நடிகர் அரவிந்த் சுவாமியை ஒரு வெற்றிகர தொழிலதிபராக உங்களுக்குத் தெரியுமா?


பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரஜினி, மம்மூட்டி நடித்த மெகா ஹிட் ‘தளபதி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

மகாபாரத இதிகாசத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரமாக ரஜினி உருவகிக்கப்பட, அர்ஜுனன் கதாபாத்திரம் போல் அந்தப் படத்தில் அரவிந்த் சாமி உருவகிக்கப்பட்டார். மாக்-எப்பிப் (Mock Epic) என்ற வகையில் இதிகாசக் கதாபாத்திரங்கள் சமூக வயமாக்கப்பட்ட அந்த சித்தரிப்புகள் பெரும் விமர்சனப் பாராட்டுகளை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இது அரவிந்த் சாமியின் திரைத்துறைப் பயணத்துக்கு அடித்தளம் அமைத்தது.

இந்தி, மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். தொடர்ந்து ‘மணிரத்னம் ஹீரோ’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அவருடன் இணைந்து ‘ரோஜா’ (1992), ‘பம்பாய்’ (1995) போன்ற படங்களில் நாயகனாக நடித்தார் அரவிந்த் சுவாமி. 1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சாரக் கனவு’ படமும் மெகா ஹிட்.

இந்தத் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், தொழில்துறையில் ஒரு முக்கிய நடிகராக அரவிந்த் சுவாமியின் அந்தஸ்தையும் உறுதிப்படுத்தியது.

ஆரம்ப வெற்றிகள் மெகா வெற்றிகளாக இருந்தபோதும் திரைத்துறை தர்க்கத்திற்கேற்ப 90-களின் பிற்பகுதியில் தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை என்பதால் அரவிந்த் சுவாமி சவால்களை எதிர்கொண்டார்.

வர்த்தக உலகில் வல்லவர்!

திரைத்துறைக்கு வந்தாலும் அவர் தொடக்கத்திலிருந்தே வர்த்தக உலகில் தொடர்பு கொண்டவர்தான். அதனால், திரைத்துறைப் பின்னடைவு காலக்கட்டங்களில் அரவிந்த் சுவாமி மீண்டும் தன் வர்த்தகத் துறைக்கே திரும்பி அதிகவனம் செலுத்தத் தொடங்கினார்.

அரவிந்த் சுவாமி தனது தந்தையின் நிறுவனமான வி.டி. சுவாமி அண்ட் கம்பெனி (V D Swamy and Company) நிறுவனத்தை நிர்வகிப்பதில் தீவிர பங்கு வகித்தார். சர்வதேச வர்த்தகம் மற்றும் கட்டுமானத் தொழில்களில் தொடர்ந்து ஈடுபட்டார்.

2000-ஆம் ஆண்டில், InterPro Global-ன் தலைவரான அரவிந்த் சுவாமி, மேலும் Prolease India-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகி, பரிவர்த்தனை செயலாக்கத்தில் ஈடுபட்டார்.

2005-ஆம் ஆண்டில், பணியாளர்கள் ஊதியப் பட்டியல் நிகழ்முறையாக்கம் மற்றும் தற்காலிக பணியாளர்களை நியமிப்பது குறித்த நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமான ‘டேலன்ட் மேக்சிமஸ்’ Talent Maximus நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் அவர் தனது தொழில்முனைவோர் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை முன்னெடுத்தார்.

ஆனால், அப்போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. அவர் தனது கால் பகுதி முடக்கத்தை அனுபவித்தார். அத்துடன், பல ஆண்டுகளாக வலியால் அவதிப்பட்டார். சிகிச்சை மேலும் 4-5 ஆண்டுகள் நீடித்தது.

அரவிந்த் சுவாமியின் தலைமைத்துவ குணாம்சங்களினால் ‘டேலன்ட் மேக்சிமஸ்’ திறம்படச் செயல்பட்டதோடு, திரைத்துறை வெற்றியை வர்த்தகத் தொழில் வெற்றியாகவும் மாற்றிக் காட்டினார்.

2022-ஆம் ஆண்டளவில், அரவிந்த் சுவாமியின் நிர்வாகத்தின் கீழ், ‘டேலன்ட் மேக்சிமஸ்’ 418 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.3,300 கோடி) வர்த்தகத்துடன் வெற்றிகரமான தொழிலதிபர் என்ற அவரது நற்பெயரை வர்த்தக உலகிலும் நிலைநாட்டினார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘தனி ஒருவன்’ (2015) படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி தோன்றினார். அப்படம் மெகா ஹிட். அதன்பின், அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கினார்.

லயோலா கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பு படித்த அரவிந்த் சுவாமி பிறகு அமெரிக்கா சென்று அங்கு பன்னாட்டு வர்த்தகத்திலும் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, வர்த்தகம் அவர் கற்றுப் பெற்ற, கற்றுத் தெளிந்த அறிவு.

அரவிந்த் சுவாமியின் திரைத்துறைப் பயணத்திலும் வர்த்தக உலக பயணத்திலும் தடைகள் இடையூறுகள், விபத்துக்களால் முடக்கம் இருந்தாலும் இரண்டிலும் அவர் பெற்ற வெற்றி அவரது மன உறுதிக்கும் விடா முயற்சிக்கும் காரணியாக திகழ்கிறது

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago