ரெஸ்டாரன்ட்கள் Vs ஜோமேட்டோ – அதிக கமிஷன், பல அழுத்தங்களால் வலுக்கும் மோதல்!

உணவு டெலிவரி வர்த்தகத்தில் வளர்ச்சி குறைந்திருக்கும் சூழலில், ஜோமேட்டோ தனது வருவாயை விரிவாக்கி, செலவுகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, அதிக கமிஷனை நாடுவது தவிர, மார்கெட்டிங் பட்ஜெட் மற்றும் ஆர்டர் ரத்தாவதன் பொறுப்பை ரெஸ்டாரன்ட்களே ஏற்கச் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளது.

ஜோமேட்டோ நிறுவனம் அண்மையில் உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தியதோடு, தனது மேடையில் விளம்பரம் செய்வது மற்றும் ரத்தாகும் ஆர்டர்களின் செலவை ஏற்பது உள்ளிட்ட வகையில், ரெஸ்டாரன்ட்கள் மேலும் அதிகமாக செலவு செய்ய நிர்பந்தித்து வருகிறது.

உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜொமேட்டோ, உணவகங்கள் தனது மேடையில் மார்கெட்டிங் செலவை அதிகரிக்குமாறு அழுத்தம் தருகிறதாம். இது தொடர்பாக ஜோமேட்டோவுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள மூன்று பேர் தெரிவித்துள்ளனர்.

ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சிலர், ஜோமேட்டோவில் இருந்து வரும் வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தனது மேடையில் விளம்பரத்திற்காக செலவிடுமாறு வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.

“விளம்பரத்தில் மேலும் அதிகம் செலவிட்டால், அதிக காணும் தன்மை கிடைக்கும் மற்றும் செயலியில் இடம் மேம்படும்” என்று சொல்லப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ரெஸ்டாரன்ட் பாட்னர் ஒருவர் தெரிவித்தார்.

“இதன் பொருள் என்னவெனில், குறைந்தது 5 சதவீத வருவாயை விளம்பரத்தில் செலவிடாத பிராண்ட்களின் காணும் தன்மை பாதிக்கப்படும் என்பதாகும்” என்கிறார்.

கிளிக்கிற்கு ஏற்ற செலவு வகை விளம்பரங்கள், ரெஸ்டாரன்ட்கள் செயலி பக்கத்தில் முன்னிலை பெற உதவுகிறது. வீடியோ மற்றும் பேனர் பட்டியல் மூலம் விளம்பரம் செய்ய ஜொமேட்டோ வழி செய்கிறது. எனினும், தற்போது இது ரெஸ்டாரன்ட்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. ஜொமேட்டோ விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது எனத் தெரியவில்லை.

நிறுவனம் லாபத்தை இரட்டிபாக்கி, உணவு டெலிவரி சேவையில் வருவாய் சரிவை மாற்றி அமைக்க முயற்சிக்கும் நிலையில், அடுத்த சில மாதங்களில் ரெஸ்டாரன்ட் பாட்னர்களுடனான மோதல் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச தொகையை விளம்பரத்தில் செலவிடுமாறு ஜோமேட்டோ வலியுறுத்துவது ஒருவகையான நிர்பந்தமே என்று பெயர் குறிப்பிட விரும்பாத ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒருவர் கூறினார். ஜோமேட்டோ சந்தையில் தனது ஆதிக்க நிலையை கொண்டு நியாயமில்லாத கோரிக்கையை வைக்கிறது என்கிறார்.

இலக்கு வாடிக்கையாளர்கள், இடம் மற்றும் ஆர்டர்கள் தன்மை ஆகியவை அடிப்படையில் விளம்பரம் செய்வது என்பது ரெஸ்டாரன்ட்களின் விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும் என்கிறார்.

“ரெஸ்டாரன்ட் பாட்னர்கள் மார்க்கெட்டிங் செலவிட வேண்டும் என எந்தக் கொள்கையும் இல்லை” என்று இது தொடர்பான யுவர் ஸ்டோரி கேள்விக்கு நிறுவனச் செய்தி தொடர்பாளர் பதில் அளித்தார்.

“இருப்பினும், எங்கள் வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச வாடிக்கையாளர் அனுபவம் தக்க வைக்கப்படும் வகையில் சரியான செயல்பாடுகளை கொண்டிராத ரெஸ்டாரன்ட்களுக்கு (சைவ, அசைவ ஆர்டர்களை கலப்பவை, சுகாதாரம் மற்றும் தரம் பிரச்சனை கொண்டவை)  ஆதரவு அளிக்கும் கொள்கை இருக்கிறது. இது புதியது அல்ல” என்றும் அவர் கூறினார்.

