தள்ளாத வயதிலும் தளராத மனதைரியம்; தனது கிராமத்தை மாற்ற களமிறங்கிய 89 வயது பஞ்சாயத்து தலைவி!
தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் மரபுத் தலமான அரிட்டாபட்டி கிராமம் அங்குள்ள இயற்கை நீரூற்று குளங்கள், பல்லுயிர் தன்மை மிக்க தாவரங்கள், விதவிதமான பறவை இனங்கள் மட்டுமல்ல, இப்போது வீரம்மாள் பாட்டி என்ற பெயரும் அந்த கிராமத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் மரபுத் தலமான அரிட்டாபட்டி கிராமம் அங்குள்ள இயற்கை நீரூற்று குளங்கள், பல்லுயிர் தன்மை மிக்க தாவரங்கள், விதவிதமான பறவை இனங்கள் மட்டுமல்ல, இப்போது வீரம்மாள் பாட்டி என்ற பெயரும் அந்த கிராமத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
யார் இந்த வீரம்மாள் பாட்டி?
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பஞ்சாயத்து தலைவியாக உள்ள வீரம்மாள் பாட்டிக்கு 89 வயது, தமிழ்நாட்டிலேயே வயதான பஞ்சாயத்து தலைவியாக வலம் வருகிறார்.
வீரம்மாள் தனது வாழ்நாள் முழுவதும் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறார். அரிட்டாபட்டி கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, திருமணம் செய்து கொண்டு இங்கேயே வாழ்த்து வருகிறார். தனது இளமை பருவத்தில் சுயஉதவி குழுக்களுக்கு தலைமை தாங்கிய வீரம்மாள், இளம் பெண்களுக்கு விவசாயத்திற்கு கடன் பெற உதவுவது முதல் குடும்ப தகராறுகளைத் தீர்ப்பது வரை செயல்பட்டுள்ளார்.
கிராம மக்களுக்கு சேவையாற்றும் மனப்பான்மை தனக்கு சகோதரர் மற்றும் கணவரிடம் இருந்து வந்துள்ளது என்கிறார்.
“என் சகோதரர் கிராமத்தின் வளர்ச்சிக்காக உழைத்தார், என் கணவர் ஒரு வருடம் முழுவதும் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்தார்.”
வீரம்மாள் 2006 மற்றும் 2011ம் ஆண்டு என இரண்டு முறை பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட்டார் – இறுதியாக 2020ல் மூன்றாவது முறையாக அவர் தனது 86 வயதில் வெற்றி பெற்றுள்ளார்.
அரிட்டாபட்டி கிராம வனக்குழு தலைவர் ஆர்.ஒடையன் கூறுகையில்,
“வீரம்மாள் பாட்டியின் அர்பணிப்பை கண்ட கிராம மக்கள், குறிப்பாக பெண்கள், அவரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். இந்த பதவியானது, அவர் மக்கள் மீதுள்ள தனது அக்கறையை நிரூபித்து பல ஆண்டுகளாக சம்பாதித்தது,” என்கிறார்.
வீரம்மாள் பாட்டியின் சேவை:
கடந்த ஆண்டு, அரிட்டாபட்டி கிராமம் தமிழக அரசால், மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக தேர்வு செய்யப்பட்டது. அரிட்டாபட்டியில் சமீபத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அப்போது தான் கட்டுக்கடங்காத உற்சாகமும், நேர்மையான அணுகுமுறையுடன் 89 வயதிலும் கட்டுக்கடங்காத மன தைரியத்துடன் வலம் வந்த வீரம்மாள் பாட்டியை சுப்ரியா சாஹூ முதன் முறையாக சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து சுப்ரியா சாஹூ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலானதையடுத்து, வெளியுலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வீரம்மாள் தனது மூன்றாண்டு பதவிக் காலத்தில், நான்கு தண்ணீர் தொட்டிகள் மற்றும் நீர்நிலைகளை கடக்க பாலங்கள் கட்டுவதை மேற்பார்வையிட்டார். மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் 300 வீடுகளுக்கு குடிநீர் வழங்க உதவிய அவர், தற்போது அங்கன்வாடி பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதையும், பழுதடைந்தவை பதிவு நேரத்தில் மாற்றப்படுவதையும் உறுதி செய்துள்ளார். ஆனால், கிராமத்தில் அவசர கவனம் தேவைப்படும் கல்வி மற்றும் சாலைகள் போன்ற பகுதிகளில் பணிபுரிவது வீரம்மாளுக்கு மிகவும் பிடித்த பணியாகும்.
வீரம்மாள் தனது சேவையில் பல மைல்கற்களை தொட்டிருந்தாலும், கிராமத்தில் நிலவும் ஆணாதிக்கம் மற்றும் அதிகார அரசியலில் இருந்து இவர் தப்பிக்கவில்லை. இதுகுறித்து அரிட்டாபட்டி கிராம வனக்குழு தலைவர் ஒடையன் கூறுகையில்,
“எதிர்க்கட்சித் தலைவர்களும் அவர்களது ஆட்களும் வீரம்மாள் களத்தில் பணியாற்றும் முயற்சிக்கு இடையூறாக இருக்கிறார்கள். கடந்த முறை பதவியில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது செயல் திட்டங்களை முடக்கவும், தாமதப்படுத்தவும் முயல்கிறார்கள்,” என குற்றஞ்சாட்டுகிறார்.
60 ஆண்டுகள் பழமையான கிராம தொடக்கப் பள்ளிகளின் கட்டடங்களை, தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கான கழிப்பறைகள், சாலைகள், புதிய வளாகங்கள் கட்ட பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாக வீரம்மாள் கூறுகிறார்.
“கிராமத்தில் ஏராளமான பொறம்போக்கு நிலம் உள்ளது, அதை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளர்களும் அவர்களது ஆட்களும் தங்களுக்கு உரிமை கோரி இந்தத் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இந்த நிலங்கள் மீது அவர்கள் கிராம மக்கள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி செய்கிறார்கள்,” என்கிறார்
“எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த வயதில் நான் பதவிக்கு எளிதில் வந்துவிட முடியாது என்று அவர்களுக்குத் தெரியும் என்பதால், இங்கே அது மிகவும் கடினமானதாக இருக்கிறது,” என்கிறார் வீரம்மாள் பாட்டி.
தனது வாழ்நாளுக்குள் கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். கிராமத்து சேவையில் தீவிரம் காட்டு வரும் வீரம்மாள் பாட்டி, 89 வயதிலும் தன்னைத் தானே கவனித்து வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து தனக்கான உணவை தானே சமைத்துக் கொள்கிறார்.
பஞ்சாயத்து அலுவலகங்களில் வேலை இல்லாத சமயங்களில் பண்ணையில் வேலை பார்க்கிறார். மரணிக்கும் கடைசி காலம் வரை தனது சொந்த திறமையால் ஜீவிப்பதையும், தனது கிராமத்திற்கு தன்னால் முடிந்த சேவையாற்றுவதையும் உறுதியாக கொண்டுள்ளார்.