Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

சென்னையைச் சேர்ந்த வேளாண் நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ’My Harvest Farms’, Acumen Angels மூலமாக, தாக்கம் செலுத்தும் முதலீட்டாளரான ஆக்குமன் பண்ட் நிறுவனத்திடம் இருந்து நிதி திரட்டியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ’மைஹார்வஸ்ட் ஃபார்ம்ஸ்’ (myHarvest Farms) நிறுவனம், பண்ணையில் இருந்து இல்லத்திற்கு பிரிவில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம், ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் தானியங்களை விளைவித்து நேரடியாக நுகர்வோருக்கு வழங்கி வருகிறது. இவர்கள், நகரவாசிகள் ரசாயனம் இல்லாத காய்கறிகள், பழங்கள், தானியங்களை அணுக வழி செய்கின்றனர்.

விவசாயிகள் பருவநிலையை எதிர்கொள்ளக்கூடிய முறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழல் தன்மையோடு நியாயமான விலை சார்ந்த சமூகத்தை உருவாக்கவும் உதவுகிறது மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்.

Acumen Fund பெற்ற MyHarvest Farms

இந்த ஸ்டார்ட்-அப், ஆக்குமன் ஏஞ்சல்ஸ் (Acumen Angels) திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 21 நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஆக்குமன் அகாடமியின் ’ஆக்குமன் ஏஞ்சல்ஸ்’ ஊக்கத்தொகை மற்றும் ஆக்சலேட்டர் திட்டம், லாப நோக்கிலான மற்றும் லாப நோக்கில்லாத நிறுவனங்களுக்கான ஆரம்ப நிலை முதலீடு முதல் வரைவிட திட்ட நிலை முதலீடு வரை வழங்குகிறது. தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை வளர்த்து சமூகத்தில் நல்லவிதமான தாக்கம் ஏற்படுத்த இத்திட்டம் உதவுகிறது.

”வெளியிடப்படாத தொகையை நிதியாக பெற்று, அதை தங்கள் விவசாயிகள் சமூகத்தை வளர்த்தெடுக்க, செயல்பாடுகளை தானியங்கிமயமாக்க, நிறுவன குழுவை வளர்க்க பயன்படுத்த இருப்பதாக,” மைஹார்வஸ்ட் பார்ம்ஸ் நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது பற்றி குறிப்பிட்ட அர்ச்சனா ஸ்டாலின் பகிர்கையில்,

“2021 ஆக்குமன் பெல்லேவாக தேர்வானது, சகாக்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, சிந்தனை போக்குமிக்க நிறுவனத்தை வளர்க்க உதவியது. இந்த ஆரம்ப நிலை முதலீடு ஊக்கம் அளிக்கிறது. இது எங்கள் குழுவுக்கு உற்சாகம் அளிக்கும்,” என்று கூறியுள்ளார்.

MyHarvest Farms பற்றி

2018ம் ஆண்டு துவக்கப்பட்ட மைஹார்வஸ்ட் ஃபார்ம்ஸ், 200 விவசாயிகள் ஆர்கானிக் வேளாண்மைக்கு மாறி, நியாயமான விலை மற்றும் மேம்பட்ட வருமானத்தை ஈட்ட வழி செய்கிறது. இதன் மூலம், 6500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரசாயனம் கலப்பில்லாத காய்கறிகள், தானியங்களைப் பெற்று வருகின்றன. இந்நிறுவனம் ஆர்கானிக் உணவுகளை நுகர்வோருக்கு நேரடியாக வழங்குகிறது.

சென்னையில் உள்ள எவரும் இவர்களின் சேவையை அணுகலாம். நுகர்வோர் தங்கள் பண்ணைக்கு வருகை தந்து பார்வையிடவும் இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது. பொதுமுடக்கத்தின் போது தடையில்லாத காய்கறிகள், தானியங்கள் கிடைப்பதை நிறுவனம் உறுதி செய்தது.

மைஹார்வஸ்ட் ஃபார்ம்ஸ் நிறுவனம், வழிகாட்டிகள் எம்வி.சுப்பிரமணியன், ஸ்ரீனிவாசன் விஸ்வநாதன் ஆகியோரிடம் இருந்து துவக்க விதை நிதி பெற்றது. மேலும், பிரெஷ்வொர்க்ஸ் கிரிஷ் மாத்ரூபூதம், அனுஷா நாராயணன், நவீன் ரியல் எஸ்டேட் டாக்டர்.குமார் ஆகியோர் ஆதரவும் பெற்றுள்ளது.

நிறுவனர்கள் அர்ச்சனா மற்றும் ஸ்டாலின் கூறுகையில்,

”நம் அனைவருக்கும் ரசாயன கலப்பில்லாத உணவு அவசியமாகிறது. எனினும் இன்றைய உணவு ரசாயன கலப்பு கொண்டுள்ளது. வேளாண் துறை புத்துயிர் பெற வைப்பது அவசியம்,” என்று கூறுகின்றனர்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *