இந்தியாவிலேயே மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி ஆலை அமைக்கும் பணியை ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி இருசக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓலா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தது.
ரூ.7,614 கோடிக்கு முதலீடு செய்வதாக கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி ஓலா கார்கள், பேட்டரி போன்றவை உருவாக்கப்படும் எனக்கூறப்பட்டது.
இதில் குறிப்பாக பேட்டரி தொழிற்சாலை உருவாக்கத்திற்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டும் என்றும், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்கு ரூ.2500 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜிகா தொழிற்சாலையை தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைப்பதற்கான பணிகளை ஓலா நிறுவனம் தொடங்கியுள்ளது. 20 GWh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ஏனெனில், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு முக்கியமான லித்தியம்-அயன் பேட்டரிகள் பெருமளவில் உற்பத்தி செய்யவதன் மூலமாக வாகனங்களின் விலையை குறைத்து, விற்பனையை அதிகரிக்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆலைக்கு நிறுவனம் ‘ஜிகாஃபேக்டரி’ எனப் பெயர் வைத்திருக்கின்றது. இதன் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருப்பதை ஓலா நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எங்கள் ஜிகா ஃபேக்டரியின் முதல் தூணை இன்று நிறுவியிருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இந்தியாவின் மின்மயமாக்கல் பயணத்தில் எங்கள் ஜிகா ஃபேக்டரி ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும், இது இந்தியாவை உலகளாவிய EV மையமாக மாற்றுவதற்கு உதவும்,” எனத் தெரிவித்துள்ளார்.
115 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள ஓலா ஜிகாஃபேக்டரி அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. முதலில் 5 ஜிகாவாட் திறனுடன் தொடங்க உள்ள பேட்டரி உற்பத்தி படிப்படியாக 100GWh வரை உயர்த்தப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
முழு திறனுடன் செயல்படத் தொடங்கும் போது, தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய செல் உற்பத்தி வசதிகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Ola செல் மற்றும் பேட்டரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் முதலீடு செய்துள்ளது மற்றும் பெங்களூரில் மேம்பட்ட செல் ஆர் & டி வசதிகளில் ஒன்றை அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நிறுவனம் மிகப்பெரிய மின்சார வாகன மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.
அதில் மேம்பட்ட பேட்டரி மற்றும் மின்சார வாகன உற்பத்தி வசதிகள், விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்கா மற்றும் மின்சார வாகனங்களுக்கான துணை சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…