10,000 எலக்ட்ரிக் டாக்சிகளை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் திட்டம்!
இந்தியாவின் மிகப்பெரிய டாக்சி சேவை நிறுவனமான Ola அதன் தனிப்பட்ட EV Cab சேவையை முதல்கட்டமாக பெங்களுருவில் 1000 எலக்ட்ரிக் கார்களை வைத்துக்கொண்டு தொடக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய டாக்சி சேவை நிறுவனமான Ola அதன் தனிப்பட்ட EV Cab சேவையை முதல்கட்டமாக பெங்களுருவில் 1000 எலக்ட்ரிக் கார்களை வைத்துக்கொண்டு தொடக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கார், பைக், பேருந்து என மின்சார வாகனங்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு ஓலா நிறுவனம் புத்தம் புது திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
அதன்படி,10,000 எலெக்ட்ரிக் கார்களைக் கொண்ட Electric Cab திட்டத்தை தொடங்க உள்ளது. இந்திய தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் வரும் வாரங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு ஓலா டாக்சிகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் டாக்சிகள் முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்களால் இயக்கப்படும், 100 சதவீத பணமில்லா பரிவர்த்தனை, கேன்சல் இல்லாத உறுதியான புக்கிங் ஆகியவையும் கிடைக்கும் என வாடிக்கையாளர்களுக்கு ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்களை இயக்குவது என்பது கார் டாக்சி நிறுவனங்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எலெக்ட்ரிக் வாகனத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், இருசக்கர எலெக்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.
தற்போது அடுத்தக்கட்டமாக எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவதன் மூலமாக மின்சார வாகன விற்பனையில் உச்சம் தொட திட்டமிட்டுள்ளது.
ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் டாக்சிகளை இயக்குவதைப் பொறுத்தவரை டெல்லி குருகிராமில் இயக்கி வரும் BluSmart என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மாடலை பின்பற்ற உள்ளது. அதாவது, இந்நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் இருந்த எலெக்ட்ரிக் கார்களை லீசுக்கு எடுத்து இயக்கி வருகிறது. இந்நிறுவனம் 3,000 எலெக்ட்ரிக் கார்களைக் கொண்ட EV cab சேவையை வழங்கி வருகிறது.
அதேபோல், ஓலா நிறுவனமும் EV கார்களை ஓலா நிறுவனம் விலைக்கு வாங்கி அவற்றை டிரைவர்களுக்கு லீசு முறையில் வழங்கும். அவர்கள் அதை பயன்படுத்தி Cab ஓட்டலாம். அவர்களுக்கும் நிலையான வருமானம் கிடைக்கும் என தெரிகிறது.
மேலும், இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு எரிபொருள், EMI, வாடகை அல்லது கமிஷன் செலுத்துதல் போன்ற கூடுதல் செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா நிறுவனத்தின் நேரடி போட்டியாளராக இருக்கும் அமெரிக்காவின் Uber நிறுவனம் சமீபத்தில் டெல்லி நகரில் இந்த EV Cab திட்டத்தை துவக்கியது. முதலில் முதலில் பெங்களூருவில் 1,000 கார்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் – அபராஜிதா சக்சேனா | தமிழில் – கனிமொழி