Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வாங்கும் கனடா நிறுவனம் – மதிப்பீடு எவ்வளவு தெரியுமா?

கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சதவீத பங்குகளை கனடாவைச் சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனம் வாங்க உள்ளது.

கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கும் கனடா நிறுவனம் – எவ்வளவுக்குத் தெரியுமா?

கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சதவீத பங்குகளை கனடாவைச் சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் நிறுவனம் வாங்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

70 சதவீத பங்குகள் விற்பனை:

கோவையில் தள்ளுவண்டிக் கடையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய தொழில், தற்போது ஆண்டுக்கு 400 கோடி வருமானம் ஈட்டும் வர்த்தகமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி, திருப்பதி ஆகிய இடங்களிலும் கோவை பழமுதிர் நிலையத்தின் கிளைகள் திறக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகிறது. கோவை பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குநராக நடராஜன் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு சொந்தமாக சென்னையை அடுத்த வானகரத்தில் ஒன்றரை லட்சம் சதுர அடியிலும், கோவையில் 20 ஆயிரம் சதுர அடியிலும் கிடங்குகள் உள்ளன. இந்நிலையில்,

கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சதவீத பங்குகளை கனடாவைச் சேர்ந்த தனியார் ஈக்விட்டி நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் 550 முதல் 600 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்தியா முழுவதும் கிளைகளை திறந்து சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கோவை பழமுதிர் நிலையம், வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் இடையே ஆன இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள 30 சதவீதம் நிறுவனத்தின் முக்கிய நபர்களிடமே இருக்கும் என்றும், தற்போதைய நிர்வாக இயக்குனரான செந்தில் நடராஜன் (நடராஜனின் மகன்) தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

கோவை பழமுதிர் நிலையம்:

1960-களில் கோயம்புத்தூரில் கோவை பழமுதிர் நிலையத்தின் வரலாறு தொடங்கியது. தந்தையின் மரணத்தை அடுத்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான்கு சகோதரர்களில் இரண்டாவது நபரான ஆர்.நடராஜன் என்பவரும், அவரது மூத்த சகோதரரும் இணைந்து சிறியதாக பழ வியாபாரத்தை தொடங்கினர்.

இருவரும் தங்களிடம் இருந்த 300 ரூபாயை முதலீடாகக் கொண்டு 1965ம் ஆண்டு கோவையில் முதல் பழமுதிர் நிலையத்தை ஆரம்பித்தனர். நியாயமான விலை, தரமான பொருட்கள் என்ற கருத்துடன் முதன் முறையாக பழங்களை டஜனுக்குப் பதிலாக எடையில் விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

அதனையடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கிளை பரப்பியதை தொடர்ந்து, 2012ம் ஆண்டு KPN ஃபார்ம் ஃப்ரெஷ் நிறுவனம் உதயமானது. 300 ரூபாய் முதலீட்டில் உருவான கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சதவீத பங்குகளின் மதிப்பு 800 கோடி வரை இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *