Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

குடிசைவாழ் பகுதி டூ கோடீஸ்வரர் – ‘Danube Group’ ரிஸ்வான் சாஜனின் பேரெழுச்சி


கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தானுபே குழுமம் (Danube Group) பற்றி நம்மில் பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது. 1993-ஆம் ஆண்டு குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான ரிஸ்வான் சாஜன் தலைமையில் ‘தானுபே குழுமம்’ நிறுவப்பட்டு வளர்க்கப்பட்டது. மும்பையில் உள்ள காட்கோபர் குடிசைப்பகுதியில் பிறந்தவர் சாஜன். அவரது வெற்றியின் பின்னணியில் கடின உழைப்பு, பின்னடைவில் இருந்து எழுச்சி மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது.

அந்தக் கொஞ்சம் அதிர்ஷ்டம் என்னவெனில், அவரது தந்தைக்கு உண்மையில் லாட்டரியில் பரிசு விழுந்தது. அதன் மூலம் குடிசைப் பகுதியிலிருந்து சிறிய அடுக்கு மாடிக்குடியிருப்புக்கு குடிபெயர்ந்தது சாஜனின் குடும்பம். ஆனாலும், வாழ்க்கை கடினமாகவே தொடர்ந்தது. அப்போதுதான் சாஜன் குடும்பத்துக்கு தன் பங்களிப்பை செய்து முன்னேற்றுவதற்காக தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து புத்தகங்கள், பால், ராக்கி, பட்டாசுகள் முதலியவற்றை தங்கள் உள்ளூர்க்காரர்களிடம் விற்பனையைத் தொடங்கி தன் வர்த்தகப் பயணத்தின் முதல்படியில் நிற்கத் தொடங்கினார்.

அடுத்தடுத்து திருப்பங்கள்

ரிஸ்வான் சாஜனின் வணிக புத்திசாலித்தனம் ஆரம்பத்தில் வெளிப்பட்டது. ஆனால், அவருக்கு 16 வயதிலேயே பெரும் பின்னடைவும் சோகமும் ஏற்பட்டது. அதனால் அவர் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. மேலும் குடும்பத்தின் நிதிப் பொறுப்புகளை சுமக்கவும் சாஜனுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதுதான் சாஜன் சிறிய வர்த்தகம் ஒன்றைத் தொடங்கினார். பாக்ஸ் ஃபைல்களைத் தயாரித்து விற்கத் தொடங்கினார். இது, அவரது தொழில்முனைவோர் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

இவருக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது, குவைத்தில் வேலை வாய்ப்பு ஏற்பட்ட போதுதான். ஒரு பயிற்சி விற்பனையாளராகத் தொடங்கி, சாஜன் விரைவாக தொழில் ஏணியில் ஏறி தன் வருவாயை கணிசமாக உயர்த்தினார். ஆனால், வரலாற்று நிகழ்வு ஒன்று மனித வாழ்க்கையில் புகுந்து விதியை மாற்றுவதும் நடக்கும் என்பதற்கேற்ப 1990-இல் சதாம் ஹுசைன் குவைத்தின் மீது படையெடுக்க, சாஜன் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே திரும்பி விட்டார். அதாவது மீண்டும் மும்பைக்கே வந்து விட நேர்ந்தது.

ஆனால், அங்குதான் சாஜனின் விடாமுயற்சி வியப்பளிதாக இருந்தது. மீண்டும் 1993-ம் ஆண்டில் குவைத்திற்குச் சென்றார். அங்கு ஒரு வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். பல்வேறு பிரிவுகளில் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். அவரது வர்த்தக முயற்சிகளில் சானிட்டரி சொல்யூஷன் பிராண்ட் ‘மிலானோ’ (2006), தானுபே ஹோம் ஃபார் ஹோம் பர்னிஷிங் (2008) மற்றும் அலுமினிய கலவை பேனல்களை தயாரிக்கும் அலுகோபனல் (2012) ஆகியவை அடங்கும். 2014-இல் அவர் ரியல் எஸ்டேட்டில் நுழைந்தது அவரது வணிக சாம்ராஜ்யத்தின் எல்லையை மேலும் பரவலாக்கியது.

கட்டியெழுப்பிய சாம்ராஜ்ஜியம்

ரியல் எஸ்டேட் துறையில் ரிஸ்வான் சாஜனின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியானது, அவரது புதுமையான 1% கட்டணத் திட்டம். இது ரியல் எஸ்டேட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. அத்துடன், ஆடம்பரத்தை எளிதாக அடைவதை ஊக்குவித்தது. இதன் மூலம் அவரது நிதி நிலைமைகளின் வளர்ச்சியும் உயர்ந்தது.

இன்று ‘தானுபே குழுமம்’ கட்டுமானப் பொருட்கள், வீட்டு அலங்காரம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமமாக 2 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டுகிறது.

ஆஸ்டன் மார்டின், ஃபேஷன் டிவி மற்றும் டோனினோ லம்போர்கினி காசா போன்ற பிராண்டுகளுடன் இணைந்த ஆடம்பர குடியிருப்பு திட்டங்கள் உட்பட சாஜனின் வர்த்தகக் கூட்டணித் தத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான இடைவிடாத நாட்டம் ஆகியவை குழுமத்தை பல்வேறு துறைகளில் பெயர் பெற காரணமானது.

ரிஸ்வானின் தற்போதைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள முதல் 100 பணக்கார இந்திய தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவையெல்லாமும் குடிசைப்பகுதியில் பிறந்தது முதல் தொடங்கியது என்பதை நாம் மறந்து விடலாகாது.

மும்பையின் குடிசைப் பகுதிகளில் இருந்து கோடீஸ்வர தொழிலதிபராகும் கனவு சாத்தியமாகும் அனைவருக்குமான ஓர் ஊக்கமளிக்கும் பயணமே ரிஸ்வான் சாஜனுடையது.

ரிஸ்வான் சாஜனின் வெற்றிப் பயணம், சவால்களை சமாளித்து மீண்டு எழுவது மற்றும் உறுதி, தொலைநோக்கும் கொண்ட பார்வை ஆகியவை குவி மையம் பெறும் வளர்ச்சிப் பயணமாகும்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *