வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் களம் இறங்குவதாக ‘CasaGrand’ அறிவிப்பு!
கடந்த வாரம் இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அருண், சென்னையில் வீடுகளுக்கான பிரிவில் நாங்கள் முக்கியமான இடத்தில் இருக்கிறோம். அடுத்ததாக ’காசா கிராண்ட் கமர்சியல்’ எனும் பெயரில் வர்த்தகப் பிரிவில் செயல்பட இருக்கிறோம், என்று அறிவித்தார்.
சென்னையின் முக்கியமான கட்டுமான நிறுவனமான ‘Casa Grande’ வர்த்தகக் கட்டிடங்கள் பிரிவில் செயல்பட இருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்என் அருண் கூறினார்.
கடந்த வாரம் இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அருண், சென்னையில் வீடுகளுக்கான பிரிவில் நாங்கள் முக்கியமான இடத்தில் இருக்கிறோம். அடுத்ததாக ’காசா கிராண்ட் கமர்சியல்’ எனும் பெயரில் வர்த்தகப் பிரிவில் செயல்பட இருக்கிறோம், என்று அறிவித்தார்.
”ஐடி துறைக்குத் தேவையான கட்டிடங்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது. வரும் 2027-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் சதுர அடி கட்டிங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.900 கோடி அளவுக்கு வாடகை வருமானம் வரும்,” என எதிர்பார்கிறோம்.
இதுதவிர மால்களிலும் கவனம் செலுத்த இருக்கிறோம். தற்போது சென்னையில் இருக்கும் மால்கள் அளவுக்கு பெரிதாக இருக்காது. ஆனால், தேவையான கடைகள் இருக்கும். 4 முதல் 5 திரைகள் உள்ள தியேட்டர், உணவகம், சூப்பர் மார்கெட், முக்கியமான சில பிராண்ட் ஷோரூம்கள் இருக்கும். இதற்கு காசா ’கிராண்ட் கனெக்ட்’ அழைக்கிறோம்.
அம்பத்தூர் மற்றும் மேலாகோட்டையூர் ஆகிய இடங்களில் காசாகிராண்ட் கனெட்க்ட் அமைய இருக்கிறது. தற்போது சென்னையில் இரு இடங்களில் அமைக்க இருக்கிறோம். இதுதவிர சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் காசா கிராண்ட் கமர்சியல் செயல்பட தொடங்கும்.
இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 8000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய இருக்கிறோம், எனத் தெரிவித்தார்.
வீடுகள் கட்டும்போது வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், வர்த்தக கட்டிடங்கள் பிரிவில் நீங்களே முதலீடு செய்ய வேண்டுமே என்னும் கேள்விக்கு, ஆமாம் இந்த பிசினஸின் சுழற்சி வேறு. 1500 கோடி ரூபாய் அளவுக்கு சொந்த முதலீடு செய்ய இருக்கிறோம். ரூ.1500 கோடி வரை பங்கு மூலம் நிதி திரட்ட இருக்கிறோம். மீதமுள்ள தொகையை என்.பிஎப்சி மூலம் கடனாக திரட்ட இருக்கிறோம், என தெரிவித்தார்.
சுமார் 18 ஆண்டுகள் இந்தத் துறையில் இருந்துவிட்டு, ஏன் திடீரென வர்த்தகக் கட்டிடங்கள் பக்கம் திரும்ப வேண்டும்? என்னும் கேள்விக்கு,
“நாங்கள் ஆரம்ப காலத்திலே வர்த்தக கட்டிடங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என நினைத்தோம். ஆனால், அப்போது செயல்பட்ட அந்தத் துறையில் சில சிக்கல் இருந்தது. நீண்ட காலமாக செயல்பட வேண்டும் என நினைத்திருந்தோம். தற்போது இதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது,” என அருண் தெரிவித்தார்.
வீடுகளுக்கான வாய்ப்பு குறைந்திருக்கிறதா, தேவையில் சரிவு ஏற்பட்டிருக்கிறதா என்னும் கேள்விக்கு, வீடுகளுக்கான தேவையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் வீடுகளுக்கான அதிக முதலீட்டில் நிலங்களை வாங்கி வருகிறோம். வீடுகளுடன் சேர்ந்து இதனையும் செய்ய இருக்கிறோம், என அருண் தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் காசா கிராண்ட் ரூ.2500 கோடி வருமானம் ஈட்டியது. தற்போது நடப்பு நிதி ஆண்டில் ரூ.3,000 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக அருண் தெரிவித்தார்.
இதுதவிர வேர்ஹவுசிங், எஜுகேஷன், தொழிற்சாலை உள்ளிட்ட கட்டுமானங்களையும் காசா கிராண்ட் கையாண்டு வருகிறது.