3 ஆண்டுகள்; 198 நகரங்கள்; 604 மையங்கள் – இந்திய சலவைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய TUMBLEDRY
2019 சுயநிதியில் துவக்கப்பட்ட டம்ப்லடிரை (Tumbledry) நிறுவனம் இந்திய அளவில், குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் சலவை சேவை வலைப்பின்னலை அமைக்க திட்டமிட்டுள்ளது. 600 க்கும் அதிகமான பிரான்சைஸ் மையங்களை கொண்டுள்ள நிறுவனம் சர்வதேச விரிவாக்கத்திற்கும் திட்டமிட்டுள்ளது.
அதிக நாட்கள் தங்கியிருக்கும் தேவை கொண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்த போது கவுரவ் நிகம் நம்பகமான சலவை சேவைக்கான தேவையை உணர்ந்தார். இருப்பினும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த சேவை சீரற்ற தன்மையோடு இருப்பதை உணர்ந்தார். எனினும், வெளிநாடுகளில் இவ்வாறு இல்லை என்பதையும் அறிந்திருந்தார்.
“தேசிய அளவில் சீரான சேவை அளிக்கும் ஒரு நிறுவனத்தை கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரிமீயம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சந்தையில் இருந்தனர் அல்லது பல்வேறு நகரங்களில் செலவு குறைந்த வாய்ப்புகள் இல்லை,” என்று யுவர்ஸ்டோரியிடம் கூறுகிறார் கவுரவ்.
இந்த இடைவெளி நல்ல வாய்ப்பாகத் தோன்றவே, இணை நிறுவனர் நவீன் சாவ்லா உடன் இணைந்து 2019ல், கவுரவ் நிகம், ’டம்ப்லடிரை’ (Tumbledry) நிறுவனத்தைத் துவக்கினார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டு வரும் சலவைத்துறை, 2025ல் 15 பில்லியன் டாலராக இருக்கும் என ரெட் சீர் கன்சல்டிங் ஆய்வு தெரிவிக்கிறது.
Get connected to Tumbledry
டம்ப்லடிரை நிறுவனத்தை சேமிப்பு மற்றும் நிறுவன பங்கு வாய்ப்பு ஆகியவை கொண்டு கிடைத்த ரூ.2.5 கோடியில் துவக்கினர். நுகர்வோர் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பணியில் இருந்த போது உண்டான சேமிப்பு இது.
நொய்டாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், மூன்று ஆண்டுகளில் 198 நகரங்களில் 604 மையங்களை அமைத்துள்ளது. இந்தியா முழுவதும் வலுவான வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மையங்களை அமைக்க உள்ளது. உள்ளூர் சார்ந்த வலைப்பின்னலையும் அமைக்க உள்ளது.
இந்நிறுவனம், நொய்டாவில் ஒரு சொந்த மையம் மட்டும் கொண்டுள்ள நிலையில், பிரான்சைஸ் முறையில் செயல்படுகிறது. தரமான சலவை சேவைக்கான தேவை அதிகம் உள்ள இடங்களில் நிறுவனம் விரிவாக்கம் செய்ய இந்த முறை உதவுவதாக நிகம் கூறுகிறார்.
விரிவாக்கம்
இந்தியாவில் சலவைத்தொழில் செய்பவர்கள் தான் வீடுகளுக்கு துணி துவைக்கும் சேவையை வழங்குகின்றனர். எனினும், இந்த ஒருங்கிணைக்கப்படாத துறை உள்ளூரைச் சேராதவர்களுக்கு நம்பகமின்மை மற்றும் அதிக நேரம் காத்திருப்பது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது. தங்கள் நிறுவனம் இவற்றுக்கு தீர்வாக அமைவதாக நிகம் கருதுகிறார்.
Get connected to Tumbledry
பேபிரிகோ, பேப்ரிஸ்கா உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டி இருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பாடுகளை கொண்டுள்ள Tumbledry-க்கு பலமாக அமைகிறது.
பெரிய நகரங்கள் தவிர, காசிபூர், பார்பேட்டா, சோரானி, சிம்லா, குல்பார்கா, கொல்லம், ஈரோடு, பாரமதி, ஜான்பூர், சோடேபூர் உள்ளிட்ட சிறிய நகரங்களிலும் நிறுவனம் செயல்படுகிறது.
