எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் நன்கறிந்த தொடர் தொழில் முனைவோர்களான வீர் மிஸ்ரா மற்றும் ராஜ் பிரகாஷ் தங்கள் அம்மாக்கள் சேமிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியை எப்போதும் உருவாக்க விரும்பினர்.
“நிதிநுட்பத் துறையில் இல்லத்தலைவிகளுக்கு இருந்த இடைவெளி நன்கறியப்பட்ட நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு சில மாதங்களிலேயே, இப்பிரிவில் செயலாக்கம் பெறும் உத்தி, இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு சரியாக வராது என உணர்ந்தோம்,” என்கிறார் யுவர்ஸ்டோரியிடம் வீர் மிஸ்ரா.
2022ல் இந்திய இல்லத்தலைவிகள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவை பார்த்த போது தான் திருப்பு முனை உண்டானது என்கிறார்.
“இந்த தரவுகள் மூலம் 62 சதவீத இல்லத்தலைவிகள் தங்கம் அல்லது தங்க நகை வாங்கி அதை ஒரு சேமிப்பாக கருதுவதும், மற்றும் இந்த முதலீட்டை நம்பகமான சொத்து வகையாக கருதினர் என்பதையும் கவனித்தோம்,” என்கிறார்.
குடும்பத்தலைவிகள் தங்கள் குடும்பங்களுக்காக தங்கத்தை சேமிக்கின்றனர் என நிறுவனர்கள் பகிர்ந்தனர்.
பெண்கள் தங்களுக்கு நம்பகமான நகைக் கடைகளின் நகைத்திட்டத்தில் பங்கேற்கின்றனர் என்றும் இதில் தெரிந்தது.
“கடந்த ஓராண்டில் மட்டும், இந்தியாவில் இத்தகைய நகை வாங்கும் திட்டங்களில் ரூ.35 ஆயிரம் கோடி திரட்டப்பட்டது. அதனால், இந்த சந்தையை டிஜிட்டல்மயமாக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்த்தியது,” என்கிறார் ராஜ்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் அவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனம் பிறந்தது.
’பிளஸ்’ ‘Plus’ இந்தியாவின் முதல் தங்க நகை சேமிப்பு செயலி என்கின்றனர். இதில், பயனாளிகள் நம்பகமான நகைk கடைகளை கண்டறிந்து தங்கள் அடுத்த தங்க நகைக்காக சேமிக்கத்துவங்கலாம், என்கின்றனர்.
“ஒரு தீர்வாக, எங்கள் செயலி மூலம் நகை வாங்கும் திட்டத்தை டிஜிட்டல்மயமாக்கும் போது, இந்தப் பிரிவில் முதலில் நுழைந்த சாதகம் உண்டாகிறது. பயனாளிகள் பல்வேறு நகைக் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே செயலியில் பல்வேறு நகைத் திட்டங்களை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்யலாம்,” என்கிறார் ராஜ்.
“லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்க நகை வாயிலாக தங்கள் சேமிப்பை திட்டமிடும் நிலையில், திட்டமிடல்,. சேமிப்பிற்கு அவர்களுக்கு சிறந்த பரிசு கிடைப்பதை ’பிளஸ்’ உறுதி செய்ய விரும்புகிறது. இது நகைக்கடைப் பிரிவில் இருக்கும் பெரிய பழக்கமாகும். இந்த பழக்கம் தொடர்பானதை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் பிளஸ் அமைகிறது, என்கிறார் ராஜ்.
பிளஸ் ஆப் அறிமுகமாகி, முதல் வாரத்தில் ஆயிரம் முறை டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது. இரு வார காலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் 2500 முறை டவுன்லோடு செய்யப்பட்டது.
18 ஆண்டு நகை பிரண்டான ’பியோனா டைமண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து முன்னோட்ட திட்டத்தை நடத்தி வருகிறது. மேலும், சில பாரம்பரிய நகைக் கடை நிறுவனங்கள் மற்றும் தினசரி நகை உருவாக்குனர்களுடனும் நிறுவனம் பேசி வருகிறது. வரும் மாதங்களில் இவர்கள் செயலியில் இணைய உள்ளனர்.
“பியோனாவுடனான முன்னோட்டம் முடிந்து பீட்டா வடிவில் வெளியாக உள்ளோம். பின்னர், மற்ற பார்ட்னர்களுடன் இணைந்து சேவை வழங்குவோம்,” என்கிறார்.
வர்த்தக மாதிரி பற்றி பேசும் போது செயல் பயனாளிகளுக்கு இலவசம் என்றும், நகைக் கடை நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் பெறப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
மேலும், பிளஸ், JITO Angel Network தலைமையில் குறிப்பிடப்படாத நிதியை திரட்டியுள்ளது. இந்தச் சுற்றில் வென்சர் கேட்டலிஸ்ட், வீபவுண்டர்சர்கிள், மற்றும் அதிக மதிப்புள்ள தனிநபர்கள் பங்கேற்றனர். சேவை வளர்ச்சி மற்றும் நியமங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
“JITO Angel போன்ற நிறுவனத்தின் ஆதரவு நிறைய நம்பகத்தன்மையை அளிக்கிறது. மேலும், செயலியில் நிறைய உள்ளடக்கமும் இடம்பெற உள்ளது. இதன் மூலம் செயலியை பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கும்,” என்கிறார் ராஜ்.
இந்த ஸ்டார்ட் அப் 8 முதல் 12 மாதங்களில் மொத்த பரிவர்த்தனை அளவு மூலம் ரூ.100 கோடி எட்ட திட்டமிட்டுள்ளது.
“தங்களிடம் உள்ள உபரி பணத்தை நகை வாங்க பயன்படுத்தும் பாரம்பரியமான இந்தியர்கள் ஈர்க்ககூடிய திட்டமாக இது உள்ளது, என்கிறார் JITO Angel Network முதன்மை முதலீடு அதிகாரி பூஜா மேத்தா.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி | தமிழில்: சைபர் சிம்மன்
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…