ஆன்லைன் விலையை குறைக்குமாறு நிறுவனம் நிர்பந்திப்பதாகவும் ஒரு சில ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ரெஸ்டாரன்ட்கள், தள்ளுபடி மற்றும் செலவுகளை ஈடு செய்ய பொதுவாக ஆன்லைன் உணவுக்கு அதிக விலை கொண்டுள்ளன.

சேவைக் கட்டணங்கள்

தரம் தொடர்பான பிரச்சனை அல்லது ரெஸ்டாரன்ட் ரத்து செய்வது தவிர, ஆர்டர்கள் ரத்தாவதன் செலவை பொதுவாக ஜோமேட்டோ ஏற்கிறது. இது மொத்த ஆர்டர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானது.

இப்போது, ஆர்டர்கள் ரத்து மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு செலவை ஏற்குமாறு ஜோமேட்டோ நிர்பந்திப்பதாக மேலே குறிப்பிட்ட மூன்று பேர் தெரிவித்தனர். இந்த ரெஸ்டாரன்ட்கள் மோசமான ரேட்டிங் கொண்டுள்ளனவா அல்லது தரம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என்று தெரியவில்லை.

புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகள் கீழ், ஆர்டர் ரத்து செய்யப்படுவதற்காக தண்டிக்கப்படுவதாக 2021-ல் ரெஸ்டாரன்ட்கள் கவலை தெரிவித்திருந்தன. இந்த விதிகளை ஏற்காத ரெஸ்டாரன்ட்கள் நிறுவன மேடையில் இருந்து நீக்கப்படலாம்.

இந்த விதிமுறை எட்டு மாதங்களாக அமலில் இருப்பதாகவும், குறைந்த காலத்தில் சராசரியை விட அதிக ரத்து விகிதம் கொண்ட ரெஸ்டாரன்ட்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஜோமேட்டோ பதில் அளித்துள்ளது. யுவர் ஸ்டோரி பேசிய ரெஸ்டான்ட்கள் இதேபோன்ற விதிமுறைகள் மீண்டும் வரலாம் என தெரிவித்தன.

“இது பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம். தற்போது, அதிலும் குறிப்பாக நிறுவனம் கமிஷன் தொகையை அதிகரிப்பது பற்றி யோசிக்கும் நிலையில், இவை மீண்டும் வர வாய்ப்பில்லை” என பெயர் குறிப்பிட விரும்பாத ரெஸ்டாரன்ட் அதிகாரி ஒருவர் கூறினார்.

உணவு டெலிவரி வருவாயில் மந்த நிலைச் சூழல் மற்றும் லாபத்தில் கவனம் செலுத்தும் சூழலில் ஜோமேட்டோ தனது ரெஸ்டாரன்ட் பாட்னர்களிடம் அதிக கமிஷன் தொகை கோருவதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் உள்ள 5 லட்சம் ரெஸ்டாரன்ட்களுக்கான இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் சங்கம், அதிக தள்ளுபடி மற்றும் தரவுகள் மறைப்பு தொடர்பாக ஸ்விக்கி மற்றும் ஜோமேட்டாவுடன் மோதலில் உள்ளது. மேலும், போட்டி விரோத செயல்பாடு தொடர்பாக போட்டி ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளது.

“இத்தகைய தன்னிச்சையான விலை உயர்வு நியாயம் இல்லாதது மற்றும் சங்கம் இதை எதிர்க்கிறது” என சங்கத்தின் செயதி தொடர்பாளர் கூறியுள்ளார்.

டிசம்பர் காலாண்டில், குறையும் ஆர்டர்கள் கொள்ளளவு காரணமாக, சரிபார்க்கப்பட்ட வருவாயில் 0.1 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

“கடந்த அக்டோபர் முதல் துறை முழுவதும் உணவு டெலிவரி சேவையில் மந்த நிலை நிலவுகிறது. நாடு முழுவதும் இதே நிலைதான் என்றாலும், முன்னணி 8 நகரங்களில் அதிகம் உள்ளது” என்று வருவாய் அறிக்கையில் நிறுவன சி.எப்.ஓ. அக்‌ஷாந்த் கோயல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: செளமியா பாலசுப்பிரமணியன்

founderstorys

Share
Published by
founderstorys
Tags: zomato

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago