பிரபல இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதலீடு செய்துள்ள குழந்தைகள் காலணிகளைத் தயாரிக்கும் ‘ஆரெட்டோ’ நிறுவனம் கவனம் ஈர்த்துள்ளது.
குழந்தைகளுக்கு இன்றைய உலகில் செல்போனை விட்டால் அடுத்தக் காதல் விதவிதமான காலணிகளை வாங்கி அணிந்து கொள்வதாக உள்ளது. இதனால், இந்தியாவில் குழந்தைகள் காலணி சந்தை திடீர் எழுச்சி கண்டுள்ளது. இந்த எழுச்சிக்குப் பிரதான காரணமாக விளங்குகிறது ‘Aretto’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம்.
‘ஆரெட்டோ’ என்பது குழந்தைகளுக்கான காலணிகள் தயாரிப்பில் தொழில்நுட்பத்தை மிகவும் தீர்க்கமாகப் பயன்படுத்தும் ஒரு நிறுவனமாகும். இது, தரம் மற்றும் காலணிகளை அணிவதன் மூலம் வசதியாக உணர்தல் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும். நம் மனதில் இருக்கும் குழந்தைமையின் உள்ளுணர்வுடன் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
துறுதுறுப்பான இரட்டையர்களான கிருத்திகா லால் மற்றும் சத்யஜித் மிட்டல் ஆகியோரால் 2019ல் நிறுவப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘Aretto’ ஆரம்பகால வளர்ச்சி நிதியாக $550,000 தொகையை நம்பிக்கைக்குரிய வகையில் திரட்டியுள்ளது. இது புகழ்பெற்ற நபர்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் குறிப்பிடத்தக்க முதலீட்டுப் படையணியில் முன்னணியில் இருப்பவர் பிரபல இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அவரது பங்கேற்பு ஆரெட்டோவின் தொலைநோக்கு மற்றும் நீண்ட கால திறன், வள சாத்தியக் கூறுகளை தொழில்துறை தலைவர்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஹர்திக் பாண்டியாவின் முதலீடு பல பெருந்தலைகளின் முதலீட்டுப் பார்வையை ஆரெட்டோவின் பக்கம் ஈர்த்துள்ளது.
Veg, NonVeg புகழ் அபினீத் சிங், ஆன் குழுமத்தைச் சேர்ந்த ஷ்யாம் ராய்ச்சுரா, முன்பு பாம்பே ஷேவிங் நிறுவனத்துடன் தொடர்புடைய ரவுனக் முனோட், வெர்மான்ட் ஆலோசகர்கள், வீடியோவெர்ஸில் இருந்து விநாயக் ஸ்ரீவஸ்தவ் மற்றும் ஜூலியஸ் பியரைச் சேர்ந்த குணால் சுமயா உட்பட பல முதலீட்டாளர்கள் இப்போது ஆரெட்டோவின் பலமாக உள்ளனர்.
ஆரெட்டோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சத்யஜித் மிட்டல் தனது சமீபத்திய அறிக்கையில் தனது நன்றியையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு முதலீட்டாளரின் பங்கையும் வழிகாட்டும் ஒளி மற்றும் கிரியா ஊக்கி என்று புகழாரம் சூட்டினார்.
“எங்கள் தொலைநோக்குப் பார்வை மற்றும் எங்கள் டீமின் எழுச்சி மீதான அவர்களின் நம்பிக்கை எங்களுக்கு பெரிய உந்து சக்தியாகும். இந்த நிதியானது எங்கள் தனித்துவமான குழந்தைகள் காலணி தயாரிப்புத் தொழில்நுட்பத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. அத்துடன், காலணி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்கான எங்கள் உறுதியை பலப்படுத்துகிறது,” என்று மிட்டல் குறிப்பிட்டார்.
இன்னும் விரிவான சந்தைப் பங்கைக் கைப்பற்றும் முயற்சியில் ஆரெட்டோ ஒரு லட்சிய விரிவாக்கத் திட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புனே இந்த பிராண்டின் முதல் சில்லறை விற்பனைக் கடைக்கு சாட்சியாக உள்ளது. இந்தியாவின் பரபரப்பான பெருநகர மையங்கள் முழுவதும் பல பிராண்ட் அவுட்லெட்டுகளுடன் கூட்டாண்மை மேற்கொண்டு ஆரெட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவுள்ளது.
பெற்றோர்களுக்கான உண்மையான அக்கறையை நிவர்த்தி செய்ய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வெறும் பாதணிகளை விற்பது மட்டுமல்ல; அது மன அமைதியை அளிக்கிறது இந்த ப்ராண்ட்.
இந்நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளை அதிகரிக்கவும், பரந்த தயாரிப்பு வரம்பை அறிமுகப்படுத்தவும் தயாராகி வருவதால், இந்திய காலணி நிலப்பரப்பு ஒரு நேரத்தில் ஒரு படி மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.