குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதர – சகோதரியான பார்த் மற்றும் கரிஷ்மா தலால் ஆகியோர் கரும்புச் சக்கைகள், பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த காலணிகளை தயாரித்து அசத்தி வருகின்றனர். இதில் நல்ல வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 35 கோடி ஜோடி காலணிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்த மக்காத கழிவாகிப் போன காலணிகள் நிலப்பரப்புகளிலும் பெருங்கடல்களிலும் குப்பையாகச் சேர்ந்து நமது சுற்றுச்சூழலை அச்சுறுத்துகின்றன.
இங்குதான் குஜராத்தைச் சேர்ந்த பார்த் மற்றும் கரிஷ்மா தலாலின் முயற்சி ஆச்சரியமான ஒன்றாக இருப்பதோடு, நீண்ட காலமாக அதிக கார்பன் வெளியேற்றத்துடன் தொடர்புடைய பாதணி உற்பத்தித் தொழிலை மறுவரையறை செய்ய தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்க ஒரு சிறந்த யோசனையைக் கொண்டு வந்தனர்.
இந்நிலையில்தான் 2023 மே மாதம் பார்த் மற்றும் கரிஷ்மா என்ற உடன்பிறப்புகள் ‘ரீரூட்’ ‘(Reroute) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர்.
கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு கரும்புச் சக்கை மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றைக் கொண்டு காலணிகள் தயாரிக்க முடிய முடியும் என்பதை நிரூபித்தனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத காலணிகளைத் தயாரிக்க முடியும் என்று காட்டினர். இதை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கினர்.
“நாங்கள் 100 சதவிகித கார்பன் – விடுபட்டத் தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பூமியின் நிலப்பரப்பில் இருந்து கரும்புச் சக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற கழிவுகளை முதலில் குறைத்து, பின்னர் இந்தக் கழிவுகளை காலணித் தயாரிப்பில் பயன்படுத்தி, அதன் இரண்டாவது சுழற்சிக்கு உயிர் கொடுப்பதே எங்கள் யோசனை,” என்று பார்த் மற்றும் கரிஷ்மா விவரிக்கின்றனர்.
சில மாதங்களில், பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடையே இந்தக் காலணிகள் பிரபலமடைந்தன. ஒரே மாதத்தில் மட்டும் 400 ஜோடி காலணிகள் விற்றுள்ளது.
குஜராத்தில் பணக்கார வர்க்கத்தினரிடையே குறுகிய காலம் பயன்படுத்திய பிறகு காலணிகளை தூக்கி எறியும் கலாச்சாரம் இருந்ததே பார்த் மற்றும் கரிஷ்மா ஆகியோரின் இந்த முயற்சிக்குத் தூண்டுகோலாக இருந்துள்ளது. இவர்கள் மற்றும் இவர்களது தந்தையுடனான ஒரு சாதாரண உரையாடலில் உதித்ததே ‘ரீரூட்’ என்னும் நிறுவனமாகும்.
சூரத்தில் பிறந்து வளர்ந்த பார்த், 2016-ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஃபார்மஸியில் முதுநிலைப் படிப்பைத் தொடரச் சென்றார். அதன்பிறகு, அவர் மருந்து நிறுவனங்களில் பணிபுரிந்தார், ஆனால் 2019-இல் கோவிட்-19 தொற்றுநோய் தாக்குவதற்கு முன்பே, அவர் இந்தியா திரும்பி விட்டார்.
பார்த் கூறும் போது,
“என் தந்தை குஜராத்தின் சமுக பணக்கார வட்டங்களுடன் பரிச்சயம் உள்ளவர். வசதியான குடும்பங்கள் காலணிகளைப் பயன்படுத்தாமல் அவற்றை நிராகரிக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் விவரித்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். காலணிகளை விரயமாகத் தூக்கி எறிவதால் நிலப்பரப்புகளில் காலணிகள் குவியலாகி சுற்றுச்சூழலை அச்சுறுத்துகின்றன,” என்று கூறினார்.
அப்போதுதான் பார்த் மற்றும் கரிஷ்மா நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, அருமையான பினிஷிங் செய்யப்பட்ட காலணிகளை தயாரிக்க முடிவு செய்தனர்.
‘ரீருட்’ காலணிகளை வழக்கமான தோல் அல்லது ரப்பர் ஷூக்கள் போல அல்லாமல் மறுசுழற்சி செய்யலாம். தங்களது இந்த உற்பத்தி குறித்து பார்த் மேலும் கூறியது:
“இந்த ஷூக்கள் பழையதாகிவிட்டால், அவற்றைப் புதுப்பித்து, தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்குவது அல்லது எங்கள் தந்தை நினைத்தது போல, அவற்றை மறுசுழற்சி செய்து புதிய தயாரிப்புகளைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்கிறார்.
பார்த் மற்றும் கரிஷ்மா தலால் போன்றோரின் முயற்சி சுற்றுச்சூழலை நாசமாக்கும் பொருட்களின் உற்பத்தியின் காலக்கட்டத்தில் நம்பிகை நட்சத்திரமாக விளங்குகிறது.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…