Tumbledry மாதந்தோறும் 35 முதல் 50 புதிய மையங்களை திறக்கிறது. இந்த எண்ணிக்கை 50 ஐ தொடும் என்கிறார் இணை நிறுவனர். பிரான்சைஸ் முறையில் நிறுவனம், ரூ.25 லட்சம் தொகையில் புதிய மையம் துவக்க தேவையான வசதிகளை வழங்குகிறது. மையத்தின் இடம் தேர்வு, உள் அலங்காரம், பர்னீச்சர் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் விற்பனை வருவாயில் 7.5 சதவீதம் ராயல்டி பெறுகிறது.
ஒவ்வொரு பிரான்சைஸ் மையமும் மூன்று முதல் நான்கு மாதங்களில் லாபம் ஈட்டுவதாக நிகம் கூறுகிறார்.
2022 ஜனவரியில் நிறுவன அளவில் லாபம் ஈட்டுதலை தொட்ட நிலையில், 22 நிதியாண்டில் ரூ.16 கோடி விற்றுமுதலை பெற்றுள்ளது.
சவால்கள்
சலவை மற்றும் துணி துவக்கும் துறையில் சீரான தன்மையை தக்க வைப்பதில் சவால்கள் உள்ளதை ஒப்புக்கொள்ளும் இணை நிறுவனர்கள் நிறுவனம், நவீன இயந்திரங்கள், சீரான ரசாயனங்கள், பேக்கிங் பொருட்கள், மனித தலையீட்டை குறைக்கும் இதர இயந்திரங்களை பெற்றுள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும், கரை அகற்றல் மற்றும் இஸ்திரி செய்வதை மனிதர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்நிறுவனம் சீரான செயல்பாடு முறை (SOPs), விரிவான பயிற்சி, தரத்தை உறுதி செய்ய அடிக்கடி சோதனை ஆகியவற்றை பின்பற்றுகிறது.
இதனிடையே, சலவைத் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கும் 15 நாள் இலவசப் பயிற்சி திட்டத்தை Tumbledry பயிற்சி அகாடமி மூலம் வழங்குகிறது.
“தொழில்முறை நபர்களுக்கு பயிற்சி அளித்து, இயந்திர செயல்பாடுகள், கரை அகற்றம், ஸ்டீன் அயன், கை கழுவும் நுட்பம், ஆடைகளை பேக் செய்வது ஆகியவற்றில் பயிற்சி அளித்து, பிரான்சைஸ் மையங்களில் நியமிக்கும் முன், அவர்கள் தகுதியை உறுதி செய்கிறோம்,” என்கிறார்.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனம் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் பில் தொகை, டெலிவரி மற்றும் ஆர்டர் நிலை ஆகியவற்றை அறியலாம்.
மேலும், தினசரி தகவல் தொடர்பிற்காக வாட்ஸ் அப் சாட்பாட்டையும் அறிமுகம் செய்துள்ளது. நிறுவன மைய சிஆர்.எம், கால் செண்டர் மற்றும் செயலிகளுடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விலைப் பட்டியல், பிக் அப், ஆர்டர்கள் நிலை, ஆன்லைன் பேமெண்ட், ஆர்டர் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இந்தியா முழுவதும் ஒரே தன்மையை இது அளிக்கிறது.
மேலும், பிரான்சைசிற்காக வாடிக்கையாளர் திருப்தி திட்டத்தை அமல் செய்துள்ளது. அதிக புரமோட்டர் ஸ்கோர் கொண்ட மையங்களுக்கு சலுகை அளிக்கிறது. குறைவான ஸ்கோர் தொடர்ந்தால், அபராதம் விதிக்கப்படும் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என்கிறார் நிகம்.
எதிர்காலத் திட்டம்
நகர்புற இந்தியர்களின் சலவை சேவைத் தேவையை நிறைவேற்ற 2026ல் நிறுவனம் 2000 மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் 3 கிமீ சுற்றளவில் ஒரு மையம் இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது.
மேலும், இல்ல மற்றும் கார் தூய்மை சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. யுஏஇ, சவுதி, வங்கதேசம் ஆகிய சந்தைகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.