Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

குழந்தைகளுக்கான சைக்கிள், பொம்மைகளை சந்தா முறையில் வழங்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!

குழந்தைகள் வளரும் போது அவர்கள் பயன்படுத்தும் பொம்மைகள், பிராம் முதல் சைக்கிள்கள் வரை எல்லா பொருட்களும் அவர்கள் வளர்ந்தவுடன் சிறியதாகிவிடும். இந்த பொருட்கள் ஒன்று வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் அல்லது தேவையில்லை என்று தூக்கி வீசப்பட்டு, கழிவு பிரச்சனையை அதிகரிக்கும்.

இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நண்பர்களும், நிறுவனர்களுமான பிருத்வி கவுடா, ரிஷிகேஷ், சப்னா இணைந்து க்ரோ கிளப் (GroClub) நிறுவனத்தை துவக்க தீர்மானித்தனர். இந்த ஸ்டார்ட் அப், ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்களை வீணாவதை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இணை நிறுவனர்கள் 4 முதல் 15 வயது பிள்ளைகளின் பெற்றோர்களாக இருப்பதால் இந்த பிரச்சனையை நேரடியாக உணர்ந்திருக்கின்றனர்.

“இணை நிறுவனர்களாகிய நாங்கள், எங்கள் குடும்பங்களில் 4-15 வயதில் 5 குழந்தைகளை கொண்டுள்ளோம். இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வீட்டின் மூலையில் அல்லது கீழ் பகுதியில் கேட்பார் இல்லாமல் கிடப்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கும். இந்த பொருட்கள் அப்படியே கிடந்து தூக்கி வீசப்படும். இது நம்முடைய பூமியையும் பாதிக்கிறது. இதற்கு தீர்வாக, க்ரோகிளப், நுகர்வை கட்டுப்படுத்தாமல் பொருட்களை மீண்டும் பயன்படுத்த நீடித்த வாய்ப்பை அளிக்கிறது,” என்கிறார் நிறுவனரும், சி.இ.ஓவுமான பிருத்வி.

ஜனவரியில் துவக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரும் நிறுவனம், சந்தா அடிப்படையில் சைக்கிள்களை வழங்குகிறது. வீடு தேடி வந்து சைக்கிள் வழங்குவதோடு, அதன் பராமரிப்பையும் கனித்துக்கொள்கிறது.

“சைக்கிள் கழிவு இந்தியாவில் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருக்கிறது. பல சைக்கிள்கள் குப்பை மேட்டிற்கு வருகின்றன. க்ரோகிளப் போன்ற சேவையை நாடுவதன் மூலம் பெற்றோர் கழிவுகளை குறைப்பதில் பங்கேற்கலாம்,” என்கிறார்.

குழந்தைகளுக்கான சைக்கிள் தவிர, இந்த ஸ்டார்ட் அப் பெரியவர்களுக்கான சைக்கிள் சேவையையும் மாதம் ரூ.549க்கு வழங்குகிறது.

க்ரோகிளப்பின் சந்தா ஆண்டுக்கு ரூ.6,000 அல்லது மாதம் ரூ.500 என அமைகிறது. சொந்தமாக வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிள்கள் பத்து ஆண்டுகள் உழைக்கும் என நிறுவனம் குறிப்பிடுகிறது. சந்தா காலம் முடிந்ததும் நிறுவனம் சைக்கிளை கொண்டு வந்து புதுப்பித்து அடுத்த சந்தாரரிடம் கொடுக்கிறது. ஒப்பீடு அளவில் பார்த்தால் குழந்தைகளுக்கான சைக்கிள் ரூ.5,000 முதல் ரூ.7,000 ஆக, பெரியவர்களுக்கான சைக்கிள் ரூ.20,000 ஆக இருக்கலாம்.

நிறுவனம் இப்போது 5,300 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ.1.5 கோடி வருவாய் பெற்றது. இந்த நிதியாண்டில் ரூ.3 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

பைக் கிளப் இந்த நிறுவனத்திற்கான போட்டி நிறுவனங்களில் ஒன்றாக அமைகிறது.

சுழற்சி பொருளாதாரம்

அண்மை ஆண்டுகளில், சுழற்சி பொருளாதாரம் நீடித்த முறையில் வளங்களை நிர்வகிப்பதற்கான வழியாக பிரபலமாகி வருகிறது. கழிவை குறைத்து, பொறுப்பான நுகர்வை இது வலியுறுத்துகிறது.

இந்த பின்னணியில் இந்தியாவின் சுழற்சி பொருளாதாரம், 2030ல் 45 பில்லியன் டாலராக இருக்கும் என கலாரி கேப்டல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பிரிவில் செயல்பட்டு வரும் க்ரோகிளப், பயன்படுத்தி தூக்கி வீசும் மனநிலைக்கு மாறாக, மறுசுழற்சி அணுகுமுறையை முன்வைப்பதாக தெரிவிக்கிறது.

நீடித்த வடிவமைப்பில் கவனம் செலுத்தி, மீண்டும் பெறும் முயற்சியில் ஈடுபட்டு, கூட்டு செயல்பாட்டை ஊக்குவிப்பது, வாடிக்கையாளர்களை விழிப்புணர்வு பெற வைப்பது மூலம் டி2சி பிராண்ட்கள் கழிவுகள் குறைப்பதில் நல்ல பங்களிப்பு செய்ய முடியும். நாம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சூழலில் நம் குழந்தைகளுக்கு மறுசுழற்சி பயன்பாட்டை, பொறுப்பான நுகர்வை கற்றுத்தர வேண்டும் என்கிறார்.

வாய்ப்புகளும், சவால்களும்

இணை நிறுவனர்களின் ரூ.2 கோடி முதலீட்டில் நிறுவனம் துவங்கப்பட்டது, அதன் பிறகு, ரூ.25 கோடி மதிப்பீட்டில் ரூ.4.3 கோடி நிதி திரட்டியது. ஜூனில் விதைக்கு முந்தைய சுற்றில், ராமையா குழுமத்தின் ஸ்டார்ட் அப் பிரிவான ராமையா எவல்யூட் தலைமை வகித்தது.

இந்த நிதி சுற்றில், அக்சண்ட் கேபிட்டலின் தீபக் கவுடா, சிரக் ஷா (லாஸ் ஏஞ்சல்ஸ்), ஐசக் ரேயஸ் (பனமா), ஜூஸி கெமிஸ்டிரியிஜ் அமித் நானாவதி, கீர்த்தி குழுமத்தின் சஞ்சய் முனிர்தனா, தினேஷ் தலேரா: ஸ்ரீசரன், சஞ்சய் சுன்கு ( டிரிங்க் பிரைம்) உள்ளிட்ட ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கூட்டமையும் பங்கேற்றனர்.

நிறுவனம் தனது சேவைகளை விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளது. குழந்தைகளுக்கான கேரி காட், கார் சீட், பங்க் பெட், பொம்மைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இந்திய பொம்மைகள் சந்தை 2022 ல், 1.5 பில்லியன் டாலராக இருந்தது. இந்த சந்தை 2028ல் 3 பில்லியன் டாலராக வளரும் என IMARC குழும கணிப்பு தெரிவிக்கிறது. க்ரோகிளப் அடுத்த கட்ட நிதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

“எங்கள் பொருட்கள் பிரிவை விரிவாக்க அடுத்த சில மாதங்களில் நிதி திரட்டுவோம்,” என்கிறார் பிருத்வி.

எதிர்கால திட்டத்தை பொருத்தவரை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூர், பூனா, மும்பை, ஐதாராபாத் உள்ளிட்ட சந்தைகளில் 1,50,000 வாடிக்கையாளர்களை பெற விரும்புவதாக தெரிவிக்கிறார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *