத்தில் லட்சியமும் நடத்தையில் நேர்மையும் உத்தியில் சாதுரியமும் உழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றிப் படிக்கட்டுகளை அனாயசமாக ஏறி உச்சம் தொட முடியும் என்பதற்கு ராமேஷ்வர ராவ் கதை போன்ற வேறு கதை உண்டா என்று தெரியவில்லை.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…