Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

மக்களின் சாதாரணப் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதற்குத் தீர்வு வழங்கும் பொருட்களைத் தயாரித்து லாபம் ஈட்டும் வர்த்தகப் புத்திசாலித்தனம் கொண்டவர் ராமச்சந்திரன்.

கேரள மாநிலத்தின் சிறிய நகரத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கி போட்டியும் சவாலும் நிறைந்த இந்திய எஃப்.எம்.சி.ஜி, அதாவது வேகமாக விற்கும் நுகர்வோர் பொருட்கள் துறையில் காலடி எடுத்து வைத்து, அதில் தன் முத்திரையைப் பதிக்க ‘உஜாலா’ (UJALA) மற்றும் மேக்சோ (MAXO) ஆகிய நுகர்வுப் பொருட்களை சந்தையில் இறக்கி தனது ‘ஜோதி லாப்ஸ்’ (Jyothy Labs) நிறுவனத்தை ஆண்டுக்கு ரூ.1800 கோடி வரத்தகம் செய்யும் நிறுவனமாக மாற்றியது எப்படி என்பது சுருக்கமாகப் பார்ப்போம்.

ராமச்சந்திரன் தன் சகோதரரிடமிருந்து ரூ.5,000-ஐ மட்டுமே கடனாகப் பெற்று தொழில் தொடங்கினார். 1983-ஆம் ஆண்டு இந்தத் தொகையைக் கொண்டு கேரள மாநிலம் திருச்சூரில் சிறு தொழிற்சாலையைத் தொடங்கினார். பின்னாளில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக வளரவிருக்கும் ஒரு விஷயத்தின் எளிமையான தொடக்கம்தான் இது. இதுவே, இன்று ஜோதி லாப்ஸ் லிமிடெட் என்னும் ரூ.1800 கோடி வர்த்தக நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ராமச்சந்திரனின் எளிமையான தொழிற்சாலையில் இருந்து முதலில் வெளிவந்த அந்த மாயமருந்துதான் ‘உஜாலா’ என்னும் சொட்டு நீலம். துணிகளை வெண்மையாக்கும் திரவ வடிவ தூய்மைப் பொருள் தயாரிப்பாகும். சந்தைகளில் ஏற்கெனவே இருந்த நீலம் வகையறா தயாரிப்புகள் மீது ராமச்சந்திரனுக்கு இருந்த அதிருப்தியின் விளைவில் உருவானதுதான் ‘உஜாலா.’

முதலில் நிறைய ஊதா நிற சாயங்களுடன் பரிசோதனைத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கினார். இந்தப் பரிசோதனையின் இறுதியில் மிகச் சரியான ஒரு தயாரிப்பிற்கு வந்தடைந்தார். பிறந்தது ‘உஜாலா’.

ஆரம்ப கால வளர்ச்சி

தொடக்கத்தில் ஆறு பெண்களை வைத்து வீட்டுக்கு வீடு சென்று உஜாலாவை அறிமுகம் செய்தார். சில நாட்களிலேயே உஜாலா ஹிட் ஆனது. பிறகு அசுர வளர்ச்சி கண்டு 1997-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய வீடுகளில் புழங்கும் ஒரு பெயராகவே மாறிவிட்டது உஜாலா. இதனையடுத்து, ‘ஜோதி லாப்ஸ்’ மற்ற தயாரிப்புகளிலும் தைரியமாக இறங்கியது.

உஜாலாவின் வெற்றியைத் தொடர்ந்து இன்னொரு போட்டி நிறைந்த சவாலான தயாரிப்புத் துறையான கொசு விரட்டி மருந்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தினார். ஆனால், ‘மேக்சோ’வுக்கு அவரது முதலீடு ரூ.35 கோடி. இது உடனேயே ரூ.300 கோடி பிராண்டானது, காரணம், உஜாலாவின் சக்சஸ்.

அதாவது, மக்கள் அன்றாடம் சந்திக்கும் சாதாரணப் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதற்குத் தீர்வு வழங்கும் பொருட்களைத் தயாரித்து லாபம் ஈட்டும் வர்த்தகப் புத்திசாலித்தனம் ராமச்சந்திரனுடையது என்பது இதிலிருந்து புரிந்திருக்கும். இந்த இரண்டு தயாரிப்புகளும்தான் ஜோதி லாப்ஸின் முதுகெலும்பு.

மிகப் பெரிய பிராண்ட்…

சிறிய வர்த்தகமாகத் தொடங்கி எப்.எம்.சி.ஜி. துறையின் பெரிய பிராண்டாக மாற்றினார் ராமச்சந்திரன். இதோடு நிற்காமல் தொலைநோக்குப் பார்வையுடன் மேலும் பல எப்.எம்.சி.ஜி தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார். சந்தை நிலையை உயர்த்த ஹென்கெல் லிமிடெட் என்ற ஜெர்மன் நிறுவனத்தையும் வாங்கினார்.

புதுமையான சிந்தனை, நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்வது, பொருட்களுக்கான மதிப்பை வழங்குவதில் இடைவிடாத நாட்டம் ஆகியவற்றின் கலவைதான் ராமச்சந்திரனின் வெற்றிக்கு அடித்தளம்.

இப்போது, ​ராமச்சந்திரனின் மகள் எம்.ஆர்.ஜோதி, புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளதால், தந்தையின் தொலைநோக்கும் புதியன புகுத்தல் சிந்தனையும் மகளிடம் வம்சாவளியாக வந்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை நிறுவனத்தை முன்னோக்கி நகர்த்துகிறது.

ராமச்சந்திரனின் இந்த உழைப்பு, வெற்றி வர்த்தகப் பயணம் தொழில்முனைவின் சாராம்சம், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு மூலம் நீடித்த வெற்றிகரமான வர்த்தகத்தைக் கட்டமைப்பது ஆகியவற்றை இணைக்கிறது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *