Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

முதல் சம்பளம் 5,000 ரூபாய்; இன்று ரூ.122 கோடி மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார யூடியூபர் ஆனது எப்படி?
வென்றவர்கள்

ஆரம்பத்தில் 5000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர் இன்று இந்தியாவிலேயே பணக்கார யூடியூபர் ஆக கலக்கி வருகிறார்.
முதல் சம்பளம் 5,000 ரூபாய்; இன்று ரூ.122 கோடி மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார யூடியூபர் ஆனது எப்படி?

ஆரம்பத்தில் 5000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர் இன்று இந்தியாவிலேயே பணக்கார யூடியூபர் ஆக கலக்கி வருகிறார்.

வளர்ந்த நாடுகளை விடவும் இந்தியாவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் கன்டென்ட் கிரியேட்டர்கள் அதிகரித்து வருகின்றனர். அதில் வித்தியாசமான மக்களைக் கவரக்கூடிய வகையிலான கன்டென்ட்டை உருவாக்குவோர் சில லட்சங்களில் ஆரம்பித்து கோடிகள் வரை சம்பாதிக்கக்கூடிய சோசியல் மீடியா இன்ப்ளூயசன்கர்களாக உள்ளனர்.

மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வைகளுடன், ஆயிரக்கணக்கான யூடியூபர்கள் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது பொழுதுபோக்குத் துறையில் முதலிடத்தில் இருந்து, பணக்கார யூடியூபராக மாறுவதற்கான ஊக்கமளிக்கும் வெற்றிக்கதை குறித்து விரிவாகப் பார்க்கலாம்…

Bhuvan
யூடியூபர் புவன் பாம்

யார் இந்த புவன் பாம்?
வளர்ந்து வரும் இசைக்கலைஞராக பொழுதுபோக்குத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய புவன் பாம், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த புவன் பாம், சிறு வயது முதலே இசையின் மீது நாட்டம் கொண்டிருந்தார். டெல்லியில் உள்ள சிறிய கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் பாடுவது மற்றும் ரியாலிட்டி டிவி ஷோ பாடல் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம் மாதம் ரூ.5000 வரையில் சம்பாதித்தார்.

இவ்வளவு குறைந்த சம்பளம், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உறுதியை அவருக்கு ஏற்படுத்தியது. அதனால்தான் பிபி கி வைன்ஸ் (BB Ki Vines) என்ற யூடியூப் சேனலின் மூலம் படிப்படியாக பிரபலமானார்.

பல இசை ஆல்பங்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், காஷ்மீர் வெள்ளத்தால் வீட்டை இழந்த பெண்ணிடம் ஆட்சேபனைக்குரிய கேள்விகள் கேட்ட நிருபரை எதிர்த்து கேள்வி கேட்கும் வகையில் இவர் உருவாக்கிய வீடியோ யூடியூப்பில் பிரபலமானது.

மே 2020ல் இந்தியாவில் லாக்டவுன் காலத்தில், எலக்ட்ரீஷியன்கள், வீட்டு உதவியாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பதிவு செய்யும் வகையில் இசை ஆல்பம் வெளியிட்டது மிகுந்த வரவேற்பை பெற்றது.

Bhuvan
ஜனவரி 2021ல், தனது சேனல் பில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார். வெற்றிகரமான வெப் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் புவன், ஜனவரி 2023ல் தஷா கபார் மூலம் OTT அறிமுகமானார். 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக தனது பெற்றோரை இழந்த புவன், தன்னம்பிக்கையை இழக்காமல் முன்னேறி வருகிறார்.

புவன் சொத்து மதிப்பு:
26 மில்லியன் சந்தாதாரர்களுடன் யூடிப்பில் கோடிகளில் சம்பாதித்து வரும் புவன், அதன் மூலம் கிடைத்த புகழ் மூலமாகவும் பல்வேறு வழிகளில் சம்பாதித்து வருகிறார். நடிகர், பாடகர், எழுத்தாளர் மற்றும் வளரும் கலைஞர் என தனது திறமையால் நாட்டிலேயே மிகவும் பிரபலமான யூடியூபரான அவர், சினிமா, வெப் தொடர்கள், யூடியூப் வீடியோக்கள் மூலம் சுமார் 122 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *