Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

குஜராத்தின் சலாலா நகரில் இருந்து அம்ரேலிக்கும் அதன் பிறகு அகமதாபாத்திற்கு முன்னேறிய, மாநிலத்தின் இரண்டாவது பெரிய டீ துளசி டீ பிராண்டை உருவாக்கிய இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர் ஹரேஷ் கத்ரோட்டியாவின் வெற்றிக்கதை.

ஹரேஷ் கத்ரோட்டியா (Haresh Kathrotiya) அவரது தந்தை கோர்தன்பாய் கத்ரோட்டியா மருத்துவ அவசர நிலை நெருக்கடியை உணர்ந்த போது, பதின் பருவத்தில் இருந்தார். இதையடுத்து, ஹரேஷ், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சலாலா நகரில் அமைந்துள்ள தந்தையின் மளிகைக் கடையில் இணைந்தார்.

கடையில் வழக்கமான பொருட்களோடு, ராஜ்கோட் மற்றும் அம்ரேலியில் இருந்து தருவிக்கப்பட்ட தேயிலைத் தூளை லூசில் அவரது தந்தை தனது கடையில் விற்பனை செய்து வந்தார்.

“எங்கள் வர்த்தகம் சிறியதாக இருந்தாலும், எங்கள் தேயிலையின் தரத்தால் வாடிக்கையாளர்கள் மீது மிகப்பெரிய தாக்கம் உண்டானது. நகரில் இருந்த எல்லோரும் எங்கள் டீ-யை விரும்பினர்,” என்று ஹரேஷ் கூறினார்.

90-களின் ஆரம்பத்தில், கோர்தன்பாய் நாளிதழ் காகிதத்தில் மடித்து தேயிலை தூளை விற்பனை செய்தார். டீ-க்கான தேவை அதிகரிக்கவே, பேக்கேஜை மேம்படுத்து மேலும் பல இடங்களில் விரிவாக்கம் செய்தார். எனினும், அவரது ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட நிலையில், வர்த்தகப் பொறுப்பை ஹரேஷ் ஏற்றுக்கொண்டார்.

தந்தையின் வர்த்தகத்தில் பணியாற்ற விரும்பியதில்லை என்றும் வேறு பெரிய நகருக்கு செல்ல விரும்பியதாகவும் ஹர்ஷ் கூறுகிறார்.

“மளிகைக் கடையில் செயல்பட நான் விரும்பவில்லை, அகமதாபாத் அல்லது குஜராத்தின் வேறு பெரிய நகருக்கு செல்ல விரும்பினேன். ஆனால், குடும்பச் சூழல் அதை அனுமதிக்கவில்லை.  எனக்கு சாதகமாக எதுவும் இல்லாத நிலையில், தற்போதைய வர்த்தகத்தை விரிவாக்குவதில் கவனம் செலுத்தினேன். தேயிலை தூள் எங்களது வலுவான பொருள் என அறிந்திருந்தேன். அப்போது தான், டீ-யின் சில்லறை விற்பனையை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளத் திட்டமிட்டேன்,” என்கிறார் ஹரேஷ்.

30 ஆண்டுகளில், ’துளசி டீ’ (Tulsi Tea) GM Tea Packers Pvt Ltd நிறுவனத்தின் கீழ் செயல்படுவது, ரூ.185.42 கோடி வர்த்தகமாக இது வளர்ந்துள்ளது. தந்தையிடம் இருந்து வர்த்தகத்தை பெற்றுக்கொண்ட பிறகு ஹரேஷ், பிராண்டிற்கு துளசி டீ என பெயரிட்டார்.  

மளிகைக் கடையில் இருந்து, டீ பிராண்டை உருவாக்க வர்த்தக ஈடுபாடே காரணம் என ஹரேஷ் கூறுகிறார்.

அகமகாபாத்தை நோக்கி

கோர்தன்பாய் டீ தூள் விற்பனையை சிறிய அளவில் மேற்கொண்ட நிலையில், ஹரேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார். 1999ல் அருகே உள்ள சிறிய கிராமங்களில் விரிவாக்கம் செய்தார்.

பின்னர், படிப்படியாக, வர்த்தகம் மேம்பட, நான்காண்டுகளில் மளிகைக் கடை வர்த்தகம் அளவிற்கு டீ வர்த்தகமும் வளர்ந்தது.

“எங்கள் மளிகைக் கடை 1981ல் துவக்கப்பட்டது. தேயிலை தூள் வர்த்தகம் புதிது என்றாலும், வேகமாக வளர்ந்தது. எனவே, நானும், தந்தையும் மளிகை கடையை மூடிவிட்டு டீ வர்த்தகத்தில் முழு கவனம் செலுத்தத் தீர்மானித்தோம்,” என்கிறார் ஹரேஷ்.

தேயிலையை தருவித்து விற்பனை செய்தவது செலவு மிக்கதாக இருந்ததால், 2004ல் ஹரேஷ் சலாலாவில் இருந்து செயல்பட விரும்பவில்லை. எனவே, குடும்பத்துடன் அம்ரேலிக்கு குடி பெயர்ந்தார்.

“அதுவரை ஒருங்கிணைக்கப்படாத முறையில் செயல்பட்டு வந்தோம். ஆனால் அம்ரேலிக்குச் சென்றதும் பேக்கேஜிங் ஆலை அமைத்தோம். இதனிடையே தேயிலையை நேரடியாக தருவிக்க துவங்கியிருந்தோம்,” என்கிறார்.

2008ல், துளசி டீ, அம்ரேலியில் இருந்து, மற்ற நகரங்களுக்கு விரிவடைந்தது. தனியாக செயல்படாமல், விநியோகிஸ்தர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

“மாநிலத்தின் கிராமப்புறங்களில் வலுவடைந்து பின்னர் நகரங்களுக்கு செல்வது என்பது எங்கள் வர்த்தக உத்தியாக அமைந்தது. நகரங்களில் தேர்வு செய்ய பல பிராண்ட்கள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் அதிக வாய்ப்பில்லை, இந்த சந்தையில் கவனம் செலுத்தினோம்,” என்கிறார் ஹரேஷ்.

2005 முதல் 2010 வரை, வர்த்தகத்தில் 10 மடங்கு விரிவாக்கம் உண்டனாது. இதன் காரணமாக பேக்கேஜிங் ஆலையை மேம்படுத்த வேண்டியிருந்தது. 2013ல், அகமாதாபாத் மாவட்டத்தில் ஒரு லட்சம் சதுர அடையில் புதிய ஆலை அமைத்தார். அதன் பிறகு, துளசி டீ ப்ராண்ட், வேகமாக வளர்ந்து, தினமும் 60 லட்சம் டன் உற்பத்தித் திறனை எட்டியுள்ளது.

எல்லைகளை கடந்து விரிவாக்கம்

2016 முதல் 2018 வரை, ஹரேஷ் வர்த்தக செயல்முறையை சீராக்கினார். கவுகாத்தி, சிலிகுரி, டார்ஜிலிங்கில் இருந்து தேயிலையை தருவித்தார். வர்த்தக வருவாய் 12 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரித்தது.

இருப்பினும், ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், பெருந்தொற்று ஆகியவை சவாலாக அமைந்தன. நேரடி கொள்முதல், விநியோகம், பேக்கிங், மார்க்கெட்டிங் மூலம் இவற்றை சமாளித்ததாக ஹரேஷ் கூறுகிறார்.

2017 முதல் 2022 வரை நிறுவன வருவாய், ரூ.73 கோடியில் இருந்து ரூ.200 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தேயிலை சந்தை 2028ம் ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு 4.2 சதவீத வளர்ச்சி காணும் என இ.எம்.ஆர் அறிக்கை தெரிவிக்கிறது. குஜராத்தில் Wagh Bakri அதிகம் விற்கும் பிராண்ட்களில் ஒன்றாக இருந்தாலும், இந்திய அளவில் டாடா இரண்டாவது பெரிய பிராண்டாக இருக்கிறது என்கிறார் ஹரேஷ். கிராமப்புற சந்தையை மையமாகக் கொண்ட பிராண்டாக துளசி திகழ்கிறது.

இப்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில கிராமப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

“எங்கள் வர்த்தகத்தை விரிவாக்கி, தரத்தை காப்பதிலும், பெரிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதிலும் சீரான அணுகுமுறையே எங்கள் வெற்றிக்கு காரணம்,” என்கிறார் ஹரேஷ்.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *