Ola Electric-ன் நிறுவனங்களுக்கான முதல் பங்கு வெளியீட்டில் பெருநிறுவனங்களிடமிருந்து 2 பில்லியன் டாலர்கள் வரை முதலீட்டு ஏலத்தை ஈர்த்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று சில்லரை முதலீட்டாளர்களுக்காக பங்குகளை வெளியிடுகிறது ஓலா.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முதல் பங்கு வெளியீட்டில் பெருநிறுவன முதலீட்டாளர்களுக்காக நிர்ணயித்த ஒதுக்கீடு 330 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் செய்திகளின் படி, சாஃப்ட் பேங்க் ஆதரவில் இயங்கும் மின் வாகன நிறுவனமான ஓலா நோமுரா வங்கி மற்றும் பிற இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கியது.
நோமுரா மற்றும் நார்ஜஸ் வங்கிக்கு முறையே 24 மில்லியன் டாலர்கள் பங்குகளை அளித்தது. எஸ்பிஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் முறையே 30-36 மில்லியன் டாலர்கள் பங்குகளைப் பெற்றன. நேற்று பெருநிறுவன பங்கு வெளியீட்டை முடித்த நிலையில், இன்று சில்லரை முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனையை நடத்துகிறது. இவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை பங்கு ஒதுக்கீடு நடைபெறும்.
ஒரு பங்கின் விலை ரூ.72 முதல் ரூ.76 வரை நிர்ணயித்த ஓலா, ஐபிஓ மூலம் $734 மில்லியன் திரட்ட திட்டமிட்டுள்ளது. இணை நிறுவனர் மற்றும் விளம்பரதாரர்-விற்பனை பங்குதாரர் பாவிஷ் அகர்வால் 3.79 கோடி ஈக்விட்டி பங்குகளையும், விளம்பரதாரர் குழுவான இண்டஸ் டிரஸ்ட் 41.79 லட்சம் ஈக்விட்டி பங்குகளையும் OFS இல் விற்கும்.
5,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் 84 மில்லியன் பங்குகள் வரை விற்பனைக்கான ஆஃபரும் வழங்கப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தாக்கல் செய்த ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸின்படி, மார்ச் 31,2024-ல் முடிந்த ஆண்டில் ரூ.1,584 கோடி நஷ்டமடைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 1,472 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகர்வால் கூறுகையில்,
“உற்பத்தி பெருகும் போது நிறுவனம் செலவுகளைக் குறைப்பதை நம்பியிருக்கிறது. மேலும், உள்ளேயே தயாரிக்கப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகளினால் வருவாயையும் லாபத்தையும் உயர்த்த முடியும்,” என்றார்.
ஆனால், நிறுவனம் எப்போது லாபத்தின் பாதைக்குத் திரும்பும் என்பதை அகர்வால் தெரிவிக்கவில்லை.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…