நிப்பான் பெயின்ட் என்றாலே பெயிண்ட் நினைவுதான் நம் அனைவருக்கும் வரும். ஆனால், பெயிண்ட் அல்லாத ‘கன்ஸ்டரக்ஷன் கெமிக்கல்’ (Construction chemical) பிரிவில் நிப்பான் பெயிண்ட் களம் இறங்கி இருக்கிறது.
பெயின்ட் பிரிவிலே பெரிய வாய்ப்புகள் இருக்கும்போது ஏன் இந்த விரிவாக்கம் என நிப்பான் பெயின்டின் டெகரேட்டிவ் பிரிவு தலைவர் மகேஷ் ஆனந்த் இடம் கேட்டபோது,
“ஒவ்வொரு பெயின்ட் நிறுவனங்களும் வழக்கமாக செய்வதுதான். ஒரு கட்டுமானத்தில் பெயின்ட் அடிப்பதற்கு முன்பாகவும் பெயின்ட் அடிப்பதற்கு பின்பும் நிறைய தேவைகள் இருக்கின்றன. இது போன்ற ப்ராடக்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.12,500 கோடி அளவில் உள்ளது. நாம் பெயின்ட் மட்டுமே விற்றுக்கொண்டிருப்பதால் பெரிய அளவுக்கான சந்தையை இழக்கிறோம். இந்த சந்தையை ஏன் இழக்க வேண்டும் என்பதற்காக இந்த பிரிவை உருவாக்கினோம்,” என்றார்.
இதில் கவனம் செலுத்துவதினால் பெயிண்ட் பிரிவில் கவனத்தை குறைக்கிறோம் என புரிந்துகொள்ளக் கூடாது. பெயிண்ட் பிரிவை நன்றாக கவனித்தால்தான் இந்தப் பிரிவில் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என மகேஷ் ஆனந்த் கூறினார்.
ரிப்பேர், பராமரிப்பு, வாட்டர்பூருப், இதர கெமிக்கல்கள் என 120க்கும் மேற்பட்ட புராடக்ட்கள் எங்களிடம் உள்ளன. இதில், சில புராடக்ட்களை எங்களுடைய நிறுவனம் வேறு நிறுவனங்களை வாங்கியதன் மூலம் எங்கள் வசம் வந்தது எனக் குறிப்பிட்டார்.
மேலும், எங்களுடைய புதிய புராட்க்ட்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்பதால் வாடிக்கையாளர்களிடம் எளிதாக புரிய வைத்துவிடுகிறோம்.
“தற்போது எங்களுடைய மொத்த விற்பனையில் 15 சதவீதம் வரை பெயிண்ட் அல்லாத பொருட்களின் விற்பனை இருக்கிறது. வரும் காலத்தில் இந்த சதவீதம் உயரும் என்றே நம்புகிறோம். இது எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுடைய டீலர்கள், எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் என அனைவருக்குமே பெரிய வாய்பாக இருக்கும்.”
எங்களுடன் பெரிய எண்ணிக்கையிலான பெயிண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை பெயிண்ட் தொடர்பான பயிற்சி மட்டுமே வழங்கினோம். சமீபத்தில் இந்த கட்டுமான மெட்டீரியல்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் கற்றுக்கொடுக்கிறோம்.
உதாரணத்துக்கு பெயிண்ட்களுக்கு வாட்டர்பூருப் செய்ய கற்றுக்கொடுக்கிறோம். இதுபோல டைல் ஒட்டுபவர்கள், மேஸ்திரிகள் என அனைவருக்கும் எதாவது ஒருவகையிலான பயிற்சியை வழங்குவோம், என மகேஷ் ஆனந்த் கூறினார்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…