Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

23 வயதான சங்கர்ஷ் சந்தாவின் பெயரும் பங்குச் சந்தையின் மூத்த முதலீட்டாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

23 வயதான சங்கர்ஷ் சந்தாவின் பெயர் பங்குச் சந்தையின் மூத்த முதலீட்டாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘வாரன் பப்பெட்’ மற்றும் ‘இந்திய பங்குச்சந்தையின் தந்தை’ என்றெல்லாம் அழைக்கப்படுவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் இந்திய சந்தைகளில் முதலீடு செய்து பிரபலமடைந்த தனிநபர் முதலீட்டாளர் ஆவர்.

பங்குச்சந்தை என்றாலே பலரும் அஞ்சி நடுக்கும் போது, இளம் வயதிலேயே பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக கோடிகளை குவித்து சாதித்துக்காட்டியவர். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் ஈட்டுவதில் ஜாம்பவானாக விளங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62வது வயதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

40,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சொத்துக்கள் யார் என்ற கேள்வி எழுந்ததைவிட, ஏற்ற, இறக்கங்களுடன் சவால் நிறைந்த இந்திய பங்குச்சந்தையில் அவர் அளவிற்கு இனி கோலோச்சப்போவது யார் என்ற கேள்வி பெரிதாக இருந்தது. இப்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

அடுத்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, வாரன் பஃபெட், பெஞ்சமின் கிரஹாம், ஜார்ஜ் சோரோஸ், ராதாகிஷன் தமானி மற்றும் டோலி கன்னா போன்ற மூத்த முதலீட்டாளர்களின் பெயர்கள் உலகம் அறிந்தது, இவர்கள் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முதலீட்டாளராக அறியப்படுகிறார்கள்.

இப்போது 23 வயதான சங்கர்ஷ் சந்தா பெயரும் பங்குச் சந்தையின் மூத்த முதலீட்டாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர்ஷ், தனது 17வது வயதில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். வெறும் 6 ஆண்டுகளில், சங்கர்ஷ் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு உரிமையாளர் ஆகியுள்ளார்.

யார் இந்த சங்கர்ஷ் சந்தா?

ஐதராபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்த சங்கர்ஷ் சந்தா, கிரேட்டர் நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு படிப்பை விட பங்குச்சந்தை முதலீடுகள் மீதே ஆர்வம் அதிகமிருந்தது.

2016ம் ஆண்டு முதல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். சங்கர்ஷ் வெறும் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினார். இதன் மூலம் அடுத்தடுத்து லாபம் கிடைத்ததைத் தொடர்ந்து முழுவீச்சில் பங்குச்சந்தையில் இறங்குவது என முடிவெடுத்தார். எனவே, 2017 ஆம் ஆண்டு பென்னட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய சங்கர்ஷ், 8 லட்சம் முதலீடு தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ‘Savart’ என்ற பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவினார். சங்கர்ஷ் சந்தாவின் நிறுவனம் பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய மக்களுக்கு உதவுகிறது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ககன் மஹாலில் 2,000 சதுர அடியில் அமைந்துள்ள பிரம்மாண்ட அலுவலகத்தில், 35க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

உண்மையில் ஆரம்பத்திலிருந்தே சங்கர்ஷின் திட்டம் வேறு ஒன்றுதான். முதலில் வெளிநாடு சென்று படிக்கத் திட்டமிட்டிருந்த அவர், பின்னர் மனம் மாறி பென்னட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார், அங்கு பணத்தின் மீதான மனித மனப்பான்மை குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

“வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதைக் கண்டறிய, குறைந்த நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடம் ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பேசி ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கினேன்,” என்கிறார் சங்கர்ஷ்.

தனது கல்லூரி கிரேட்டர் நொய்டாவின் கிராமப்புறத்தில் இருந்ததால் அங்கும் ஆய்வு நடத்தியுள்ளார். கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் கூட ஆர்வமும் மகிழ்ச்சியும் தான் முக்கியம் என சொல்லாமல், பணம் இருந்தால் அனைத்தையும் சாதித்துவிடலாம் என்ற மனநிலை இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுள்ளார்.

இதுவே படிப்பை விட பணம் சம்பாதிப்பதில் தீவிரமாக இறங்க அவரைத் தூண்டியுள்ளது.

எனவே, 2017 ஆம் ஆண்டு, சங்கர்ஷ் தனது நிறுவனத்தைத் தொடங்க ₹8 லட்சம் மதிப்புள்ள பங்குகளை விற்றார். மீதிப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்தார். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்.

23 வயதான சங்கர்ஷ் அமெரிக்க பொருளாதார நிபுணர் பெஞ்சமின் கிரஹாமின் கட்டுரையைப் படித்த பிறகு பங்குச் சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அமெரிக்க பொருளாதார நிபுணர் கிரஹாம் 14 வயதில் மதிப்பு முதலீட்டின் தந்தை என்று அறியப்பட்டார்.

23 வயதிலேயே 100 கோடிக்கு அதிபரான சங்கர்ஷ்:

‘சாவர்ட்’ ஆப் மூலமாக நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். முதலில் மாதம் 99 ரூபாயாக இருந்த இதன் மாதச்சந்தா, அதன் பின்னர் 2,999 ரூபாயாக மாறியது, இப்போது அது ஆண்டுக்கு ரூ.4,999 ஆக மாறியுள்ளது.

சங்கர்ஷின் நிறுவனம் முதல் ஆண்டில் 12 லட்சமும், இரண்டாம் ஆண்டில் 14 லட்சமும், மூன்றாம் ஆண்டில் 32 லட்சமும் வர்த்தகம் செய்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், சங்கர்ஷ் சந்தாவின் நிறுவனம் ₹ 40 லட்சம் வர்த்தகம் செய்துள்ளது.

இதுகுறித்து சங்கர்ஷ் கூறுகையில்,

“நான் 2 ஆண்டுகல் ரூ.1.5 லட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன். எனது பங்குகளின் சந்தை மதிப்பு 2 ஆண்டுகளில் ₹ 13 லட்சமாக மாறியது. எனது நிகர மதிப்பு தற்போது ₹100 கோடியைத் தாண்டியுள்ளது. இது எனது பங்குச் சந்தை முதலீடுகள் மட்டுமல்ல, எனது நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்ட நம்பிக்கையால் நிகழ்ந்தது,” எனத் தெரிவித்துள்ளர்.

2016 ஆம் ஆண்டில், சங்கர்ஷ் சந்தா ‘நிதி நிர்வாணா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது. நிதி நிர்வாணா என்ற புத்தகம் முதலீடுகளை பல்வகைப்படுத்துதல் மற்றும் பங்குச் சந்தையைப் புரிந்துகொள்வது பற்றிய குறிப்புகளையும் வழங்குகிறது.

தொகுப்பு – கனிமொழி

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *