வீட்டுப் பொருட்கள் வாடகை ‘Rentomojo’ மூலம் வில் கல்லா கட்டும் சென்னை ஐஐடி பட்டதாரிகள்!

புதுமையான சிந்தனைக்கும், வணிக உத்தி செயல்பாட்டின் சாதுரியத்துக்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளது ‘ரெண்டோமோஜோ’ (Rentomojo) ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வெற்றிக் கதை.

‘ரென்டோமோஜோ’வின் வெற்றி ஆச்சரியப்பட வைப்பதாகும். ஏனெனில், வீட்டுக்கு வேண்டிய ஃபர்னிச்சர் உள்ளிட்ட சாதனங்கள், பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதை, அதாவது ‘ரென்ட்டிங்’ என்பதை ஒரு லாபகரமான வர்த்தக மாதிரியாக மாற்றியுள்ளது.

அதாவது, பாரம்பரிய உரிமை என்ற ஒன்றுக்கு எளிமையான நடைமுறை, செலவு குறைந்த மாற்று வழியை வழங்குவதன் மூலம் ‘ரென்டோமோஜோ’ லாபம் ஈட்டுவது மட்டுமின்றி, நெகிழ்வுத்தன்மையைத் தழுவிக்கொள்ள ஆர்வமுள்ள நம்பிக்கையான வாடிக்கையாளர் தளத்தையும் உருவாக்குகிறது.

2014-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி-யில் பட்டம் பெற்ற கீதன்ஷ் பமானியா, அஜய் நைன் ஆகியோர் நாம் எப்படி ஃபர்னிச்சர்கள் மற்றும் வீட்டுச் சாதனப் பொருட்களை வாங்குகிறோம் என்பதில் புரட்சியைப் புகுத்தினர். ஆனால், பொருட்களை வாடகைக்கு விடும் சாதாரண நிறுவனம் எப்படி இந்த ‘ரென்ட்டிங்’ என்பதை லாபம் தரும் ஒரு தொழிலாக மாற்றினர் என்பதில்தான் இருவரது உழைப்பும், சிந்தனையும் அடங்கியுள்ளது.

வெற்றியின் ரகசியம் என்ன?

‘ரென்டோமோஜோ’வின் தொடக்கமானது அதன் நிறுவனரான கீதன்ஷ் பமானியாவின் தனிப்பட்ட அனுபவங்களால் உருவான யோசனையாகும். அவர் இங்கிலாந்தில் தங்கியிருந் போது அன்றாடப் பொருட்களை குத்தகைக்கு விடுவதற்கான நடைமுறைச் சாத்தியம் மற்றும் அதன் சுலபத்தன்மைகளை ஆராய்ந்தார்.

ஆரம்பத்தில் பொம்மைகளை வாடகைக்கு விடும் சேவையைப் பற்றி சிந்தித்தார். பிறகு. ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோக பிற சாதனங்களில் அவருக்கு இருந்த நிபுணத்துவம்தான் ‘ரென்டோமோஜோ’வின் பிறப்பாக அமைந்தது.

வர்த்தகத்துக்கான கருத்தாக்கத்தில் இருந்து யதார்த்த நிலவரங்களுக்குத் திரும்பும் இத்தகு மாற்றம் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடுதலில் ஒரு பெரிய சந்தை இருப்பதை அவர் கண்டார்.

மேலும், இந்தச் சந்தை மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள், மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் யாரும் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மேலும், குறைந்த வாடகைக்குக் கொடுப்பதன் மூலம் சந்தையில் ஆதிக்கம் செலுத்துபவர்களை இடையூறு செய்ய முடியும் என்பதையும் இருவரும் உணர்ந்தனர்.

அதாவது, ஃபர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக அதிவிலை பொருட்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது வாடிக்கையாளர்களின் பெரிய சுமையான இ.எம்.ஐ. என்னும் மாதாந்திர தவணையிலிருந்து பெரிய விடுதலை அடைவார்கள் என்பதை ரென்டோமோஜோ தன் வர்த்தக அடிப்படையாகக் கொண்டது.

ஃபர்னிச்சர்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகச் சாதனங்கள், சாமான்களை குத்தகைக்கோ, வாடகைக்கோ விடுவதற்காக இவர்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தனிச் சொத்து கொண்டவர்கள் ஆகியோரை தங்கள் வர்த்தகக் கூட்டாளிகளாக இணைத்துக் கொண்டனர். இதனால், செலவு குறைந்து நிறுவனம் அபரிமித வளர்ச்சியை விரைந்து கண்டது.

ஸ்ட்ரீம்கள் மூலம் வருவாய்

1. ஃபர்னிச்சர் மற்றும் ஃபிக்சர்ஸ் வாடகை: ‘ரெண்டோமோஜோ’வின் வருமானத்தில் கணிசமான பகுதியானது, சோஃபாக்கள் மற்றும் மேஜைகள் முதல் கட்டில்கள், படுக்கைகள் மற்றும் பலவற்றின் வீட்டு உபயோகப் பொருட்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் பெறப்படுகிறது.

2. மறு வாடகை: தாங்கள் குத்தகைக்கோ, வாடகைக்கோ எடுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை இவர்களும் மறு குத்தகைக்கு விடலாம் என்பது பெரிய கவர்ச்சிகரமான திட்டமாக ‘ரெண்டோமோஜோ’வுக்கு அமைந்தது. இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கத் தொடங்கியது.

3. மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்: டெலிவரி, நிர்மாணம், பராமரிப்பு மற்றும் திரும்பப் பெறுவதற்கான விருப்பங்களை வழங்குகின்றன. ஒவ்வொன்றும் கூடுதல் கட்டணம் கொண்டவை.

ரென்டோமோஜோ நிறுவனம் அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது, அதன் வாடிக்கையாளர் தளத்தை செயல்பட்ட இரண்டே ஆண்டுகளில் 1,000 முதல் 150,000 வரை விரிவுபடுத்தியுள்ளது.

ரெண்டோமோஜோவின் அற்புதமான வளர்ச்சியைக் கண்டு Accel Partners, Bain Capital மற்றும் Chiratae வென்ச்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இவர்கள் மூலம் சுமார் $60.6 மில்லியன் நிதி திரட்டப்பட்டது.

நல்ல அடித்தளத்தை அமைத்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால் ரெண்டொமோஜோ நிறுவனம் இந்தத் துறையில் வரும் ஆண்டுகளில் உச்சத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Nucleus_AI

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

5 days ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

1 week ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

2 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

2 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago