15 ஆண்டு விடாமுயற்சியின் பலன் 8.22 கேரட் வைரம்: நான்கு தொழிலாளர்களும்; கடின உழைப்பும்!
நம்பிக்கையால் வென்ற நான்கு தொழிலாளர்கள்!
15 ஆண்டு விடாமுயற்சியின் பலன் 8.22 கேரட் வைரம்: நான்கு தொழிலாளர்களும்; கடின உழைப்பும்!
விடாமுயற்சியின் பலன் அந்த முயற்சியின் விளைவாகக் கிடைக்கும் வெற்றியாலே முழுமை பெறும். ஆனால் அந்த வெற்றி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியாது. ஆனால் அதற்கு நம்பிக்கை மிக அவசியம். விடாமுயற்சியின் காரணமாக தொழிலாளர்கள் சாதித்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு தொழிலாளர்கள் ரத்தன்லால் பிரஜாபதி அவரது மூன்று கூட்டாளிகள். வைரத்தின் மீது தீராக்காதல் கொண்ட இவர்கள், கடந்த 15 ஆண்டுகளாக ஆபரணங்களில் விலை உயர்ந்த வைரத்தை வேட்டையாடும் நோக்கில் பன்னா மாவட்ட பகுதியில் உள்ள பல இடங்களை குத்தகைக்கு எடுத்து தோண்டி வந்துள்ளனர்.
15 ஆண்டுகளாக பல்வேறு சுரங்களை குத்தகைக்கு எடுத்துத் தோண்டியும் வைரம் அவர்கள் கண்ணில் படவில்லை. என்றாலும் இவர்கள் தங்களின் விடா முயற்சிகளை கைவிடவில்லை.
வைரம்
இறுதியாக சமீபத்தில் இவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இரண்டு தினங்கள் முன்,
அதாவது சரியாக செப்டம்பர் 13-ம் தேதி 8.22 கேரட் வைரத்தை இவர்கள் தாங்கள் தோண்டிய சுரங்கத்தில் இருந்து கண்டெடுத்தனர். ஹிராபூர் தபரியான் என்னும் பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து இந்த வைரத்தை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இந்த வைரத்தை தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ள தொழிலாளர்கள் நால்வரும், அதன் ஏலத்துக்காக காத்திருக்கின்றனர். 21ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலம்விடப்பட இருக்கிறது.
ஏலத்தில் கிடைக்கும் தொகையில் அரசின் ராய்ல்டி மற்றும் வரிகள் போக மீத தொகை அனைத்தும் இந்த நான்கு தொழிலாளர்களுக்கு கிடைக்கும். இது தொடர்பாக பேசியுள்ள சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளில் ஒருவரான ரகுவீர் பிரஜாபதி என்பவர்,
“நாங்கள் நால்வரும் கடந்த 15 ஆண்டுகளாக பன்னா மாவட்ட பகுதிகளில் உள்ள பல சிறிய சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்து தோண்டி வந்தோம். ஆனால் ஹிராபூர் சுரங்கத்தில் தான் எங்களுக்கு வைரம் கிடைத்தது. கடந்த ஆறு மாதமாக ஹிராபூர் தபரியானில் பணியாற்றி வருகிறோம். இந்த பரிசு எங்களுக்குச் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது,” என்று நெகிழ்ந்துள்ளார்.
தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் பணத்தை கொண்டு தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் நான்கு தொழிலாளர்களும்.
ஒரு சிறப்பு தகவல், மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 380 கி.மீ தூரத்தில் இருக்கிறது வைரத்துக்கு பெயர் பெற்ற பன்னா மாவட்டம். இந்த மாவட்டத்தில் 12 லட்சம் கேரட் வைரங்