தவறான நபருக்கு வீட்டை வாடகைக்கு விட்ட மோசமான அனுபவத்தில் பிறந்த Tenantcube!

ஆண்ட்ரூஸ் மோசஸ் தொடங்கிய Tenantcube சொத்து மேலாண்மை ஸ்டார்ட் அப் சொத்து உரிமையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான வாடகைதாரர்களைச் சென்றடைய உதவி முழுமையான தீர்வளிக்கிறது.

ஆண்ட்ரூஸ் மோசஸ் கனடாவில் தனது முதல் சொத்தை வாடகைக்கு விட்டார். அந்த சமயத்தில் வாடகைக்கு வைப்பவர்களை எப்படித் தேர்வு செய்யவேண்டும்; அவர்களின் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டும்; அவர்கள் நல்லவர்களா என்பன போன்ற விஷயங்களை அவர் அறிந்திருக்கவில்லை.

ஒருகட்டத்தில் கனடாவில் அவரது வீட்டில் வாடகைக்கு இருந்தவர் ஆயுதம் வைத்திருந்தார். போதைப் பொருட்களை வைத்திருந்தார். இந்த விஷயம் தெரிந்ததும் ஆண்ட்ரூஸ் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி மேலும் பலரிடம் பேசியபோதுதான் அவருக்கு ஒரு விஷயம் புரிந்த்து. அந்தப் பகுதியில் சொத்துகளை வாடகைக்கு விட்ட நில உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

சொத்து மேலாண்மை தீர்வுகளை வழங்கும் நிறுவனங்கள்கூட சிறிய சொத்துகளை வைத்திருக்கும் உரிமையாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பதில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.

“200 சொத்துகள் வைத்திருந்தால் உடனே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் என்று சொத்து மேலாண்மை தீர்வளிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தன. சிறியளவில் சொத்து வைத்திருக்கும் உரிமையாளர்களும் பிராபர்டி மேனேஜர்களும் வாடகைக்கு விடுவதற்கு உதவும் வகையில் சரியான டூல் இல்லை என்பது புரிந்தது,” என்கிறார்.

ஆண்ட்ரூஸ்; ஜோஹோ, ஃப்ரெஷ்வொர்க்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியவர். எனவே இந்த அனுபவத்தைக் கொண்டு 200-க்கும் குறைவான அளவில் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அல்லது பிராபர்டி மேனேஜர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று முடிவு செய்தார். இந்த முடிவில் உருவானதுதான் சொத்து மேலாண்மை ஸ்டார்ட் அப் TenantCube.

தொடக்கம்

ஆண்ட்ரூஸுக்கு ரியல் எஸ்டேட் துறை மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. கனடாவில் பத்தாண்டுகள் வசித்த நிலையில் அங்கு சொத்து வாங்கினார். வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்ததும் பலரை நேரடியாக பார்த்து பேசினார். சரியான நபரைத் தேர்வு செய்து விட்டதாக திருப்தியும் அடைந்தார்.

“சரியான நபரிடம் சொத்தை ஒப்படைத்திருப்பதாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். சில மாதங்களில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சரியான நபர் என நான் நினைத்தவர் ஒரு முன்னாள் குற்றவாளி. அதுமட்டுமல்ல அவர் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. அவர் என் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கேயே போதை செடி வளர்த்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழலிலிருந்து வெளியேற கடும் சிரமப்பட்டேன். பணத்தை மட்டுமல்ல நிம்மதியையும் தூக்கத்தையும் இழந்து தவித்தேன்,” என்று அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சொத்து உரிமையாளர்கள் பாதுகாப்பான, நம்பகமான வாடகைதாரர்களைச் சென்றடைய உதவும் தளத்தை உருவாக்க முடிவு செய்தார். சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் என இரு தரப்பினரும் பலனடையும் வகையில் செயல்பட நினைத்தார். சொத்துகளை வாடகைக்கு விடுவது தொடர்புடைய ஒட்டுமொத்த செயல்முறையையும் டிஜிட்டல்மயமாக்கத் தீர்மானித்தார்.

சந்தை இடைவெளி மற்றும் தீர்வு

“வட அமெரிக்க சந்தையில் 2.6 பில்லியன் டாலர் அளவில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். 200க்கும் குறைவான சொத்து அளவு வைத்திருப்போர்/நிர்வகிப்போர் இதில் அடங்குவர்,” என்கிறார் ஆண்ட்ரூஸ்.

வட அமெரிக்காவில் ரென்டல் துறையில் செயல்படுவது அதிக பொறுப்புகளையும் சுமையையும் உள்ளடக்கியது என விவரிக்கிறார். இந்தப் பகுதியைப் பொருத்தவரை சொத்து உரிமையாளர்களைக் காட்டிலும் வாடகைதாரர்களுக்கு அதிக உரிமை இருக்கும் என்பதால் இது சிக்கலை மேலும் அதிகமாக்கியதாகக் குறிப்பிடுகிறார்.

சொத்து உரிமையாளர்கள் பலர், வாடகைத் தொகையை சார்ந்திருப்பார்கள் என்பதால் சரியான வாடகைதாரர் கிடைப்பது மிகவும் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது.

சொத்து வாடகைக்கு விடப்படுவது தொடர்பான அத்தனை நிர்வாக செயல்பாடுகளும் மிக எளிதாக ஒரே தளத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே Tenantcube நோக்கம்.

“வாடகைதாரர்களில் கவனம் செலுத்தும் எங்கள் செயலியை முக்கியமான, தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இதைக் கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான சொத்துகளுக்கு விண்ணப்பிக்கலாம்,” என்கிறார்.

2019ம் ஆண்டு நிறுவப்பட்ட Tenantcube சொத்து உரிமையாளர்கள், பிராபர்டி மேனேஜர்கள், வாடகைதார்கள் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு முழுமையான, சிறந்த அனுபவத்தை வழங்க விரும்புகிறது. கவனத்தைப் பெறுதல், சரிபார்த்தல், இணைத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக்கொள்ளுதல் ஆகிய நான்கு நிலைகளை உள்ளடக்கியுள்ளது.

“நில உரிமையாளர்களுக்கும் மேலாளர்களுக்கும் பல்வேறு அம்சங்களில் உதவுகிறோம். அவர்கள் தங்களது சொத்துகளை எளிதாக மார்க்கெட் செய்யலாம். ஆன்லைன் ரென்டல் அப்ளிகேஷன் பெறலாம். டிஜிட்டல் ரீதியில் வாடகைதாரராக இணைத்துக்கொள்வதற்கு முன்பு அவர்களின் தகவல்களை சரிபார்க்கலாம். வாடகைத் தொகையை செலுத்தவும் தொடர்பில் இருக்கவும் ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறோம். எங்கள் தலைமையகம் கனடாவில் உள்ளது. ஆனால் எங்கள் டெவலப்மென்ட் டீம் சென்னையில் செயல்படுகிறது,” என்கிறார்.

பெருந்தொற்று கால சவால்கள்

கனடாவில் தலைமையகமும் தென்னிந்தியாவில் டெவலப்மெண்ட் குழுவும் செயல்படுவதால் ஆரம்பத்தில் சில சவால்கள் இருந்துள்ளன. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் Tenantcube புதிதாக குழுவை உருவாக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

“எங்களில் சிலரை நாங்கள் இதுவரைகூட நேரில் பார்த்துக்கொண்டதில்லை. எப்படி, எங்கிருந்து ஊழியர்களை பணியமர்த்துவது என்பதை முடிவு செய்யவேண்டியிருந்தது. 2019ம் ஆண்டில் SaaSBOOMi வருடாந்திர மாநாட்டிற்கு சென்றிருந்தோம். இது நாங்கள் முடிவெடுக்க பெரிதும் உதவியது. முக்கியக் குழு செயல்பட்ட தென்னிந்தியாவிலிருந்து திறமைமிக்கவர்களை பணியமர்த்தத் தீர்மானித்தோம்,” என்கிறார்.

சரியான குழுவை உருவாக்கிய பிறகு தினமும் ஆன்லைனில் மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பெருந்தொற்று சமயத்தில் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றியவர்களுடன் சிறப்பாக இணைந்திருந்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடிந்தது. தற்போது 14 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

”எங்கள் நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மைமிக்க கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். நிறுவனத்தைத் திறம்பட நடத்துவதற்கும் வளர்ச்சிக்கும் உதவும் ஆலோசனைகள் அனைவராலும் முன்வைக்கப்படுகின்றன. எங்கள் வளர்ச்சி இப்போது ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது,” என்கிறார் ஆண்ட்ரூஸ்.

சந்தை மற்றும் வருங்காலத் திட்டங்கள்

மென்பொருள் உருவாக்கும்போது சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பேப்பர் சார்ந்த பரிவர்தனைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதையே இக்குழுவினர் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

இருப்பினும், மக்கள் தங்களுக்குப் பழகிப்போன நடைமுறைகளிலிருந்து மாற அத்தனை எளிதில் சம்மதித்துவிடவில்லை. இதற்காக இக்குழுவினர் அதிகம் முயற்சி செய்திருக்கிறார்கள்.

“ஒரு வகையில் கோவிட் சூழல் எங்களுக்குக் கை கொடுத்தது. இன்று மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய தொழில்நுட்பம் உதவுகிறது. பேப்பர் சார்ந்த செயல்பாடுகளைக் கொண்ட ரெண்டல் துறையின் சவால்களைக் கடந்து செல்ல நாங்கள் உதவுகிறோம். வீட்டிலிருந்தே பாதுகாப்பாக அனைத்தையும் செயல்படுத்த உதவுகிறோம்,” என்கிறார்.

2025ம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை 650 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக IBEF தெரிவிக்கிறது.

மற்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் நிலையில் Tenantcube முழுமையான தீர்வளிப்பது அதன் சிறப்பம்சம் என்கிறார் ஆண்ட்ரூஸ்.

NestAway, Homigo, CoHo, Zenify போன்றவை ரெண்டல் மேலாண்மை பிரிவில் செயல்படும் இதர நிறுவனங்கள்.

“வட அமெரிக்காவில் 200 என்கிற அளவிற்கும் குறைவான சொத்து எண்ணிக்கைகளைக் கொண்ட உரிமையாளர்களை இலக்காகக் கொண்டிருக்கிறோம். நில உரிமையாளர்களுக்கு ஃப்ரீமியம் சேவையுடன் தொடங்குகிறோம். ஃபிளாட் பேஸ் மாதாந்திர கட்டணம் மற்றும் ஒரு யூனிட் (டோர்) கட்டணம் என்கிற அடிப்படையில் எங்கள் வணிக மாதிரி உருவாக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் ஆண்ட்ரூஸ்.

கனடாவில் இருக்கும் ஸ்ட்ராடெஜிக் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து Tenantcube 250,000 டாலர் தொகை நிதியைத் திரட்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சொத்து உரிமையாளர்கள் மற்றும் பிராபர்டி மேனேஜர்கள். இந்த முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 15,000 யூனிட்/டோர் அளவை நிர்வகிக்கின்றனர்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் மாத்ருபூதம், SuperOps.ai அர்விந்த் பார்த்திபன் போன்ற SaaS பிரிவில் உள்ள ஸ்ட்ராடஜிக் முதலீட்டாளர்களையும் இந்த ஸ்டார்ட் அப் இணைத்துக்கொண்டிருக்கிறது.

”50 இலவச வாடிக்கையாளர்களுடனும் கட்டணம் செலுத்தும் 5 வாடிக்கையாளர்களுடனும் நாங்கள் சமீபத்தில் எங்கள் பீட்டா வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். டெவலப்மெண்ட் குழுவை வலுப்படுத்தி எங்கள் தளத்தின் டெவலப்மென்டை நிறைவு செய்ய இருக்கிறோம்,” என்கிறார் ஆண்ட்ரூஸ்.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago