Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

செல்லப்பிராணிகளுக்கு கலப்படமில்லா உணவு மற்றும் சருமப் பராமரிப்பு – கோவை நிறுவன ‘பெட்’ முயற்சி!

செல்லப்பிராணிகளுக்கு கலப்படமில்லா உணவு மற்றும் சருமப் பராமரிப்பு – கோவை நிறுவன ‘பெட்’ முயற்சி!

செல்லப்பிராணிகள் துறையில் தனது தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் ஐரோப்பிய நிறுவங்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள உதவும் என கோவை ஸ்டார்ட் அப் Right4Paws நம்புகிறது.

கோவையைச் சேர்ந்த Right4Paws நிறுவனம், இந்திய செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், தங்கள் செல்லப்பிராணிகளின் ஊட்டச்சத்து தேவைகளை கவனிக்கும் முறையை மாற்றி அமைக்க விரும்புகிறது.

2020ல் தானு ராய் மற்றும் சமீர் அச்சன் இந்த ஸ்டார்ட் அப்பை துவக்கினர்.

“செல்லப்பிராணிகள் பராமரிப்பில், ஆரோக்கியமான வாய்ப்புகளில் போதாமை இருப்பதாக நம்புகிறோம்,” என்கிறார் தானு.

இந்தியாவில் செல்லப்பிராணி வளர்ப்பாளர்களுக்குக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன என்பதை அவரது நம்பிக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில், சில ஐரோப்பிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த சந்தை சீரான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 முதல் 2027 வரையான காலத்தில் இந்திய செல்லப்பிராணிகள் பொருட்கள் சந்தை ஆண்டு அடிப்படையில் 4.75 சதவீத வளர்ச்சி பெறும் என மோடார் இண்டெலிஜன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

செல்லப்பிராணிகள் பராமரிப்பு பரப்பில் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் Right4Paws கடந்த ஆண்டு 5 லட்சம் டாலர் நிதி திரட்டியது.

செல்லப்பிராணிகள் நலன்

செல்லப்பிராணிகள் பராமரிப்பு பரப்பை மாற்றும் ஊக்கத்துடன், தானு ராய் மற்றும் சமீர் அச்சன் தங்கள் வங்கித்துறை பணியை விட்டு விலகி இந்நிறுவனத்தை துவக்கினர். நாய் வளர்ப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வமும் அனுபவமும் கொண்ட தானு, நாய்களுக்கான சிறந்த ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணங்கள் அடிப்படையில், செல்லப்பிராணிகள் ஊட்டச்சத்து தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வை துவக்கினார். அப்போது தான் செல்லப்பிராணிகள் ஊட்டசத்து துறை ஐரோப்பிய நிறுவனங்கள் ஆதிக்கத்தில் இருப்பதை உணர்ந்தார். இதன் பயனாக, சிறந்த உணவுக்கான சரியான மூலப்பொருட்களை தேடத்துவங்கினார்.

“தாக்கம் மிகுந்த மற்றும் மாற்றத்திற்கான ஒன்றை செய்ய விரும்பினேன்,” என்கிறார் சமீர்.

இந்த ஸ்டார்ட் அப்பின் இணை நிறுவனராகும் முன், ஸ்டார்ட் அப்களுக்கு ஆலோசனை கூறுவதில் ஈடுபட்டிருந்தார்.

“காலத்தின் வழிகாட்டுதல் போல, தானு அவரைத்தேடி வர, நானும் அதில் பங்கேற்க விரும்புவதாகக் கூறி இணைந்தேன்,” என்கிறார் சமீர்.

இருவரும் தற்போது, கோவையில் உள்ள உணவு ஆலையில் இருந்து தங்கள் நிறுவன உணவு வரிசையை உருவாக்கி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நகரில் தான் வசிக்கின்றனர்.

மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் உடல் பருமனுக்கான குறைந்த இடருக்கான ஐரோப்பிய செல்லப்பிராணிகள் உணவு தொழில் கூட்டமைப்பின் மனித தரத்திற்கு நிகரான மூலப்பொருட்கள் நிர்ணயத்திற்கு ஏற்ப உணவு தயாரிப்பதால் போட்டி நிறுவனங்களிடம் இருந்து Right4Paws வேறுபடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

“உங்கள் நாய்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் என இந்த அமைப்பு கூறும் பொருட்களுடன் எங்கள் உணவை சமநிலை பெற வைக்கிறோம்,” என்கிறார் தானு.

ஈரப்பதம் நீக்கல், யூவி கதிர்கள் மற்றும் வெற்றிர பாக்கிங் போன்றவை மூலம் உணவு பதப்படுத்தப்படுகிறது. உலர் வடிவில் அல்லது சூடான தண்ணீரில் கலந்து என எந்த வடிவிலும் இந்த உணவை வழங்கலாம். தற்போது நிறுவனம் நாய்களுக்கான உணவில் பிரதானமாக கவனம் செலுத்துகிறது.

பல்வேறு வகையான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் தானு. அடுத்த ஆண்டு வாக்கில் நாய்களுக்கான சுவை பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஊட்டச்சத்தை கடந்து…

நாய்கள் வெளியே ஓடிச்செல்லும் பழக்கம் கொண்டிருப்பதால், முறையான பராமரிப்பு இல்லை எனில் அவை மோசமான பழக்கங்களை கொண்டிருக்கலாம். எனவே, நிறுவனம் செல்லப்பிராணி வளர்ப்பாளர்கள் தங்கள் நாய்களுக்கு ஒட்டுமொத்த நலன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

இதன் விளைவாக இந்நிறுவனம் தற்போது புளோர் கிளினர்கள் மற்றும் பாடி பட்டர் ஆகிய பொருட்களைக் அறிமுகம் செய்துள்ளது. ரசாயன பொருட்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. நாய்களின் ஜீரண ஆரோக்கியத்தை காக்கும் திறன் கொண்டு, தனியுரிமை ப்ரோபியாடிக்கை இந்த பொருள் கொண்டிருப்பதாகவும் அதன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த குரூமிங் பட்டர், செல்லப்பிராணிகளின் தோள் மற்றும் நகங்களை சுத்தமாக வைத்திருக்கும் இயற்கையான ப்ரோபியாடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெய்லி கோட் கிளினர், கென்னல் வாஷ், பார் ஷாம்பு, புரோபியாடிக் சப்ளிமண்ட்ஸ் ஆகியவற்றையும் நிறுவனம் கொண்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்

Right4Paws நிறுவனம் தற்போது நாய்களில் கவனம் செலுத்தி வந்தாலும், விரைவில் பூனைகளுக்கான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 40 நிறுவனங்களை கொண்டுள்ள நிறுவனம், செல்லப்பிராணிகளுக்கான தயாரிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளது.

தமிழில்: சைபர் சிம்மன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *