Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

புதிய சுற்றாக Byju’s 700 மில்லியன் டாலர் நிதி திரட்டியது!

இந்தியாவின் முன்னணி எஜுடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமும், 22 பில்லியன் சந்தை மதிப்பு கொண்டதுமான பைஜூஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து 700 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

புதிய சுற்றாக Byju's 700 மில்லியன் டாலர் நிதி திரட்டியது!

இந்தியாவின் முன்னணி எஜுடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமும், 22 பில்லியன் சந்தை மதிப்பு கொண்டதுமான பைஜூஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து 700 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

கடந்த ஆண்டு முதலே கடும் வருவாய் இழப்பை சந்தித்து வந்த பைஜூஸ் நிறுவனம் மார்க்கெட்டிங்கை அதிகரிக்கவும், செலவினங்களையும் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக செலவை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பைஜூஸ் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

700 மில்லியன் டாலர்கள்:

கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த பைஜூஸ் நிறுவனம் முதல் சுற்று நிதி திரட்டலில் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதல் சுற்று நிதி திரட்டலில் இரண்டு மேற்கு ஆசியாவை தளமாகக் கொண்ட இறையாண்மை செல்வ நிதிகள் மற்றும் பெரிய தனியார் பங்கு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

byju

ஒப்பந்த விதிமுறைகளின் படி, திரட்டப்பட்ட 700 மில்லியன் டாலர் நிதியில் இருந்து 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை செலுத்த ஒதுக்கீடு செய்யப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பைஜூஸ் நிறுவனம் முதற்கட்டமாக அதன் துணை நிறுவனங்களான ஆகாஷ் எஜுகேஷன், கிரேட் லேர்னிங் ஆகியவற்றை அதன் தாய் நிறுவனமான திங்க் & லேர்ன் உடன் இணைக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பைஜூஸ் நிறுவனம் $1.2 பில்லியன் கடனை திரும்ப செலுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடனை திரும்பச் செலுத்துவது தொடர்பாக கடன் வழக்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பைஜூஸ் நிறுவனம் கடனுக்கு அதிக வட்டி, கடனை 2026க்குள் திரும்ப செலுத்துவது போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சமயத்தில் நிதி சுற்று மூலம் பைஜூஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள நிதியின் பெரும் பகுதியானது கடனை திரும்ப செலுத்த ஒதுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

பைஜூஸ் திரட்டிய நிதி:

22 பில்லியன் மதிப்பீடு கொண்ட நிறுவனம் கடந்த அக்டோபரில் இதே மதிப்பீட்டில் நிறுவனம் $250 மில்லியன் திரட்டியது. கடைசியாக தற்போதுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையத்திடம் இருந்து $250 மில்லியன் திரட்டியது.

மார்ச் 2022ம் ஆண்டு சுமேரு வென்ச்சர்ஸ், விட்ருவியன் பார்ட்னர்ஸ் மற்றும் பிளாக்ராக் ஆகியவற்றிலிருந்து $800 மில்லியன் மதிப்பிலான நிதி திரட்டியது. இதில், பைஜூஸ் நிறுவனரான பைஜு ரவீந்திரனின் தனிப்பட்ட பங்களிப்பான 400 மில்லியன் டாலர்களும் அடங்கும். இருப்பினும், தொடர் சரிவு காரணமாக கடந்த மாதம் 300 மில்லியன் டாலர் நிதி முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வருவாய் இழப்பு:

பைஜூஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த FY21 நிதி அறிக்கையில், FY20-யில் 231.69 கோடியாக இருந்த நிகர இழப்பு 4,588 கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 3.32% குறைந்து ரூ.2,428.39 கோடியாக உள்ளது. வருவாயின் 40% அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், வருடத்தில் ஏற்பட்ட இழப்புகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது, ஆனால் செலவுகள் ஒத்திவைக்கப்படவில்லை.

எனவே, செலவினங்களை குறைக்கும் விதமாக பைஜூஸ் அதன் மற்றும் துணை நிறுவன ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கனிமொழி

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *