Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

கிராம மக்களின் மனநலன்: 15,000 பேருக்கு தீபிகா படுகோனின் அறக்கட்டளை உறுதுணை!

6 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் 15,000 பேருக்கு மன நலன் சார்ந்த சிகிச்சை அளித்து, அவர்களது வாழ்க்கையை மீட்டு கொடுத்து வருகிறது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் ‘லிவ் லவ் லாஃப்’ அறக்கட்டளை.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டநிலையில் கிராமத்தில் அங்கும் இங்கும் சுற்றி அலைந்து திரிந்தார். சில சமயங்களில் தன்னைத் தானே காயப்படுத்தி வந்துள்ளார். அவருடைய மோசமான நிலையால் குழந்தைகளையும் கவனித்து கொள்ளமுடியவில்லை.

அந்தப் பெண்ணுக்கு எவ்வித மனநல சிகிச்சை அளிக்கவேண்டும் என்றாலும் சென்னைக்கு 2-3 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. இதனால் குடும்பத்திற்கு மாதத்திற்கு 2,000 – 3,000 ரூபாய் செலவாகியது. நிதி நெருக்கடியின் காரணமாக, அவருக்கு மருந்து அளிப்பதையும் நிறுத்தினர். அவரது உடல்நிலை முன்பைவிட மோசமடைந்தது.

இந்நிலையிலே, நடிகை தீபிகா படுகோன் நிறுவிய ‘லிவ் லவ் லாஃப்’ (எல்எல்எல்) அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியது. சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள சுகாதார நிலையத்திலே அவருக்கு சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்பட்டன. முக்கிய மனநல ஆலோசனைகளையும் பெற்றார். அவரது உடல்நிலையும் மேம்பட்டது. அவர் முன்புபோல் வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு வந்தார்.

அத்துடன் அவர்களது பணியினை முடித்து கொள்ளவில்லை ‘லிவ் லவ் லாஃப்’. இயல்பான நிலைக்கு மீண்ட சசிகலாவின் பொருளாதார நிலையை உயர்த்தி அவருக்கான அடையாளத்தை உருவாக்கவும் வழிவகை செய்தது. அரசின் உதவி திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ.1,500 உதவித்தொகை கிடைக்க வழி செய்தனர். அத்துடன் ரூ.5,000 வழங்கி சொந்தமாகத் தொழில் தொடங்கவும் உதவிச் செய்தனர். 6 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களை சேர்ந்த 15,000 எல்எல்எல் பயனாளர்களில் சசிகலாவும் ஒருவர்.

2016-ம் ஆண்டு பெங்களூரை தளமாகக் கொண்ட லிவ் லவ் லாஃப் (எல்எல்எல்) அறக்கட்டளையை நடிகை தீபிகா படுகோன் நிறுவினார். இந்த அறக்கட்டளையானது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை அனுபவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் நம்பிக்கையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனநலம் தொடர்பான அவரது போராட்டங்களைப் பற்றியும், மனநலம் பற்றியும் தீபிகா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தீபிகாவின் சகோதரி அனிஷா படுகோன், மனநலத் துறையில் அமைப்பின் முயற்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார். இந்த அமைப்பானது விளிம்புநிலை சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

அனிஷாவின் கூற்றுப்படி, எல்எல்எல்-இன் திட்டங்கள் கிராமப்புறங்களில் ‘சரியான தகவல், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு, ஆதாரங்களுக்கான அணுகல் மற்றும் சிகிச்சையின் மலிவு’ ஆகிய மூன்று முக்கிய அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

யுவர் ஸ்டோரியால் பெண்களுக்கான முதன்மை நிகழ்வான ‘ஷீ ஸ்பார்க்ஸ் 2024‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிஷா, எல்எல்எல் அமைப்பு கிராமப்புற மக்களின் மன ஆரோக்கியத்தை இத்தனை ஆண்டுகளில் எவ்வாறாக மாற்றியுள்ளது என்பதை குறித்து பகிர்ந்தார்.

எல்எல்எல் அமைப்பின் பயனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மனநலம் குறித்த முக்கியமான மற்றும் சரியான தகவல்களை வழங்குவதற்காக, ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், துணை செவிலியர்கள் போன்ற சமூக பணியாளர்களுக்கு பயிற்சியை வழங்குகிறது. அவர்கள் பயனாளிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பின்தொடர்ந்து, அவர்களை வழிநடத்தி வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.

சசிகலாவின் விஷயத்தில், அவரை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதில் அவரது தாயார் முக்கிய பங்கு வகித்ததாக அனிஷா சுட்டிக்காட்டினார். அவர் பல்வேறு ஆதரவுக் குழு விவாதங்களில் கலந்து கொண்டு, பராமரிப்பாளர்களின் சாம்பியனாகவும் உள்ளார் என்றார். இத்திட்டம் 26,000 பராமரிப்பாளர்களையும் உருவாக்கியுள்ளது.

“எங்களது திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஏற்றவாறான இடத்தினை தேர்ந்தெடுக்கையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுகிறோம். திட்டத்திற்காக ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்போது மாவட்ட நிர்வாகத்துடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். மேலும் காலப்போக்கில், சமூகம் தன்னிறைவு பெறுகிறது.

நாங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாவாங்கேரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். பல்வேறு பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் இப்போது அது முழுமையாகத் தன்னிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை முடிந்தளவு விரிவுப்படுத்தி பலரது வாழ்க்கையை மாற்றுவதே எங்களது நோக்கம்” என்று பெருமிதத்துடன் உரையாற்றினார் அனிஷா.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *