நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9 ) முன்னணி நட்சத்திரம் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இருந்து நிதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவன பயணத்தில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியின் முதலீடு முக்கிய மைல்கல்லாக அமைவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முக்கிய முதலீட்டாளர்களிடம் இருந்து ப்ரீ சீட் நிதியாக 2,00,000 டாலர் திரட்டிய டிக்கெட்9, தற்போது கிடைத்துள்ள வெளியிடப்படாத புதிய முதலீட்டை தனது தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுவாக்க பயன்படுத்திக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நட்சத்திர தம்பதியின் ஆதரவு டிக்கெட்9 நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று கருதப்படுகிறது.
“நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் முதலீடு பெறுவது உற்சாகம் அளிக்கிறது. அவர்களை முதலீட்டாளர்களாக வரவேற்கிறோம். எங்கள் நிறுவனத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் பொழுதுபோக்கு பரப்பில் எங்கள் ஈடுப்பாட்டை மேலும் உறுதியாக்கும்,” என்று டிக்கெட்9 சி.இ.ஓ யாழினி சண்முகம் கூறியுள்ளார்.
யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் பிரேம்ராஜ் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் டிக்கெட்9 கோவையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இவர்கள் எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டு, நிர்வகிக்க உதவும் சாஸ் மேடையாக விளங்குகின்றனர். தற்போது நிகழ்நேர நிகழ்ச்சிகளில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. பயனாளிகள் அருகாமை நிகழ்வுகளை கண்டறிய உதவுகிறது. எதிர்காலத்தில், திரைப்பட டிக்கெட் சேவையிலும் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் டிக்கெட்9 துடிப்பான நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் யூனிகார்னாக வளரும் என நம்பிக்கை உள்ளது,” என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
இந்தியாவில் பொழுதுபோக்குத் துறை வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பம்; மக்கள் நிகழ்ச்சிகளை அணுகும் விதத்தை மாற்றி அமைத்து வருகிறது. புதுமையான சேவை மூலம் இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில் நாங்களும் பங்களிக்கிறோம், என இணை நிறுவனர் சந்தோஷ் பிரேம்ராஜ் கூறினார்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…