Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

வீடியோ, பாட்காஸ்டிங் சேவையை ஏஐ துணையோடு மொழிபெயர்க்க உதவும்


இணையத்தில் சுவாரஸ்யமான வீடியோ அல்லது கட்டுரையை கண்டறிந்த பிறகு, அது புரியாத வேறு மொழியில் இருப்பது தெரிய வந்தால் ஏமாற்றமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது, ஆகாஷ் நிதி பி.எஸ் மற்றும் சாத்விக் ஜெகன்னாத் துவக்கியுள்ள ஏஐ சார்ந்த வீடியோ மொழிபெயர்ப்பு மேடையான விட்ரா.ஏஐ (Vitra.ai).

“இன்றைய உலகில், பில்லியன் டாலர் நிறுவனம் முதல் இன்ஸ்டாகிராம் செல்வாக்காளர்கள் வரை எல்லோரும் உள்ளடக்கத்தை உருவாக்குகின்றனர். ஆனால், இவர்களில் பலரும் மொழி தடையால் பரவலான பார்வையாளர்களை அடைய முடியாமல் போகிறது,” என்கிறார் விட்ரா.ஏஐ இணை நிறுவனர் சாத்விக் ஜெகன்னாத்.

20220ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், வாடிக்கையாளர்கள், வீடியோ, புகைப்படங்கள், இணையதளங்கள், பாட்காஸ்ட் உரைகள் போன்ற செழுமையான உள்ளடக்கத்தை, ஒரு கிளிக்கில் 75 மொழிகளில் மொழிபெயர்க்க உதவுகிறது. மனிதர்களால் செய்யப்படுவதைவிட, தனது சேவை 100 மடங்கு வேகமானது, 80 சதவீதம் மலிவானது என்கிறது நிறுவனம்.

நிறுவன மொழிபெயர்ப்பு மேடை, அரேபியம், வங்களாம், டச்சு, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் சேவை அளிக்கிறது. இந்நிறுவனம் முதன்மையான செய்தி, சமூக ஊடகம், வீடியோவில் கவனம் செலுத்தினாலும், கல்விநுட்பம், ஊடகம், நிதி நுட்பம், மருத்துவ நுட்பம் என பல்வேறு துறைகளில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

“பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதன் மூலம் வர்த்தகங்கள், செல்வாக்காளர்கள் மேலும் பலரைச் சென்றடைய வழி செய்கிறோம். மக்கள் தங்களுக்கு அறிமுகமான மொழியில் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறோம்,” என யுவர்ஸ்டோரியிடம் பேசிய ஜெகன்னாத் கூறுகிறார்.

மொழிபெயர்ப்பிற்கான உலக சந்தை 2023ல் 72.22 பில்லியன் டாலராக இருந்தது என்றும், 2028ல் இது 98.11 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி பி.எஸ் கூறுகிறார்.

யுவர்ஸ்டோரியின் முன்னணி ஸ்டார்ட் அப் மாநாடான ’டெக்ஸ்பார்க்ஸ்’ பெங்களூரு 2023ல் பங்கேற்ற விட்ரா.ஏஇ (Vitra.ai), இதை மகத்தான அனுபவம் என வர்ணிக்கிறது. இந்த நிகழ்வு தங்களுக்கான அங்கீகாரம், கற்றல் அனுபவத்தை அளித்ததாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

“டெக் 30 மேடை முதலீட்டாளர்கள், துறை வல்லுனர்கள், சக நிறுவனர்கள் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் எங்கள் ஏஐ சார்ந்த சேவையை காட்சி படுத்தியதோடு, உள்ளொலி நிறைந்த கருத்துக்களை பெற்று, எங்கள் உத்திகளை சீரமைக்கவும் உதவியது. நிகழ்வின் போது சந்தை போக்கு மற்றும் போட்டி சூழல் அடிப்படையில் பெறப்பட்ட இந்த புரிதல் எங்கள் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமைந்து, உலக தொழில்நுட்ப சூழலில் எங்கள் பயணத்தை வடிவமைப்பதாகவும் அமைந்தது,” என்கிறார் நிதி பி.எஸ்.

எப்படி செயல்படுகிறது?

Vitra.ai மூன்று சேவைகளை கொண்டுள்ளது. வீடியோ மொழிபெயர்ப்பு (translate.video), இணையதள மொழிபெயர்ப்பு (translate.website), புகைப்பட மொழிபெயர்ப்பு (translate.photo) ஆக அமைகின்றன. பயனாளிகளில் இவற்றில் தங்கள் தேவைக்கேற்ப, மொழிகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவையை டிராக் அண்ட் டிராப் முறையில் எளிதாக பயன்படுத்தலாம். கோடிங் திறன் தேவையில்லை.

“ஒரு பத்து நிமிட வீடியோவை சராசரியாக 5-6 நிமிடங்களில் மொழிபெயர்க்கலாம்” என்கிறார் நிதி.பிஎஸ்.

எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் உள்ளிட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் பரப்பில் இந்த ஸ்டார்ட் அப் கவனம் செலுத்துகிறது. செல்வாக்காளர்களைம் மையமாகக் கொண்ட பி2பி சாஸ் சேவையாக Translate.video அமைகிறது.

“இந்தியாவில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். உள்ளூர் மொழிகளில் தங்கள் உள்ளடக்கத்தை மாற்றி இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடைய விரும்பும் பெரிய மார்க்கெட்டிங் குழு கொண்ட நிறுவனங்கள் இவை. மேலும் பல மொழிகளிள் உள்ளடக்கத்தை அளித்து பரவலான பார்வையாளர்களை சென்றடைய விரும்பும் செல்வாக்காளர்களுடனும் (influencers) செயல்படுகிறோம்,” என்கிறார் ஜெகன்னாத்.

வழக்கமான மொழிபெயர்ப்பு சேவை போல் அல்லாமல், இந்த பெங்களூரு நிறுவனம் இயல்பான மொழுபெயர்ப்புக்காக பொருள் சூழல் உணர்ந்த இயந்திர சேவையை பயன்படுத்துகிறது. ஆட்டோ சஜெஷன், ஆட்டோ கரெக்‌ஷன் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறது.

குரல் பிரதியெடுப்பு திறன் கொண்ட குரல் குளோனிங் சொந்த நுட்பத்தையும் பெற்றுள்ளது. இந்த நுட்பம், மூல குரலை மொழிபெயர்ப்பின் போது தக்க வைக்கிறது. இது மிக நவீனமானது மற்றும் உலகில் முதல் முறையாக பயன்படுத்தபடுகிறது என்கிறார் ஜெகன்னாத்.

போட்டி பற்றி குறிப்பிடும் போது, டிரான்ஸ்பர்பக்ட், லயன்பிரிட்ஜ், வீலோகலைஸ் மற்றும் பேப்பர்கப், தேவ்நகரி, டப்வர்ஸ்.ஏஐ உள்ளிட்ட ஸ்டார்ட் அப்கள் இந்த பிரிவில் இருப்பதாக ஜெகன்னாத் கூறுகிறார்.

“மொழிபெயர்ப்பு பிரிவில் தீர்வு வழங்க முயற்சிக்கும் நிறுவனங்கள் சில இருக்கின்றன. (உதாரணம்- வீடியோ). ஆனால், செழுமையான உள்ளடக்கத்தை 75 மொழிகளில் மாற்றக்கூடிய ஒரே நிறுவனம் எங்களுடையது என்கிறார்.

முதல் ஆறு மாதங்களுக்கு சுய நிதியில் செயல்பட்ட நிறுவனம், After being 100x.vc மற்றும் Inflexor VC மூலம் நிதி திரட்டியுள்ளது. இதுவரை, 5,60,000 டாலர் நிதி திரட்டியுள்ளது.

“நிறுவனங்கள் பிரிவில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். செல்வாக்காளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து, கடந்த சில மாதங்களில் 40,000 பேர் பதிவு செய்துள்ளனர் என்கிறார்.

“செழுமையான ஊடக உள்ளடக்கத்திற்காக நாடப்படும் மேடையாக இருக்க விரும்புகிறோம். மொழி வரம்பை உடைத்து, இணையத்தை அனைவருக்கும் சாத்தியமானதாக்க விரும்புகிறோம்,” என எதிர்கால திட்டம் பற்றி கூறுகிறார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *