Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

இந்திய மக்களின் நம்பிக்கை பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்.ஐ.சி., மாதம் 833 ரூபாய் செலுத்தினால் முதிர்வு தொகையாக ஒரு கோடி ரூபாய் கிடைக்கக்கூடிய பாலிசி பற்றித் தான் பார்க்கப்போகிறோம்…

இந்திய மக்களின் நம்பிக்கை பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்.ஐ.சி., மாதம் 833 ரூபாய் செலுத்தினால் முதிர்வு தொகையாக ஒரு கோடி ரூபாய் கிடைக்கக்கூடிய பாலிசி பற்றித் தான் பார்க்கப்போகிறோம்…

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி பாதுகாப்புடன் வரிச்சலுகையையும் அளித்து வருகிறது. அந்த வகையில், ‘எல்ஐசி தன் ரேகா’ என்ற இன்சூரன்ஸ் திட்டமானது, முதிர்வுக் காலத்தில் பாலிசிதாரர் ஏற்கெனவே பெற்ற தொகையை எதுவும் பிடித்தம் செய்யமால் முழு காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. பாலிசிதாருக்கு மரணம் ஏற்பட்டால் அவருடைய குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தைத் தேடுபவர்களுக்கு கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கும் இத்திட்டத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றன.

உயர் ஆயுள் காப்பீடு:

LIC Dhan Rekha, குறைந்த விலை பிரீமியத்தில் உயர் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்பம் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

நெகிழ்வுத்தன்மை:

இந்தத் திட்டம் பிரீயம் தொகையை பாலிசிதாரர் தங்களது விருப்பத்தின் படி செலுத்த அனுமதிக்கிறது. ஒற்றை பிரீமியம் அல்லது ரெகுலர் பிரீமியம் என இரண்டு வகையில் பாலிசி கட்டணத்தை செலுத்தலாம்.

ஆட்-ஆன் ரைடர்கள்:

பாலிசிதாரர்களுக்கு கூடுதல் கவரேஜ் கிடைக்கக்கூடிய வகையில் சில ஆட்-ஆன் ரைடர்களையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த ரைடர்களில் ஆக்சிடெண்டல் டெத் பெனிபிட் ரைடர், கிரிட்டிகல் நோய் ரைடர் மற்றும் டிஸ்ஏபிலிட்டி பெனிபிட் ரைடர் ஆகியவை அடங்கும். உதாரணத்திற்கு கிரிட்டிகல் நோய் ரைடர் என்பது பாலிசிதாரருக்கு மோசமான நோய் இருந்தால் அவரது மரணத்திற்கு பிறகு, அதற்காக கூடுதல் க்ளைம் தொகை கிடைக்கும்.

வரிச் சலுகைகள்:

பாலிசிதாரர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

எல்ஐசியின் தன் ரேகா திட்டத்தை 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் பெறலாம். முதிர்ச்சியின் அதிகபட்ச வயது 70 ஆண்டுகள்ஆகும். திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1,00,000 ஆகும்.

பாலிசி வகைகள்:

இந்த பாலிசியில் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் என 3 வகையா பாலிசிகள் உள்ளன.

இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப பிரீமியம் மற்றும் ஆண்டினை தேர்வு செய்யலாம். இந்த பாலிசியில் 20 வருட பாலிசியில் 10 வருட பிரீமியத்தினை செலுத்த வேண்டியிருக்கும். இதே 30 வருட பாலிசியில் 15 வருட பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். 40 வருட பாலிசியில் 20 வருடம் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

சலுகைகள் என்னென்ன?

  • இத்திட்டத்தில் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • தன் ரேகா பாலிசி திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்புடையது கிடையாது என்பதால், இத்திட்டம் முழு பாதுகாப்பானது என எல்ஐசி உத்தரவாதம் அளித்துள்ளது.
  • பாலிசிதாரர் இறந்துவிட்டால் அடிப்படை உறுதித் தொகையில் 125 விழுக்காடு அல்லது ஏழு மடங்கு annualised பிரீமியம், இதில் எந்த தொகை பெரிதாக உள்ளதோ அது செலுத்தப்படும்.
  • பாலிசி மெச்சூரிட்டியின்போது மொத்த உறுதித் தொகையும் பாலிசிதாரருக்கு செலுத்தப்படும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு இத்திட்டம் நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

ரூ.1 கோடி பெறவது எப்படி?

35 வயதான பாலிசிதாரர், திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் மட்டுமே அந்த குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் என்பதால், தனது மறைவிற்கு பிறகும் குடும்பத்தை பாதுகாக்க எண்ணி இந்த பாலிசியில் முதலீடு செய்கிறார்.

அதன்படி, எல்ஐசி தன் ரேகா திட்டத்தில் 10 ஆண்டுகளைக் கொண்ட 50 லட்சம் முதிர்வுத்தொகை கிடைக்கக்கூடிய பிரீமியத்தையும், தனது கவரேஜை அதிகரிக்க ஆக்சிடெண்டல் டெத் பெனிபிட் ரைடரையும் தேர்வு செய்ய வேண்டும்.

துரதிஷ்டவசமாக பாலிசிதாரர் தனது 40வது வயதில் அதாவது பிரீமியம் செலுத்த ஆரம்பித்து 5 ஆண்டுகளில் இறந்துவிடுகிறார் என்றால், அவரது குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், கூடுதலாக ஆக்சிடெண்டல் டெத் பெனிபிட் ரைடர் கவரேஜாக 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம் பாலிசிதாரர் குடும்பத்திற்கு மொத்தம் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *