Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

5 ஆண்டுகளில் ரூ.160 கோடி வருவாய் – ஏர்கூலர் சந்தையில் முன்னேறும் நோவாமேக்ஸ்!

உலகம் முழுவதும் வெப்ப நிலை அதிகரிக்கும் சூழலில், செலவு குறைந்த ஏர் கூலர்களுக்கான தேவை அதிகரிக்கிறது. ஏர் கூலர்களுக்கான சந்தை தற்போதுள்ள 1.32 பில்லியன் டாலர் ( 2022) மதிப்பில் இருந்து 2029 ம் ஆண்டு வாக்கில் 2.74 பில்லியன் டாலராக உயரும் என மேக்ஸிமைஸ் மார்க்கெட் ஆய்வு தெரிவிக்கிறது.  

இந்த சந்தை தேவையை புரிந்து கொண்டு செயல்படும் நிறுவனமாக இந்தியாவில் நொய்டாவைச் சேர்த ‘நோவாமேக்ஸ்’ (Novamax) திகழ்கிறது. இதன் நிறுவனர் ஹர்ஷித் அகர்வல், ஏர்கூலர் நிறுவனங்கள் குறைந்த முதல் மத்திய வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறுகிறார். நிறுவனம் தரத்தை குறைக்காமல் வாங்கக் கூடிய விலையில் ஏர் கூலர்களை அளிப்பதன் மூலம் இந்த பிரிவை மனதில் கொண்டு செயல்படுகிறது.

நோவாமேக்சின் தனித்திறன் ரூ.11,500 முதல் ரூ.16,000 விலை கொண்ட பாலைவர ஏர் கூலர்களை விற்பனை செய்வதில் இருப்பதாக அகர்வால் கூறுகிறார். அதே நேரத்தில், ரூ,5000 விலை கொண்ட மாதிரிகளும் இருப்பதாகக் கூறுகிறார்.

சிம்பனி, கிராம்ப்டன், ஓரியண்ட், பஜாஜ் எல்கெடிர்கல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும், நோவாமேக்சின் விலை போட்டி மிக்கதாக இருப்பதாக அகர்வால் கூறுகிறார்.

தனிப்பட்ட கூலர்களை விட பெரிதாக இருக்கும் பாலைவர் கூலர்கள், தண்ணீர், மற்றும் வாயுவை கொண்டு சூழலை குளிர்ச்சியாக்குகிறது. செயல்திறன் மிக்கதாக இருந்தாலும் இவை அதிக இறைச்சல் கொண்டவை.

நோவாமேக்ஸ் கூலர்கள் எரிபொருள் சிக்கனம் மிக்கவை என்கிறார். ஏசி உடன் ஒப்பிடும் போது, நோவாமேக்ஸ் கூலர்கள் குறைந்த எரிசக்தியை பயன்படுத்துவதாகவும் சுற்றுச்சூழல் நட்பான தன்மை கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

“எங்கள் பொருட்களின் விலையை இ-காமர்ஸ் தளங்களில் வாடிக்கையாளர்கள் பரிசோதனை செய்து பார்த்தால், எங்கள் விலை குறைவு என்பதை உணரலாம். ரூ.3,000 அளவுக்கு வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாட்டை மீறி, தரத்தில் எந்த குறைவும் இல்லை,” என்று நோவாமேக்ஸ் மற்றும் போட்டியாளர்கள் தொடர்பாக எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய அகர்வால் கூறினார்.

முன்னணி இடம்

நோவாமேக்ஸ் 2019ம் ஆண்டு அறிமுகமானது. 2024 மார்ச் மாதவாக்கில் நிறுவனம் ரூ.160 கோடி வருவாய் பெற்றுள்ளது. பருவகாலத்தில் 2 லட்சம் கூலர்கள் விற்பனை செய்கிறது.

“2019ல் 20 ஆயிரம் கூலர்கள் விற்பனை செய்தோம். அடுத்த இரண்டு ஆண்டுகள் கோவிட் காரணமாக மோசமாக அமைந்தன. எங்கள் வர்த்தகம் முன்னேறவில்லை என்றாலும், குறையவில்லை. 2022 முதல் வர்த்தகம் அதிகரித்து ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யத்துவங்கினோம்,” என்கிறார் அகர்வால்.

நோவாமேக்ஸ் தற்போது ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் முதல் இடத்தை அடைய விரும்புவதாகவும் கூறுகிறார்.

“எங்கள் விற்பனை தனித்தன்மை தான் முக்கியமானது. போட்டி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் நம்பியிருக்கும் நிலையில் ஆய்வு முதல், வளர்ச்சி, உற்பத்தி என எல்லாவற்றையும் நாங்களே மேற்கொள்கிறோம்,” என்கிறார்.

மோட்டார், விசிறி, கூலர் உடல்பகுதி என எல்லாமே உள்ளூரில் தருவிக்கப்படுவதாகக் கூறும் அகர்வால் பம்ப் மற்றும் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறுகிறார்.

சவால்களும், எதிர்கால திட்டமும்

நோவாமேக்சின் வாரண்டி மற்றும் சேவை தனித்தன்மை வாய்ந்தது என்கிறார். இரண்டு பருவங்களுக்கு வாரண்டி அளிப்பதோடு, இந்தியா முழுவதும் 150 விநியோக மையங்கள், சேவை மையங்கள் கொண்டுள்ளன, என்கிறார்.

“விற்பனைக்கு பிந்தைய சேவை அளிக்கும் வெகு சில கூலர் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், எல்லா இடங்களிலும் சேவை அளிப்பது சவாலாக இருக்கிறது. பெரிய நகரங்களில் பிரச்சனை இல்லை என்கிறார்.

குறைந்த விலையில் தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்யும் பல அமைப்பு சாரா நிறுவனங்கள் இருப்பது சவாலானது என்கிறார்.

“அமைப்பு சாரா நிறுவனங்களின் போட்டி மிகவும் சவாலானது, ஏனெனில் அவர்கள் விற்கும் விலை மொத்த உற்பத்தி செலவை கூட ஈடு செய்யாது. தரம் அந்த அளவு மோசமாக இருக்கும்,” என்கிறார்.

சேவை வசதியை மேம்படுத்துவதோடு மேலும் பல மின்சாதன பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அகர்வால் கூறுகிறார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *